என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கேசவன் போலியாக கிராம நிர்வாக அலுவலர் கையெழுத்து, தாசில்தார் கையெழுத்து போட்டு போலி ஆவணங்கள் தயாரித்து உள்ளார்.
    • போலி ஆவணங்களை கேசவன் ஈரோடு 2-ம் எண் குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்புவதற்காக வாகனங்களில் ஊழியர்கள் பணத்துடன் சென்றபோது அதனை 7 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்தது.

    இந்த கொள்ளை வழக்கில் 3-வது குற்றவாளியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த கேசவன் (26) என்பவர் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக அவரது மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் அந்த மோட்டார் சைக்கிளை திரும்ப எடுப்பதற்காக முயற்சிகள் அவர் மேற்கொண்டு வந்தார்.

    இதற்காக கேசவன் போலியாக கிராம நிர்வாக அலுவலர் கையெழுத்து, தாசில்தார் கையெழுத்து போட்டு போலி ஆவணங்கள் தயாரித்து உள்ளார். இந்த போலி ஆவணம் தயாரிப்பதற்காக கரூரை சேர்ந்த லட்சுமி என்பவர் உள்பட மேலும் 3 பேர் கேசவனுக்கு உதவி செய்துள்ளனர்.

    இந்நிலையில் போலி ஆவணங்களை கேசவன் ஈரோடு 2-ம் எண் குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். ஆவணங்களை சரி பார்த்தபோது அது போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கேசவனை பிடித்து விசாரித்தபோது போலி ஆவணங்கள் தயாரித்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து கேசவன் கைது செய்யப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த லட்சுமி கோவையில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.
    • மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 7-ந் தேதி வரை நடக்கிறது.

    8-ந்தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. 10-ந் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும்.

    வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இதேபோல்அ.தி.மு.க.வும் தேர்தலில் போட்டியிடுகிறது. இதற்காக போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.

    தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளரையும் அறிவித்துவிட்டது. நாம் தமிழர் கட்சியும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. டி.டி.வி. தினகரனும் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதே போல் சமத்துவ மக்கள் கட்சி தேர்தல் நிலைப்பாடு குறித்து இன்று அறிவிக்கிறது. பா.ம.க. போட்டியிடுவதில்லை என அறிவித்து விட்டது. பாரதிய ஜனதா கட்சி இன்னும் இரண்டு நாளில் தேர்தல் குறித்து நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளது.

    மக்கள் நீதி மய்யம் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்குமா என்று இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.

    இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 500 கட்டுப்பாட்டு கருவிகள், 500 வி.வி. பேட் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    இந்த எந்திரங்கள் சரியாக இயங்குகிறதா? ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா? என்பதை சரி பார்க்கும் பணி கடந்த 5 நாட்களாக ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கில் நடந்து வந்தது. நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதனைத் தொடர்ந்து சித்தோட்டில் உள்ள ஐ.ஆர்.டி. பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓட்டுப்பதிவு நேரத்தை, கொரோனா பரவல் இல்லாததால் மாற்றி அமைப்பது குறித்து, தேர்தல் ஆணையத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் கடிதம் அனுப்பி உள்ளார்.

    தமிழகத்தில் கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது கொரோனா பரவல் இருந்தது. இதனால், ஓட்டுப்பதிவு செய்ய வருவோர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வெள்ளை சுண்ணாம்பில் வட்டம் வரைந்து அதில் வந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.

    அதிகாரிகள், வாக்காளர்களுக்கு சானிடைசர், கிளவுஸ் வழங்கப்பட்டது. மாஸ்க் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர கொரோனா தொற்று பாதித்து, சிகிச்சை நிறைவு செய்து வந்தவர்களுக்கு அதற்கான பிரத்யோக ஆடை அணிவிக்க செய்து மாலை, 6 மணி முதல் 7 மணி வரை அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.அந்த தேர்தலில் கூடுதல் நேரம் ஆகும் என்பதால் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தேர்தல் நடந்தது.

