என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பாசனத்திற்காக திறக்கப்பட்ட 1,300 கன அடி நீர் விளை நிலங்களுக்குள் புகுந்தது.
    • பொதுப்பணி துறையினர் தொடர்ந்து முகாமிட்டு இரவு, பகலாக சீரமிப்பு பணிகளை வேகமாக முடித்தனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாய விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த 10-ந் தேதி பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு என்ற இடத்தில் கீழ்பவானி கால்வாயின் 59-வது மைல் பகுதியில் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பாசனத்திற்காக திறக்கப்பட்ட 1,300 கன அடி நீர் விளை நிலங்களுக்குள் புகுந்தது.

    இதனால் தண்ணீர் புகுந்து 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் மூழ்கின. உடனடியாக பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டது. சம்பவ பகுதியை பார்வையிட்ட அமைச்சர் முத்துசாமி சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இதன்படி உடைந்த கட்டு மானங்களை அகற்றிவிட்டு புதிய கட்டுமானம் அமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரவு, பகலாக ஈடுபட்டனர்.

    கால்வாயின் வலது புறத்தில் இருந்து மழை நீர் இடது புறம் செல்வதற்காக கால்வாயி்ன் அடியில் அமைக்கப்பட்டிருந்த வடிகால் சுரங்க பாலத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாகவே இந்த உடைப்பு ஏற்பட்டது.

    அந்த கட்டுமானங்களை முழுமையாக இடித்து அகற்றி விட்டு சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. கரையின் இருபுறமும் 50 மீட்டர் நீளத்திற்கு சுவர் எழுப்பப்பட்டது. குழாய் பதித்து கான்கிரீட் அமைக்கப்பட்டது.

    பொதுப்பணி துறையினர் தொடர்ந்து முகாமிட்டு இரவு, பகலாக சீரமிப்பு பணிகளை வேகமாக முடித்தனர். இதனைத்தொடர்ந்து இன்று முதல் பவானிசாகர் அணையில் இருந்து மீண்டும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மின் நுகர்வோருக்கான பெயர் மாற்ற சிறப்பு முகாம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • மொத்தம் 404 மின் நுகர்வோர்களது விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    ஈரோடு:

    பெருந்துறை கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோருக்கான பெயர் மாற்ற சிறப்பு முகாம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் இந்திராணி தலைமை வகித்தார். இதில் மின் நுகர்வோர்களிடம் இருந்து மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பெயர் மாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    உரிய ஆவணங்களுடன் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. மொத்தம் 404 மின் நுகர்வோர்களது விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    இதில் செயற்பொறியாளர் ராமசந்திரன் உள்ளிட்ட மின் வாரிய அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • இதனால் பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் காட்சி அளிக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    தொடர்ந்து மழைப்பொழிவு இருந்ததால் அணையின் நீர்மட்டம் நேற்று 104.90 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து பவானி சாகர் அணைக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    இதன் காரணமாக இன்று காலை பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.95 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1,524 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 400 கன அடி உள்பட 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.

    இன்று மாலைக்குள் பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் காட்சி அளிக்கிறது.

    இதனையடுத்து பொதுப்பணித்துறையினர் உஷார் படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே கரையோர பகுதியில் இருக்கும் மக்கள் பாது காப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளனர்.

    • சுமித்ராவுக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது.
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமித்ரா மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த சதுமுகை முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சுந்தரி. இவர்களது மகள் சுமித்ரா (15). இவர் டி.என்.பாளையம் அருகே டி.ஜி.புதூரில் உள்ள சத்திரம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் சுமித்ராவுக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று காலை அரையாண்டு தேர்வு எழுத பள்ளிக்கு சென்ற சுமித்ராவின் உடல் நிலை மோசமானதால் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமித்ரா மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடோனுக்குள் சென்று சோதனை செய்தபோது மூட்டைகளுக்கு இடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
    • போலீஸ் விசாரணையில் குட்கா கடத்தல் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி புதிய பஸ் நிலையம் அருகே பட்டேல் தெருவில் உள்ள ஒரு குடோனில் மளிகை பொருட்கள் மூட்டைக்குள் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோவை மண்டல குற்ற தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இது குறித்து பெருந்துறை உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயலிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருடைய உத்தரவின் பேரில் சிவகிரி போலீசார் சம்பந்தப்பட்ட குடோனுக்கு நேரடியாக சென்று ரகசியமாக கண்காணித்தனர்.

