என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மாவட்டத் தேர்தல் அலுவலர் கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரின் கையெழுத்து அடங்கிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
    • இன்றும், நாளையும் இந்த பணி நடைபெறும் என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படை, வாக்குச்சாவடிகளை கண்காணித்தல், வேட்பு மனுக்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மாநகராட்சி, வருவாய், பள்ளி கல்வித்துறை என 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது.

    மாவட்டத் தேர்தல் அலுவலர் கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரின் கையெழுத்து அடங்கிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இன்றும், நாளையும் இந்த பணி நடைபெறும் என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    மதியம், தனசேகர் வசித்து வரும் வீட்டின் உரிமையாளரின் மருமகள் செல்போன் மூலமாக தனசேகரைத் தொடர்பு கொண்டு வீட்டில் ஹாலில் உள்ள பேனில், கவுசல்யா தூக்கு போட்டுக் கொண்டதாக கூறினார்.

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம், பவானி, காளிங்கராயன் பாளையம், மணக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர் (28). பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.

    இவர் தனது மாமா மகள் கவுசல்யா (24) என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் தனசேகர் நேற்று முன் தினம் வேலைக்கு சென்றுவிட்டார். அன்று மதியம், தனசேகர் வசித்து வரும் வீட்டின் உரிமையாளரின் மருமகள் செல்போன் மூலமாக தனசேகரைத் தொடர்பு கொண்டு வீட்டில் ஹாலில் உள்ள பேனில், கவுசல்யா தூக்கு போட்டுக் கொண்டதாக கூறினார்.

    பின்னர், தனசேகர் வருவதற்குள் அக்கம் பக்கத்தினர் கவுசல்யாவை மீட்டு காளிங்கராயன்பாளை யத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த னர்.

    பின்னர், உயர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக் கல்லூரிக்கு சென்றுள்ளார்.

    அங்கு கவுசல்யாவை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரி வித்தார்.

    இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    கடந்த சில நாட்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவ தால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    ஈரோடு

    ஈரோடு, மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவ தால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் அணையில் இருந்து இரண்டாம் போக புஞ்சை பாசனத்திற்காக கீழ்ப்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் மேலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 99.92 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 728 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்காலுக்கு 1800 கன அடியும், தடப்ப ள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 1000 கன அடியும்,

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடியும் என மொத்தம் 2950 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வருகிறது. 

    • சம்பவத்தன்று நள்ளிரவு, தான் எலிபேஸ்ட்டை தின்று–விட்டதாக திவ்யா தனது பெற்றோரிடம் கூறி–யுள்ளார்.

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம், கொடுமுடி, காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கீதாமணி (49). இவரது மகள் திவ்யா (29).

    இவருக்கு, கொடுமுடி, பூசாரிபாளையம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவரு–டன் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. தேவராஜ், கொம்பனை–புதூரில் டீ கடை வைத்து–ள்ளார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் தனக்கும், தனது கணவருக்கும் சண்டை ஏற்பட்டுவிட்டதாக தனது பெற்றோருக்கு திவ்யா கடந்த 23-ந் தேதி தகவல் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, அவரது பெற்றோர் திவ்யாவை அவர்களது வீட்டுக்கு அழைத்துச் சென்று–விட்டனர். இந்த நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு, தான் எலிபேஸ்ட்டை தின்று–விட்டதாக திவ்யா தனது பெற்றோரிடம் கூறி–யுள்ளார்.

    அவரை உடனடியாக கொடுமுடி அரசு மருத்துவ–மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கரூர் அரசு மருத்து–வக் கல்லூரி மருத்துவ–மனையில் சேர்த்துள்ளனர்.

    அதைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக கடந்த 27-ந் தேதி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திவ்யா பரிதாப–மாக உயிரிழந்தார். இது–குறித்து கீதாமணி அளித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீ–சார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தாய் சுசீலா (70). கடந்த 8 வருடங்களாக நோயால் பாதிக்கப்பட்டு
    • கடந்த 25-ந் தேதி சுசீலா, மகள் கவிதா வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம், சென்னிமலை, அர்த்தனாரி–பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (52). கூலித் தொழிலாளி. இவரது தந்தை மணி. கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார்.

