என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஈரோடு கோர்ட்டில் போலி ஆவணங்கள் கொடுத்த வாலிபர் கைது
    X

    ஈரோடு கோர்ட்டில் போலி ஆவணங்கள் கொடுத்த வாலிபர் கைது

    • கேசவன் போலியாக கிராம நிர்வாக அலுவலர் கையெழுத்து, தாசில்தார் கையெழுத்து போட்டு போலி ஆவணங்கள் தயாரித்து உள்ளார்.
    • போலி ஆவணங்களை கேசவன் ஈரோடு 2-ம் எண் குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்புவதற்காக வாகனங்களில் ஊழியர்கள் பணத்துடன் சென்றபோது அதனை 7 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்தது.

    இந்த கொள்ளை வழக்கில் 3-வது குற்றவாளியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த கேசவன் (26) என்பவர் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக அவரது மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் அந்த மோட்டார் சைக்கிளை திரும்ப எடுப்பதற்காக முயற்சிகள் அவர் மேற்கொண்டு வந்தார்.

    இதற்காக கேசவன் போலியாக கிராம நிர்வாக அலுவலர் கையெழுத்து, தாசில்தார் கையெழுத்து போட்டு போலி ஆவணங்கள் தயாரித்து உள்ளார். இந்த போலி ஆவணம் தயாரிப்பதற்காக கரூரை சேர்ந்த லட்சுமி என்பவர் உள்பட மேலும் 3 பேர் கேசவனுக்கு உதவி செய்துள்ளனர்.

    இந்நிலையில் போலி ஆவணங்களை கேசவன் ஈரோடு 2-ம் எண் குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். ஆவணங்களை சரி பார்த்தபோது அது போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கேசவனை பிடித்து விசாரித்தபோது போலி ஆவணங்கள் தயாரித்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து கேசவன் கைது செய்யப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த லட்சுமி கோவையில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×