    அப்போது குடோன் முன்பு சரக்கு வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த வேனில் இருந்து 3 பேர் மூட்டைகளை குடோனுக்குள் இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.

    உடனடியாக மறைந்திருந்த போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் குடோனுக்குள் சென்று சோதனை செய்தபோது வெங்காயம் மற்றும் அரிசி, உப்பு மூட்டைகளுக்கு இடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பான் மசாலா, குட்கா மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது.

    விமல் பாக்கு 51 கிலோ, கூலிப் 121 கிலோ, ஹான்ஸ் 415 கிலோ, கணேஷ் பாக்கு 50 கிலோ என மொத்தம் 640 கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும்.

    இதனையடுத்து 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சிவகிரி இளங்கோ தெருவை சேர்ந்த வேல்முருகன் (48), அவருடைய தம்பி சந்திரசேகர் (45), மற்றும் வேன் டிரைவர் தங்கராஜ் (55) ஆகியோர் என தெரிய வந்தது.

    இதில் இளங்கோ மற்றும் சந்திரசேகர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து சிவகிரி போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் குட்கா கடத்தல் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    இளங்கோவும், சந்திரசேகரும் அதேப் பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதால் மளிகை பொருட்களை வைப்பதற்காக பட்டேல் தெருவில் ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து உள்ளனர். அங்கு மளிகை பொருட்களை மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்திருந்தனர்.

    கர்நாடகாவில் இருந்து சரக்கு வாகனம் மூலம் குட்காவை வாங்கி வந்து குடோனில் வைத்துள்ளனர். சரக்கு வேன் டிரைவராக தங்கராஜ் இருந்துள்ளார்.

    கர்நாடகாவில் இருந்து மளிகை பொருட்களை வாங்கும் போது அப்படியே குட்காவையும் மூட்டை, மூட்டையாக வாங்கி வந்து அதனை வெங்காயம், அரிசி மூட்டைக்கு இடையில் பதுக்கி சரக்கு வாகனங்களில் ஏற்றி கொண்டு வந்துள்ளனர்.

    வழியில் இருக்கும் சோதனை சாவடிகளில் போலீசார் மேலோட்டமாக பார்க்கும் போது அரிசி, வெங்காயம் மூட்டை போன்று இருப்பதால் போலீசாரும் இதை கவனிக்கவில்லை.

    இதை சாதமாக்கி கொண்ட இளங்கோ, சந்திரசேகர் தொடர்ந்து இதேபோன்று குட்காவை கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்து சிவகிரியில் உள்ள குடோனில் பதுக்கி வைத்துள்ளனர்.

    பின்னர் பதுக்கி வைத்துள்ள குட்காவை சிவகிரியில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி உள்ளனர்.

    இந்த தகவலை அடுத்து சிவகிரி போலீசார் சிவகிரியில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பழைய பஸ் நிலையத்தில் அந்தோணி டென்னிஸ் (28), சிவகிரி கந்தசாமி பாளையத்தில் பாலசுப்பிரமணியன் (52), சிவகிரி அருகே வாழை தோட்டத்தில் மரியமுத்துசெல்வன் (36), கார வலசுவில் ஜெயமுருகன் (43), சிவகிரி அருகே ஆஞ்சூரில் அன்ன பாண்டியன் (47), ஜெயபாலன்(40) ஆகியோர் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவருக்கும் கொடுமுடி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த குட்கா கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து சிவகிரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனுமன் ஜெயந்தியையொட்டி வ.உ.சி.பூங்காவில் உள்ள மகா வீர ஆஞ்சநேயர் கோவிலில் திரளான பக்தர்கள் இன்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
    • இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்ச நேயரை வழிபட்டு சென்றனர்.

    ஈரோடு:

    அனுமன் ஜெயந்தியையொட்டி, ஈரோடு வ.உ.சி.பூங்காவில் உள்ள ஸ்ரீ மகா வீர ஆஞ்சநேயர் கோவிலில் திரளான பக்தர்கள் இன்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

    முன்னதாக கோவிலில் அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை அனுமனுக்கு கணபதி பூஜை மற்றும் அபிஷேகம் நடை பெற்றது. அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மூலவருக்கு திருமஞ்சனக் காப்பு சாத்தப்பட்டது.

    அதிகாலை 5 மணி முதல் ஸ்ரீ மகாவீர ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலி த்தார். இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்ச நேயரை வழிபட்டு சென்றனர்.