    இதுதவிர 1,000 வாக்காளர்களுக்கு மேல் இருந்த ஓட்டுச்சாவடிகள் ஆண், பெண் என பிரிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் இல்லாததால், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 350 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    தற்போது இடைத்தேர்தலில் கிழக்கு தொகுதியில் 238 ஓட்டுச்சாவடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு ஓட்டுச்சாவடியில் அதிகப்பட்சமாக 1,400 வாக்காளர்கள் வரை ஓட்டுப்பதிவு செய்ய உள்ளனர்.

    அத்துடன் விரைவான ஓட்டுப்பதிவுக்காக, கொரோனா பரவலுக்கு முன்பு இருந்ததுபோல காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் ஓட்டுப்பதிவு நேரத்தை அனுமதிக்க கோரி மாவட்ட தேர்தல் அலுவலர் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார்.

    தேர்தல் ஆணையம் விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிடும் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் குறைகிறது.

    • ஹெலிகாப்டர் திடீரென தரை இறக்கப்பட்டதால் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து ஓடிவந்து பார்த்தனர்.
    • வானிலை சீரடைந்ததும் 11 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது.

    சத்தியமங்கலம்:

    வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டரில் இன்று காலை புறப்பட்டார். ஹெலிகாப்டரில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், அவரது உதவியாளர்கள், பைலட்டுகள் உள்பட 6 பேர் பயணம் செய்தனர்.

    ஹெலிகாப்டர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனப்பகுதியில் காலை 10.40 மணியளவில் வானில் சென்றது. அப்போது அந்த பகுதியில் கடுமையான மேக மூட்டம் காரணமாக வானிலை மோசமாக இருந்தது.

    இதையடுத்து பைலட் அவசர அவசரமாக ஹெலிகாப்டரை தரை இறக்க முயன்றார். பின்னர் ஒரு வழியாக கடம்பூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ள உக்கினியம் என்ற கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டது.

    ஹெலிகாப்டர் திடீரென தரை இறக்கப்பட்டதால் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து ஓடிவந்து பார்த்தனர். அப்போது தான் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டது தெரியவந்தது.

    பின்னர் வானிலை சீரடைந்ததும் 11 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது.

    இதே போல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு சென்ற ஹெலிகாப்டரும் மோசமான வானிலை காரணமாக கடம்பூர் மலைப்பகுதி அத்தியூர் என்ற பகுதியில் வயல்வெளியில் தரை இறங்கியது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
    • 1800 425 94890 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து விட்டது.

    இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் புகைப்படம், சிலைகள் பேனர்கள், சுவர் விளம்பரம் மறைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பணம் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் நிலை கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க 3 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    எனவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் குறித்த புகார்களை கீழ்கண்ட 6 குழுக்களிடமும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம். கண்காணிப்பு குழுவினர் மற்றும் அவர்களது தொடர்பு எண்கள் வருமாறு:-

    * பறக்கும் படை குழு எண் 1: 7094488017

    * பறக்கும் படை குழு எண் 2: 7094488049

    * பறக்கும் படை குழு எண் 3: 7094488072

    * நிலையான கண்காணிப்பு குழு எண் 1: 7094488076

    * நிலையான கண்காணிப்பு குழு எண் 2: 7094488982

    * நிலையான கண்காணிப்பு குழு எண் 3: 7094488983.

    மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இதனை 1800 425 94890 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.

    இதேபோல மாவட்டத் தேர்தல் அலுவலகம் அமைந்துள்ள கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை 1800 425 0424 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 0424 2256782, 0424 2267672 எனும் தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நாங்கள் எங்கள் அலுவலக புதிய முகவரியை ஏற்கனவே தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து இருந்தோம்.
    • தேர்தல் ஆணையம் வழங்கிய அனைத்துக்கட்சிகளின் முகவரிக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிப்பது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி அழைப்பு விடுத்து இருந்தார்.