    இவரது தாய் சுசீலா (70). கடந்த 8 வருடங்களாக நோயால் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ–மனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

    சுசீலா, கடந்த ஒரு மாத காலமாக சென்னிமலை, 1010 காலனியில் உள்ள தனது மகள் கவிதா வீட்டில் தங்கியிருந்தார்.

    இந்த நிலையில், கடந்த 25-ந் தேதி சுசீலா, மகள் கவிதா வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து, கடந்த 27-ந் தேதி சென்னிமலை போலீசில் கவிதா புகார் செய்தார். மேலும் கவிதா–வின் சகோதரர் சுரேஷ் மற்றும் உறவினர்களும் சுசீலாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில், அறச்சலூர் அருகே, சிவகிரி செல்லும் சாலையில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் ஒரு பெண் உடல் கிடப்பதாக சுரேஷுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற சுரேஷ் இறந்து கிடக்கும் பெண் தனது தாய் சுசீலா தான் என்பதை உறுதி செய்தார்.

    மேலும் நோயால் பாதிக்கப்பட்ட சுசீலா நோய்க் கொடுமையா–லும், வயது மூப்பு காரணமாகவும் வாய்க்கா–லில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இதுகுறித்து, அறச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் வரலாற்று சிறப்புமிக்கதாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும்.
    • திருப்பு முனையை உருவாக்கும் தேர்தலாக இருக்கும். வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம். எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் வழியில் எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டு காலம் தமிழகம் வியக்கத்தக்க வகையில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் பல மாற்றங்களை துறைதோறும் உருவாக்கி சிறந்த முறையில் ஆட்சி நடத்தினார்.

    பழகுவதற்கு எளிமையானவர். பொறுப்பேற்ற காலம் முதல் இன்று வரை பொதுமக்கள், கழகத்தினர் போற்றும் அயராத உழைப்பினால் எதிர்க்கட்சித் தலைவராக சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

    அவரது தலைமையில் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் களத்தில் முதன்முறையாக இடைத்தேர்தலை சந்திக்கின்றோம். கொங்கு மண்டலம் என்பது அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை. யாராலும் தகர்க்க முடியாது. அவரது தலைமையில் இன்று பணியை ஆற்றுகின்றோம்.

    அனைத்து பகுதிகளிலும் தேர்தல் களம் கண்டவர்கள் வந்துள்ளனர். பல தேர்தலை சந்தித்தவர்கள் பணியாற்றுகின்றார்கள். தேர்தல் களத்தில் அமைதியோடு மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்கும் பணியை சிறப்பாக செய்து வருகின்றோம்.

    இந்த தேர்தல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் வரலாற்று சிறப்புமிக்கதாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும். திருப்பு முனையை உருவாக்கும் தேர்தலாக இருக்கும். வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது.

    ஆகவே களத்தில் பணிகளை சிறப்போடு, அமைதியோடு செய்து வருகின்றோம். சரியான முறையில் கழகத்தின் சார்பாக எடப்பாடி தலைமையில் சரியான முறையில் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. தேர்தல் களத்தில் அந்த பணிகளை சிறப்பாக செய்து வருகின்றோம்.

    இரட்டை இலை சின்னம் வழக்கை பொறுத்தவரை நீதித்துறையில் என்னென்ன தேவையோ அதை பூர்த்தி செய்து செயல்பட்டு வருகிறோம். அச்சமின்றி தேர்தல் பணி செய்கிறோம். தெளிவாக 98.5 சதவீத பேர் ஒரு மனதாக பொதுச்செயலாளரை தேர்வு செய்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தலைமை கழக நிர்வாகிகள் செயலாற்றுகிறோம். முழு மனதோடு வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கையோடு உள்ளோம்.

