என் மலர்
நீங்கள் தேடியது "ஈரோடு இடைத்தேர்தல்"
- ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.
- மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 7-ந் தேதி வரை நடக்கிறது.
8-ந்தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. 10-ந் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும்.
வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல்அ.தி.மு.க.வும் தேர்தலில் போட்டியிடுகிறது. இதற்காக போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளரையும் அறிவித்துவிட்டது. நாம் தமிழர் கட்சியும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. டி.டி.வி. தினகரனும் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதே போல் சமத்துவ மக்கள் கட்சி தேர்தல் நிலைப்பாடு குறித்து இன்று அறிவிக்கிறது. பா.ம.க. போட்டியிடுவதில்லை என அறிவித்து விட்டது. பாரதிய ஜனதா கட்சி இன்னும் இரண்டு நாளில் தேர்தல் குறித்து நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளது.
மக்கள் நீதி மய்யம் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்குமா என்று இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 500 கட்டுப்பாட்டு கருவிகள், 500 வி.வி. பேட் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த எந்திரங்கள் சரியாக இயங்குகிறதா? ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா? என்பதை சரி பார்க்கும் பணி கடந்த 5 நாட்களாக ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கில் நடந்து வந்தது. நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து சித்தோட்டில் உள்ள ஐ.ஆர்.டி. பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓட்டுப்பதிவு நேரத்தை, கொரோனா பரவல் இல்லாததால் மாற்றி அமைப்பது குறித்து, தேர்தல் ஆணையத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் கடிதம் அனுப்பி உள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது கொரோனா பரவல் இருந்தது. இதனால், ஓட்டுப்பதிவு செய்ய வருவோர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வெள்ளை சுண்ணாம்பில் வட்டம் வரைந்து அதில் வந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.
அதிகாரிகள், வாக்காளர்களுக்கு சானிடைசர், கிளவுஸ் வழங்கப்பட்டது. மாஸ்க் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர கொரோனா தொற்று பாதித்து, சிகிச்சை நிறைவு செய்து வந்தவர்களுக்கு அதற்கான பிரத்யோக ஆடை அணிவிக்க செய்து மாலை, 6 மணி முதல் 7 மணி வரை அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.அந்த தேர்தலில் கூடுதல் நேரம் ஆகும் என்பதால் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தேர்தல் நடந்தது.
இதுதவிர 1,000 வாக்காளர்களுக்கு மேல் இருந்த ஓட்டுச்சாவடிகள் ஆண், பெண் என பிரிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் இல்லாததால், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 350 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
தற்போது இடைத்தேர்தலில் கிழக்கு தொகுதியில் 238 ஓட்டுச்சாவடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு ஓட்டுச்சாவடியில் அதிகப்பட்சமாக 1,400 வாக்காளர்கள் வரை ஓட்டுப்பதிவு செய்ய உள்ளனர்.
அத்துடன் விரைவான ஓட்டுப்பதிவுக்காக, கொரோனா பரவலுக்கு முன்பு இருந்ததுபோல காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் ஓட்டுப்பதிவு நேரத்தை அனுமதிக்க கோரி மாவட்ட தேர்தல் அலுவலர் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார்.
தேர்தல் ஆணையம் விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிடும் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் குறைகிறது.
- வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் ஆகியவை வாகனங்களில் வாக்குச்சாவடிக்கு எடுத்து செல்ல உள்ளனர்.
- ஓட்டுப்பதிவு எந்திரத்துடன் ஓட்டுச்சாவடியில் பயன்படுத்தப்படும் பொருட்களும் கொடுத்து அனுப்புவர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது.
நாளை காலை வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் ஆகியவை வாகனங்களில் வாக்குச்சாவடிக்கு எடுத்து செல்ல உள்ளனர்.
அவற்றுடன் அந்தந்த வாக்குசாவடியில் பணி செய்யும் அலுவலர்களும் உடன் செல்வார்கள். அவர்களிடம், ஓட்டுப்பதிவு எந்திரத்துடன் ஓட்டுச்சாவடியில் பயன்படுத்தப்படும் பொருட்களும் கொடுத்து அனுப்புவர். அதற்காக ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் 238 ஓட்டுச்சாவடிக்கும் தனித்தனியே பென்சில், ரப்பர், பேனா, பசை, ஸ்டேப்ளர், ஸ்டேப்ளர் பின், சிறிய மற்றும் பெரிய பிளாஸ்டிக் டிரே, பிளாஸ்டிக் டிரம், குப்பைகளை போடுவதற்கான பிளாஸ்டிக் பக்கெட், சிறிய கயிறு, நூல், சீல் வைக்கத் தேவையான பொருட்கள், ஓட்டுப்பெட்டிகளை மறைத்து வைக்க பயன்படுத்தப்படும் பிரத்யேக அட்டை என 81 வகையான பொருட்களை சாக்கிலும், பெரிய டிரம்மிலும் போட்டு தயார் நிலையில் வைத்துள்ளனர்.
- 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
- ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் நடத்தல் விதிமுறை உடனடியாக அமலுக்கு வந்தது. இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 636 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 760 பெண் வாக்காளர்களும், 37 மூன்றாம் பாலினத்தினரும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 636 வாக்காளர்கள் உள்ளனர். 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஈரோடு கலெக்டர் அலுவலகத்திலும், மாநகராட்சி அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படும். மேலும், சி-விஜில் செயலி மூலமாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். 1950 என்ற இலவச தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தேர்தல் நடத்தை விதிமுறை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மற்ற தொகுதிகளில் விதிமுறைகள் அமலுக்கு வராது. தேர்தலில் விதிமீறல் ஏற்படுவதை தடுக்க 3 தேர்தல் பறக்கும் படைகள், 3 நிலை கண்காணிப்பு குழுக்கள், ஒரு வீடியோ கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ பார்வையாளர் குழு, ஒரு தணிக்கை குழு என மொத்தம் 5 வகையான குழுக்கள் செயல்படுகின்றன.
இதில் நிலை கண்காணிப்பு குழு மட்டும் 10-ந் தேதி முதல் செயல்படும். மற்ற குழுக்கள் தற்போது இருந்தே செயல்பாட்டுக்கு வந்துவிட்டன.
தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை கொண்டு செல்லக்கூடாது. அப்படி ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும்.
கடந்த முறை மாட்டுச்சந்தைக்கு வியாபாரிகள் கொண்டு வந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான பிரச்சனை ஏற்பட்டது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்குட்பட்டு வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