    இந்த ஆலோசனை கூட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் துரைசாமி என்பவர் கலந்து கொண்டார்.

    இந்த கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அழைப்பு கிடைக்காததால் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மாவட்ட செயலாளர் முருகானந்தம் கூறும்போது, கலெக்டரிடம் இருந்து முறையான அழைப்பு கடிதம் வராததால் கலந்து கொள்ளவில்லை.

    நாங்கள் எங்கள் அலுவலக புதிய முகவரியை ஏற்கனவே தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து இருந்தோம். இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாததால் எங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்காது. விரைவில் தேர்தல் பணிகளை தொடங்குவோம் என்றார்.

    அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, தேர்தல் ஆணையம் வழங்கிய அனைத்துக்கட்சிகளின் முகவரிக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது என்று கூறினார்கள்.

    கட்சி அலுவலகம் தற்போது எடப்பாடி பழனிசாமி அணியினரின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • வீட்டின் வெளியே பெட்ரோல் குண்டு ஒன்று வெடித்து தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.
    • கோபி போலீசார் வெடிக்காமல் இருந்த ஒரு பெட்ரோல் குண்டை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 47). தொழிலாளி. மேலும் இவர் பிரதமர் மோடி பாசறையின் கோபி சட்ட மன்ற தொகுதி நிர்வாக குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

    இவரது மனைவி அய்ய ம்மாள். இவர்களுடை மகன்கள் விக்னேஷ், அடல் பிகாரி வாஜ்பாய், ராஜேஷ் மற்றும் சண்முகத்தின் தாய் சிவம்மாள் ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அவரது வீட்டில் குண்டு வெடிப்பது போல் சத்தம் கேட்டது.

    இந்த சத்தம் கேட்டதும் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் வெளி புறத்தில் பெட்ரோல் குண்டு ஒன்று வெடித்து தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் அதன் அருகே மற்றொரு பெட்ரோல் குண்டு வெடிக்காமல் கிடந்தது. இதையடுத்து அக்கம் பக்கம் பார்த்தனர். ஆனால் அங்கு யாரும் இல்லை.

    யாரோ மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி இருக்கலாம் என எண்ணினர். இதில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.

    இது குறித்து போலீசா ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோபி செட்டிபாளையம் போலீ சார் சம்பவ இடத்துக்கு வந்து வெடி க்காமல் இருந்த ஒரு பெட்ரோல் குண்டை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு குற்றப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நீலகண்டன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.

    மேலும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் போலீ சார் விசாரணை நடத்தினர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து முன் விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு காரணமா? என விசாரணை நடத்தினர்.

    மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    தடய அறிவியல் நிபுணர்க ளும் வந்து பதிவான பதிவுகளை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் வர வழைக்கப்பட்டது. அந்த நாய் ேமாப்பம் பிடித்து சண்முகத்தின் வீட்டை மட்டும் சுற்றி வந்தது. இதனால் போலீசார் சண்முகத்தின் வீட்டை சோதனை செய்தனர்.

    அப்போது அவரது வீட்டில் பெட்ரோல் குண்டுக்கு தேவையான திரி மற்றும் வெள்ளை துணியின் மீதி பாகங்கள் இருந்ததை போலீசார் கண்டு பிடித்து கைப்பற்றினர். இதனால் சண்முகம் மீது சந்தேகம் வலுத்தது.

    இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சண்முகம் தனது வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசியதை ஒப்பு கொண்டார்.

    தொடர்ந்து நடத்திய விசா ரணையில் சண்முகத்துக்கும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    அதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்- மனைக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. மேலும் அய்ய ம்மாளின் உறவினர்களும் சண்முகத்திடம் தகராறு செய்தனர்.

    இதனால் மனைவி மற்றும் அவரது உறவின ர்களை பழி வாங்குவதற்காக அவர்களை வழக்கில் சிக்க வைப்பதற்காக சண்முகம் அவரே வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசியது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் மீது அமைதிக்கு குந்தகம் விளை வித்தல், வெடி பொருட்கள் வைத்திருத்தல் மற்றும் வெடி பொருட்கள் அசம்பா வித நடத்தை ஆகிய 3 பிரிவு களில் வழக்கு பதிவு செய்து போலீசார் சண்முகத்தை கைது செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட சண்முகத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் கிளையில் அடைத்தனர்.

    • காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.18 அடியாக உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 722 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு, மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாகவே அனைத்து வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையில் இருந்து 2-ம் போக புஞ்சை பாசனத்தி ற்காக கீழ்ப்பவானி வாய்க்கா லுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.18 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 722 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்காலுக்கு 1800 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 1000 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் 2950 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வருகிறது.

    • மாயாற்றில் முதலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    • ஆற்றில் நீண்ட நேரம் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்டம் இருந்து வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் இருந்து வரும் தண்ணீர் மாயாறு, தெங்கு மரகடா வழியாக பவானிசாகர் அணைக்கு வருகிறது.

    இந்த நிலையில் மாயாறு வனப்பகுதிகளில் யானை உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வரு கிறது. மேலும் மாயாற்றில் ஒரு சில பகுதிகளில் முதலை கள் இருப்பதாகவும் கூற ப்படுகிறது.

    மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வன சரகங்கள் உள்ளன. இதில் பவானிசாகர் வனச்சரக த்திற்கு உட்பட்ட தெங்குமரகடா பகுதியில் பவானி சாகர் அணை நீர் பிடிப்பு பகுதியான மாயாற்றை கடந்து தான் கள்ளம்பாளையம் தெங்குமரகடா உள்ளிட்ட கிராமங்களுக்கு பரிசலில் செல்ல முடியும்.

    இந்நிலையில் கள்ளம்பாளையம் பகுதியில் பொதுமக்கள் ஆற்றைக் கடக்கும் போது அங்கு பெரிய முதலை ஒன்று படுத்து இருப்பதை கண்ட னர்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் தங்களது செல்போனில் ஆபத்தை உணராமல் படம் பிடிக்க ஆரம்பித்தனர். அங்கு சுற்றி கொண்டு இருந்த முதலை சிறிது நேரத்துக்கு பிறகு மாயாற்றில் இறங்கி சென்றது.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது,

    மாயாற்றில் ஒரு சில இடங்களில் முதலைகள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. தற்போது மாயாற்றில் முதலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    எனவே கள்ளம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் மாயாற்றை கடந்து செல்லும் போது மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும்.

    மேலும் தெங்கு மரகடா மற்றும் கள்ளம்பாளையம் பகுதி பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆற்றை கடக்க வேண்டும்.

    மேலும் குளிக்கும் போது அதிக கவனத்துடன் குளிக்க வேண்டும். மேலும் ஆற்றில் நீண்ட நேரம் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வனப்பகுதிகளில் இருந்து வெளியேறிய காட்டு பன்றிகள் பண்ணாரி சோதனை சாவடி பகுதியில் கூட்டமாக சுற்றி திரிகிறது.
    • கூர்மையான கொம்புடன் சுற்றும் காட்டு பன்றிகளால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவை அடிக்கடி ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறிய ஏராளமான காட்டு பன்றிகள் தற்போது பண்ணாரி சோதனை சாவடி பகுதியில் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகிறது.

    இந்த காட்டுபன்றிகள் சாலைகளில் அங்கும், இங்குமாக சுற்றி திரிவதால்திம்பம் மலைப்பகுதிக்கு செல்லும்வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ேமலும் கூர்மையான கொம்புடன் சுற்றும் காட்டு பன்றிகளால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே இந்தபகுதியில்சுற்றி திரியும் காட்டு பன்றிகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்று பண்ணாரி சோதனை சாவடி போலீசார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்த காட்டு பன்றிகளால் பண்ணாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    எனவே ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்பே இந்த காட்டு பன்றிகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    ஈங்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி நாளை நடக்கிறது.