    இதை தொடர்ந்து இன்று மதியம் 1.30 மணிக்கு 1 லட்சத்து 8 வடமாலை சாற்றும் நிகழ்ச்சி நடை பெற்றது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஆஞ்ச நேயருக்கு வெள்ளி கவசம் சாத்தப்படுகிறது.

    பக்தர்களுக்கு ஆஞ்ச நேயர் வார வழிபாட்டு குழு சார்பில் பிரசாதமாக லட்டும், நாள் முழுவதும் அன்ன தானமும் வழங்க ப்பட்டது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கீதா, தக்கார் அருள்குமார் ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்கள் இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்து நின்று வழிபட்டனர்.

    இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் வழிபடுவதற்கு தனி வரிசையும், வழிபட்டு வெளியே செல்வதற்கு தனி வரிசையும் போட ப்பட்டிருந்தது. முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல கள்ளுக்கடை மேடு ஆஞ்ச நேயர் கோவி லிலும் அனுமன் ஜெயந்தியை யொட்டி திரளான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர். அனுமன் ஜெயந்தியை யொட்டி ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆஞ்ச நேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதே போல் கோட்டை பகுதியில் உள்ள பெருமாள் கோவில், சத்தி ரோட்டில் உள்ள கொங்கு பெருமாள் கோவில் உள்பட மாநகர் பகுதியில் உள்ள கோவி ல்களில் இன்று அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி கோபி செட்டிபாளையம் அமர்ந்த ராயர் கோவில் வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவி லில் இன்று காலை பால், தயிர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பாரியூர் ஆதி நாராயண பெருமாள், மூலவாய்க்கால் ஸ்ரீதேவி, பூதேவி கரிவரத ராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டு துளசி மாலை அலங் காரம் செய்யப்பட்டது.

    இதில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து ஆஞ்சநேயரை வழி பட்டு சென்றனர். இதை யடுத்து பக்தர்களுக்கு பிர சாதம் வழங்கப்பட்டது.

    மேலும் டி.என்.பாளை யம் அடுத்த கள்ளிப்பட்டி அருகேயுள்ள பெருமுகை ஊராட்சி சஞ்சீவராயன் பெருமாள் கோவிலுள்ள ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து முழு சந்தனக்காப்பு பூசப்பட்டு, பால், தயிர், இளநீர், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. 108 வடமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை உள்ளிட்ட மாலைகளும் அணிவிக்கபட்டது.

    இதையொட்டி ஆஞ்ச நேயரை தரிசிக்க அத்தாணி, பெருமுகை, கொண்டை யம்பாளையம், கள்ளி ப்பட்டி, கணக்கம்பாளையம், பங்களாப்புதூர், கோபி உள்ளிட்ட டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    அந்தியூர் கோட்டை அழகுராஜ பெருமாள், பேட்டை பெருமாள் கோவி லில் உள்ள ஆஞ்ச நேயருக்கு இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வட மாலை சாத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்த னர்.

    சத்தியமங்கலம் பெரிய கோவிலில் உள்ள ஆஞ்ச நேயர், அம்மாபேட்டை காவிரிக்கரையில் அமைந்து உள்ள ஜெய ஆஞ்ச நேயர் கோவிலில் இன்று காலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதையொட்டி ஏராள மான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த னர். அவர்களுக்கு பிரசாத மாக பொங்கல் மற்றும் சாதம் வழங்கப்பட்டது.

    மேலும் கவுந்தப்பாடி சந்தைபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவி லில் உள்ள ஆஞ்சநேயர் புளியம்பட்டி பழமையான கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அல ங்காரம் செய்யப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை ஈங்கூர் ரோட்டில் உள்ள செல்வ ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று காலை பால், தயிர், சந்தனம், விபூதி, உட்பட பல ேஹாம திரவியங்கள் மூலம் சிறப்பு அபிேஷகம் செய்த னர்.

    அதை தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை நடந்தது, இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், பக்த ர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்க ப்பட்டது.

    விழா எற்பாடுகளை சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் சிவக்குமார், பழனிவேலு ஆகியோர் தலைமையில் செய்திருந்தனர்.

