search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "detective sniffer dog"

    • வீட்டின் வெளியே பெட்ரோல் குண்டு ஒன்று வெடித்து தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.
    • கோபி போலீசார் வெடிக்காமல் இருந்த ஒரு பெட்ரோல் குண்டை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 47). தொழிலாளி. மேலும் இவர் பிரதமர் மோடி பாசறையின் கோபி சட்ட மன்ற தொகுதி நிர்வாக குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

    இவரது மனைவி அய்ய ம்மாள். இவர்களுடை மகன்கள் விக்னேஷ், அடல் பிகாரி வாஜ்பாய், ராஜேஷ் மற்றும் சண்முகத்தின் தாய் சிவம்மாள் ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அவரது வீட்டில் குண்டு வெடிப்பது போல் சத்தம் கேட்டது.

    இந்த சத்தம் கேட்டதும் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் வெளி புறத்தில் பெட்ரோல் குண்டு ஒன்று வெடித்து தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் அதன் அருகே மற்றொரு பெட்ரோல் குண்டு வெடிக்காமல் கிடந்தது. இதையடுத்து அக்கம் பக்கம் பார்த்தனர். ஆனால் அங்கு யாரும் இல்லை.

    யாரோ மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி இருக்கலாம் என எண்ணினர். இதில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.

    இது குறித்து போலீசா ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோபி செட்டிபாளையம் போலீ சார் சம்பவ இடத்துக்கு வந்து வெடி க்காமல் இருந்த ஒரு பெட்ரோல் குண்டை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு குற்றப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நீலகண்டன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.

    மேலும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் போலீ சார் விசாரணை நடத்தினர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து முன் விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு காரணமா? என விசாரணை நடத்தினர்.

    மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    தடய அறிவியல் நிபுணர்க ளும் வந்து பதிவான பதிவுகளை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் வர வழைக்கப்பட்டது. அந்த நாய் ேமாப்பம் பிடித்து சண்முகத்தின் வீட்டை மட்டும் சுற்றி வந்தது. இதனால் போலீசார் சண்முகத்தின் வீட்டை சோதனை செய்தனர்.

    அப்போது அவரது வீட்டில் பெட்ரோல் குண்டுக்கு தேவையான திரி மற்றும் வெள்ளை துணியின் மீதி பாகங்கள் இருந்ததை போலீசார் கண்டு பிடித்து கைப்பற்றினர். இதனால் சண்முகம் மீது சந்தேகம் வலுத்தது.

    இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சண்முகம் தனது வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசியதை ஒப்பு கொண்டார்.

    தொடர்ந்து நடத்திய விசா ரணையில் சண்முகத்துக்கும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    அதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்- மனைக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. மேலும் அய்ய ம்மாளின் உறவினர்களும் சண்முகத்திடம் தகராறு செய்தனர்.

    இதனால் மனைவி மற்றும் அவரது உறவின ர்களை பழி வாங்குவதற்காக அவர்களை வழக்கில் சிக்க வைப்பதற்காக சண்முகம் அவரே வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசியது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் மீது அமைதிக்கு குந்தகம் விளை வித்தல், வெடி பொருட்கள் வைத்திருத்தல் மற்றும் வெடி பொருட்கள் அசம்பா வித நடத்தை ஆகிய 3 பிரிவு களில் வழக்கு பதிவு செய்து போலீசார் சண்முகத்தை கைது செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட சண்முகத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் கிளையில் அடைத்தனர்.

    ×