மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை

சோகத்தில் இருந்து வந்த மாரப்ப கவுண்டர் சம்பவத்தன்று அதிகாலை திடீரென வாந்தி எடுத்துள்ளார்.அவரது மகள் பூங்கொடி அவரிடம் விசாரித்தபோது களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.
மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொண்டப்ப நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த வர் மாரப்பகவுண்டர் (82). விவசாயி.

கடந்த 1½ வருடங்களுக்கு முன் இவரது மனைவி இறந்துவிட்டார். அன்று முதல் சோகத்தில் இருந்து வந்த மாரப்ப கவுண்டர் சம்பவத்தன்று அதிகாலை திடீரென வாந்தி எடுத்துள்ளார்.

அவரது மகள் பூங்கொடி அவரிடம் விசாரித்தபோது களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு சத்திமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த மாரப்ப கவுண்டர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com