    4 அணிகளாக பிரிந்து போட்டியிடுவதால் வாக்குகள் சிதறாது. தேர்தல் களத்தில் மனு தாக்கல் தொடங்கி முடிய கால அவகாசம் உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதையும் ஆய்வு செய்து வருகின்றோம். முழுமையாக ஆய்வு செய்த பிறகு வேட்பாளர் அறிவிக்கப்படுவார். குருச்சேத்திர யுத்தத்தை போல் வியூகம் வகுத்து தேர்தலை சந்தித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பா.ஜ.க. கூட்டணி, தனித்து போட்டி குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றார். மேலும் வேட்பாளர் அறிவிப்பு காலதாமதம் குறித்த கேள்விக்கு விரைவில் அறிவிக்கப்படுவார் என்று பதில் அளித்தார்.

    • சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
    • உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுபொருட்கள் ஏதாவது கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். சோதனைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கொண்ட முறையீட்டு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சண்முகசுந்தரம் என்பவரது தலைமையில் நேற்று இரவு 11 மணியளவில் வீரப்பம்பாளையம் என்ற பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரில் சோதனை நடத்திய போது அதில் ரூ.3 லட்சம் பணம் இருந்தது. காரில் இருந்தவரிடம் விசாரித்த போது தனது பெயர் முகமது தவுபீக் என்றும் கேரளாவில் இருந்து ஜவுளி வாங்க வந்ததாகவும் தெரிவித்தார்.

    ஆனால் பணத்துக்கு உரிய அவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.

    இதேபோல் இன்று அதிகாலை 3.10 மணியளவில் நிலைக்குழுவினர் ருத்ரமூர்த்தி என்பவரது தலைமையில் எல்லை மாரியம்மன் கோவில் பகுதியில் வந்த ஒரு ஆட்டோவில் சோதனை செய்தபோது அதில் ரூ. 1 லட்சத்து 200 பணம் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. பணத்தை கொண்டு வந்தவரிடம் விசாரித்த போது அவர் ஆந்திராவை சேர்ந்த ருத்ரசீனிவாசன் என்பதும் ஜவுளி வாங்க பணம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

    ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைக்கப்பட்டது.

    • வேட்பாளர்கள் தங்களுடன் 4 பேரை மட்டும் அழைத்து வர வேண்டும் என்றும், கோஷம் போட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவால் இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (31-ந்தேதி) தொடங்கி வருகிற 7-ந்தேதி வரை நடக்கிறது. வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் 5-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை தவிர்த்து தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணிவரை வேட்பு மனுக்களை மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவக்குமாரிடம் தாக்கல் செய்யலாம்.

    வேட்பு மனுக்கள் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மனு தாக்கலின் போது மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திலே அரசியல் கட்சியினர் நிற்க வேண்டும் என்பதற்காக மாநகராட்சி அலுவலகத்தின் 4 புறமும் 100 மீட்டர் தூரத்துக்கு எல்லை கோடுகள் வரையபப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் வேட்பாளர்கள் தங்களுடன் 4 பேரை மட்டும் அழைத்து வர வேண்டும் என்றும், கோஷம் போட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 238 வாக்கு சாவடிகள் உள்ளன.
    • வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமி பூத் வாரியாக ஆய்வு செய்கிறார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் 2 நாட்கள் ஆலோசனை நடத்தினார்.

    மேலும் தேர்தல் பணியாற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கொண்ட பணிக்குழுவை அறிவித்தார்.

    அதோடு இல்லாமல் பூத் வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். தேர்தல் பணிக்குழு மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கினார்.

    அப்போது வீடு, வீடாக சென்று வாக்காளர் சரிபார்க்கும் பணியை 3 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி இன்றுடன் வாக்காளர் சரி பார்ப்பு பணி நிறைவு பெறுகிறது.

    இந்த பணிகளை ஆய்வு செய்ய எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஈரோட்டுக்கு வருகிறார். வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் அவர் பூத் வாரியாக ஆய்வு செய்கிறார்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 238 வாக்கு சாவடிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் தேர்தல் பணிக்குழுவினர், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் உள்ளூர் பொறுப்பாளர்களுடன் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்தனர். அவர்களிடம் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

    அதில் பூத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள், கடந்த தேர்தலில் அங்கு அ.தி.மு.க.வுக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தது. புதிதாக எத்தனை வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். அந்த பூத்தில் உள்ள மக்கள் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து விரிவாக கேட்டறிகிறார். இதே போல் 238 பூத் கமிட்டியினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா போட்டி.
    • கடுமையான உழைப்பை செலுத்தி மேனகாவை வெற்றி பெற பாடுபடுவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

    தேர்தல் தொடர்பாக கடந்த 22ம் தேதி அன்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த சீமான் நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வருகிற 29-ந் தேதி அறிவிக்கப்படுகிறார் என்றும், ஈரோட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடக்கிறது. அதில் வேட்பாளர் யார் என்பதை தெரிவிப்போம் என்றும் கூறினார்.

