என் மலர்
நீங்கள் தேடியது "Name Change Camp"
- மின் நுகர்வோருக்கான பெயர் மாற்ற சிறப்பு முகாம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- மொத்தம் 404 மின் நுகர்வோர்களது விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டது.
ஈரோடு:
பெருந்துறை கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோருக்கான பெயர் மாற்ற சிறப்பு முகாம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் இந்திராணி தலைமை வகித்தார். இதில் மின் நுகர்வோர்களிடம் இருந்து மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பெயர் மாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
உரிய ஆவணங்களுடன் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. மொத்தம் 404 மின் நுகர்வோர்களது விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டது.
இதில் செயற்பொறியாளர் ராமசந்திரன் உள்ளிட்ட மின் வாரிய அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.