    ஈரோடு:

    ஈங்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி நாளை (25-ந் தேதி) நடக்கிறது.

    எனவே பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூர், பாலப்பாளையம்,

    மு.பிடாரியூர் வடக்குப்பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்.எஸ், பெருந்துறை ஹவுசிங்யுனிட் ஆகிய அனைத்து பகுதிகளிலும்

    காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    • பணியாளர்கள் வனப்பகுதிக்குள் வாலிபர் ஒருவர் வேப்ப மரத்தில் தூக்குபோட்டு இறந்து பிணமாக தொங்கியதை பார்த்துள்ளனர்.
    • இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் படிக்கட்டு பாதையில் ஆத்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள படிக்கட்டு பகுதியில் கோவிலின் கட்டுமான பணியாளர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அங்குள்ள வனப்பகுதியில் செல்போன் மணி அடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அந்த பணியாளர்கள் வனப்பகுதிக்குள் சென்று பார்த்த போது அங்கு சுமார் 25 வயதுடைய வாலிபர் ஒருவர் வேப்ப மரத்தில் தூக்கு போட்டு இறந்து பிணமாக தொங்கியதை பார்த்துள்ளனர்.

    பின்னர் அவர்கள் சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தூக்கில் தொங்கிய வாலிபரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அந்த வாலிபர் யார்? எந்த ஊர்? எதற்காக இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் நேற்று முன்தினம் மாலையில் பக்தர் ஒருவர் படிக்கட்டு வழியாக சென்னிமலை முருகன் கோயிலுக்கு நடந்து சென்றுள்ளார்.

    அப்போது படிக்கட்டு பாதையில் உள்ள ஆத்தி விநாயகர் கோவிலின் முன்பு ஒரு பை கிடந்துள்ளது. அந்த பை யாருடையது என தெரியாததால் அந்த பையை அவர் கோவில் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.

    அந்த பை தூக்குபோட்டு இறந்த வாலிபர் கொண்டு வந்த பையாக இருக்கலாம் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை பெருந்துறை போலீசார் தேடி வந்தனர்.
    • 2 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை, நால்ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையை பரமசிவம் (வயது 58) என்பவர் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். கடையின் முன் பகுதியில் இரவு நேர காவலாளி மட்டும் இருந்துள்ளார்.

    நள்ளிரவு கடையின் பின்பகுதியில் மர்ம நபர்கள் துளையிட்டு நகைக்கடைக்குள் சென்று நகை வைத்திருக்கும் லாக்கர் அறையை திறக்க முயன்றனர்.

    அப்பொழுது அலாரம் திடீரென ஒலித்தது. இதனால் நகைக் கடை க்குள் வந்த மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். அலாரம் அடிப்பதை கண்ட காவலாளி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பெருந்துறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், பெருந்துறை ஏ.எஸ்.பி. கவுதம்கோயல், இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொ ண்டனர்.

    இதனையடுத்து தனிப்படைகள் அமைத்து நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை பெருந்துறை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கேமிராவில் பதிவான உருவங்களை வைத்து தேடி வந்தனர்.

    இந்நிலையில் பெருந்துறை குன்னத்தூர் ரோடு, மருத்துவக் கல்லூரி யின் அருகே அமைந்துள்ள மேம்பாலத்தின் அருகில் சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்று கொண்டு இருப்பதாக பெருந்துறை போலீசார் தகவல் கிடைத்தது.

    போலீசார் அங்கு சென்று அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் பெருந்துறை நகைக்கடையில் துளையிட்டு கொள்ளையடிக்க முயன்ற விவரத்தை ஒப்புக்கொண்டனர்.

    மேலும் அவர்களை விசாரிக்கையில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே காட்டாண்டி குப்பம் பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 47), விழுப்புரம் மாவட்டம், வளவனூர் பகுதியை சேர்ந்த வேலன் (வயது 45) என்பது தெரிய வந்தது.

    பின்னர் அவர்கள் 2 பேரையும் பெருந்துறை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.

    ×