    அதேபோல் ஈரோடு, பெருந்துறை, சென்னிமலை, பவானி, சித்தோடு, ஆப்பக் கூடல் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்ச நேயர் ேகாவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • சண்முகம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் சாம்பள்ளி மாசிலா பாளையம், அரசன்காடு பகுதியை சேர்ந்தவர் மலர்கொடி (36). இவரது கணவர் சண்முகம் (40). இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    சண்முகம் கடந்த ஒரு வருடமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் தங்கியிருந்து இருசக்கர வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் சண்முகம் வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் சம்பவத்தன்று போன் மூலமாக மலர் கொடியை தொடர்பு கொண்டு சண்முகம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும், அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

    மலர்கொடி மருத்துவமனைக்கு வந்து மருத்துவரிடம் விசாரித்த போது சண்முகம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து மலர்கொடி பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டி.ஜி.புதூரில் உள்ள தனியார் மண்டபத்தின் முன்பு நிறுத்தி இருந்து போது திருட் போனது.
    • வாகனத்தை திருடியது கணக்கம் பாளையம் பாரதி வீதியை சேர்ந்த நடராஜ் என்பது தெரியவந்தது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே உள்ள ஏளூர் மாதாகோயில் வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மொபட் கடந்த 5-ந் தேதி டி.ஜி.புதூரில் உள்ள தனியார் மண்டபத்தின் முன்பு நிறுத்தி இருந்து போது திருட் போனது.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசாரிடம் நாகராஜ் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நாகராஜின் மொபட் திருட்போன பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    இதில் வாகனத்தை திருடியது கணக்கம் பாளையம் பாரதி வீதியை சேர்ந்த நடராஜ் (52) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடராஜை கைது செய்து அவரிடம் இருந்த மொபட்டை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்த ரத்தினாள் (57). இவரது கணவர் முருகன் கிராம உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.

    சம்பவத்தன்று முருகன் சத்தியமங்கலம் சென்று விட்டு வீடு திரும்பிய போது டி.ஜி.புதூர் டாஸ்மாக் கடை அருகே தனது மொபட்டை நிறுத்தி விட்டு திரும்பி வந்து பார்க்கும் போது தனது மொபட்டை யாரோ எடுத்து சென்றுள்ளார்.

    அதிர்ச்சி அடைந்த முருகனும் அவரது மனைவியும் இது குறித்து விசாரித்ததில் மொபட்டை திருடி சென்ற நபர் டி.என்.பாளையம் 4-வது வார்டு பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பது தெரியவந்தது.

    இந்த திருட்டு சம்பவம் குறித்து முருகனின் மனைவி ரத்தினாள் பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ரஞ்சித் (25) என்பவரை பிடித்து கைது செய்து திருடப்பட்ட மொபட்டை பறிமுதல் செய்தனர்.

    • வாய்க்கால் சீரமைக்கும் பணியினை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டடார்.
    • மேலும் பவானிசாகர் அருகே சிப்காட் தொழிற் பேட்டை அமைக்கும் திட்டம் இல்லை.

    ஈரோடு:

    பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால் மேடு பகுதியில் கீழ்பவானி திட்ட பிரதான வாய்க்கால் வலது மற்றும் இடது கரையில் உடைப்பு ஏற்பட்டது.

    இந்த வாய்க்கால் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியினை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டடார். தொடர்ந்து அவர் பணி யினை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறு த்தினார்.

    அப்போது அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:

    பவானிசாகர் அணையில் இருந்து 2022-23-ம் ஆண்டு முதல்போக நஞ்சை பாசனத்திற்கு 1,03,500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் கடந்த 12.8.2022 முதல் 9-ந் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    விவசாயிகளின் கோரிக்கை யை ஏற்று கடந்த 9-ந் தேதி முதல் வரும் 29-ந் தேதி வரை 20 நாட்களுக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 10-ந் தேதி கீழ்பவானித்திட்ட பிரதான வாய்க்காலின் வலது கரையில் மழைநீர் வடிகால் பாலத்தின் அருகே சிறு பள்ளம் ஏற்பட்டது.

    சிறிது நேரத்தில் வலது கரை யில் நீர் கசிவு அதிகமாகி உடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பேரல் சேதமடைந்து இடது கரையில் உடைப்பு ஏற்பட்டு ஓடை வழியாக தண்ணீர் செல்லத் தொடங்கியது.

    இதையடுத்து முதல்-அமைச்சரின் அறிவுறுத்தல் படி சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொண்டு போர்கால அடிப்படையில் இரவு, பகலாக வாய்க்கால் உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    தற்போது 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுவிட்டது. சீரமைப்பு பணிகள் விரைவில் முழுமையாக முடிக்கப்படும்.

