search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "who attempted to rob"

    • நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை பெருந்துறை போலீசார் தேடி வந்தனர்.
    • 2 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை, நால்ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையை பரமசிவம் (வயது 58) என்பவர் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். கடையின் முன் பகுதியில் இரவு நேர காவலாளி மட்டும் இருந்துள்ளார்.

    நள்ளிரவு கடையின் பின்பகுதியில் மர்ம நபர்கள் துளையிட்டு நகைக்கடைக்குள் சென்று நகை வைத்திருக்கும் லாக்கர் அறையை திறக்க முயன்றனர்.

    அப்பொழுது அலாரம் திடீரென ஒலித்தது. இதனால் நகைக் கடை க்குள் வந்த மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். அலாரம் அடிப்பதை கண்ட காவலாளி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பெருந்துறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், பெருந்துறை ஏ.எஸ்.பி. கவுதம்கோயல், இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொ ண்டனர்.

    இதனையடுத்து தனிப்படைகள் அமைத்து நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை பெருந்துறை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கேமிராவில் பதிவான உருவங்களை வைத்து தேடி வந்தனர்.

    இந்நிலையில் பெருந்துறை குன்னத்தூர் ரோடு, மருத்துவக் கல்லூரி யின் அருகே அமைந்துள்ள மேம்பாலத்தின் அருகில் சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்று கொண்டு இருப்பதாக பெருந்துறை போலீசார் தகவல் கிடைத்தது.

    போலீசார் அங்கு சென்று அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் பெருந்துறை நகைக்கடையில் துளையிட்டு கொள்ளையடிக்க முயன்ற விவரத்தை ஒப்புக்கொண்டனர்.

    மேலும் அவர்களை விசாரிக்கையில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே காட்டாண்டி குப்பம் பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 47), விழுப்புரம் மாவட்டம், வளவனூர் பகுதியை சேர்ந்த வேலன் (வயது 45) என்பது தெரிய வந்தது.

    பின்னர் அவர்கள் 2 பேரையும் பெருந்துறை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.

    ×