    இதையடுத்து பாசனத்திற்காக வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும். அடுத்த 3 நாட்களுக்குள் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லும் வகை யில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தண்ணீர் புகுந்த விவசாய விளைநிலங்கள் கண க்கெடுக்கப்பட்டு பாதிப்பை பொறுத்து இழப்பீடு வழங்கப்படும்.

    மேலும், விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப பயிர்களை காப்பாற்றும் நடவடிக்கை எடுக்கும் வகை யில் கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை மேற்கொள்ள ப்படும்.

    மேலும் பவானிசாகர் அருகே சிப்காட் தொழிற் பேட்டை அமைக்கும் திட்டம் இல்லை. சிப்காட் அமைப்ப தற்கான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்பட வில்லை. விவசாய நில ங்களை கையகப்படுத்தி சிப்காட் எப்போதும் அமைக்கப்படாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) உதயகுமார், உதவி பொறியாளர்கள் பவித்ரன், ஜெகதீஷ், சபரி நாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • சோகத்தில் இருந்து வந்த மாரப்ப கவுண்டர் சம்பவத்தன்று அதிகாலை திடீரென வாந்தி எடுத்துள்ளார்.
    • அவரது மகள் பூங்கொடி அவரிடம் விசாரித்தபோது களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொண்டப்ப நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த வர் மாரப்பகவுண்டர் (82). விவசாயி.

    கடந்த 1½ வருடங்களுக்கு முன் இவரது மனைவி இறந்துவிட்டார். அன்று முதல் சோகத்தில் இருந்து வந்த மாரப்ப கவுண்டர் சம்பவத்தன்று அதிகாலை திடீரென வாந்தி எடுத்துள்ளார்.

    அவரது மகள் பூங்கொடி அவரிடம் விசாரித்தபோது களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு சத்திமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த மாரப்ப கவுண்டர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாகவே தோப்பு வெங்கடாச்சலம் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
    • தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைய போவதாகவும் சமூக வளைதலங்களில் தகவல் வெளியானது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் தோப்பு வெங்கடாச்சலம். இவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வருவாய்த்துறை அமைச்சராக பணியாற்றினார்.

    பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 2 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் இவருக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை. இதையடுத்து சுயேட்சையாக போட்டியிட்டு கணிசமான ஓட்டுகளை பெற்றார்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.வில் இணைந்தார். மேலும் பெருந்துறை பகுதியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார்.

    தி.மு.க.வில் இணைந்தும் தோப்பு வெங்கடாச்சலத்துக்கு பதவி ஏதும் வழங்கப்படவில்லை. இதையடுத்து கடந்த சில நாட்களாகவே அவர் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். மேலும் அவர் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைய போவதாகவும் சமூக வளைதலங்களில் தகவல் வெளியானது.

    இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தற்போது வரை நான் தி.மு.க.வில் தான் இருந்து வருகிறேன். கடந்த சில நாட்களாக வேண்டும் என்றே சிலர் நான் பா.ஜனதாவில் இணைய போகிறேன் என்று தகவல் பரப்பி வருகின்றனர். நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது எனது தொகுதிக்காக அத்திக்கடவு-அவினாசி திட்டம், கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை கேட்டுப்பெற்றேன்.

    இதில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அத்திக்கடவு-அவினாசி திட்டம் தி.மு.க. அரசின் ஒத்துழைப்போடு நடந்து வருகிறது. மேலும் மாவட்ட அமைச்சரும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் தோப்பு வெங்கடாச்சலம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நாளை நான் பா.ஜனதாவில் இணைய போவதாக செய்தி வந்துள்ளதாக சிலர் என்னிடம் தெரிவித்தார்கள். இது உண்மைக்கு மாறானது. நான் தற்போது வரை தி.மு.க.வில் தான் இருந்து வருகிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • கல்லூரி மாணவி தற்கொலை குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரேமா (43). டெய்லர். இவரது கணவர் சிவபெருமாள். முறுக்கு வியாபாரி. இவர்களது மகள் பொற்கொடி (20). இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் அந்த கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன் விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த பொற்கொடி தனக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என்றும், மேலும் அடிக்கடி தாங்க முடியாத அளவுக்கு வயிற்று வலி ஏற்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அவரது தாய் பொற்கொடியை சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பினர்.

    இந்த நிலையில் தேர்வு விடுமுறைக்காக பொற்கொடி வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கினார். உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த பொற்கொடி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது தாய் பிரேமா மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×