    இந்நிலையில், ஈரோடில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா போட்டியிட உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார்.

    மேலும் அவர், கடுமையான உழைப்பை செலுத்தி மேனகாவை வெற்றி பெற பாடுபடுவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
    • பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் என தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

    இதில் கட்சிகளின் கொடிகள், விளம்பர தட்டிகள் வைத்தல், ஒலி பெருக்கிகள் பயன்படுத்துதல், ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுத்துச் செல்ல உரிய ஆவணங்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் என பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைக் கண்காணிக்க பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் என தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை வரவேற்க நேற்று மாலை அக்கட்சியினர் ஈரோடு காவிரி பாலம் சோதனை சாவடி அருகே சுமார் 50 பேர் திரண்டிருந்தனர்.

    அப்போது அவர்கள் வேட்பாளரை வரவேற்க தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி டிரம்ஸ் அடித்தும், பட்டாசுகள் வெடித்தும் வரவேற்றுள்ளனர். இதையடுத்து அக்கட்சியின் நிர்வாகிகள் 2 பேர் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறலுக்காக கருங்கல் பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதேபோல தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வரவேற்க ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியில் அக்கட்சியினர் சுமார் 30 பேர் கூடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி டிரம்ஸ் அடித்து, பட்டாசு வெடித்தனர்.

    இதையடுத்து அக்கட்சியினர் மீதும் கருங்கல்பாளையம் போலீசார் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • பண்ணாரியம்மன் கோவில் அருகே யானைகள் திடீரென கூட்டமாக வெளியேறி ரோட்டில் நின்று உலாவியது.
    • இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை முன்னும் பின்னும் நகர்த்தி கொண்டு இருந்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச் சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை, மான் உள்பட பல்வேறு வன விலங்குள் உள்ளன.

    இந்த வனப்பகுதியில் திண்டுக்கல்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்து உள்ளது. இதனால் இந்த வழியாக தினமும் ஏராள மான வாகனங்கள் சென்று வருகின்றன.

    மேலும் பண்ணாரி, தாளவாடி, தல மலை வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீருக்காக யானைகள் வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ரோட்டை கடந்து சென்று வருகிறது.

    ரோட்டில் உலாவரும் யானைகள் அந்த வழியாக வரும் வாகனங்களை விரட்டுவது தொடர் கதை யாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலம் அடுத்த மைசூர் தேசிய நெடுஞ் சாலை பண்ணாரியம்மன் கோவில் அருகே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் யானைகள் திடீரென கூட்டமாக வெளி யேறி வனப்பகுதி ரோட்டில் நின்று உலாவியது.

    அந்த பகுதி ரோட்டில் யானைகள் நிற்பதை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் வாகனங்களை ரோட்டில் ஆங்காங்கே நிறுத்தினர். அந்த பகுதியில் யானைகள் சிறிது நேரம் அங்கேயே நின்றது.

    இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை முன்னும் பின்னும் நகர்த்தி கொண்டு இருந்தனர். யானைகள் அங்கேயே நின்றதால் அவர்கள் அச்ச மடைந்தனர்.

    இதையடுத்து சுமார் அரை மணி நேரம் அங்கும் இங்கும் போக்கு காட்டிய காட்டு யானைகள் ஒரு வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பிறகு வாகன ஓட்டிகள் சென்றனர்.

    இது குறித்து வனத்துறை யினர் கூறும் போது, இது யானைகள் இடம்பெயரும் காலம் என்பதால் யானை களின் நடமாட்டம் அதிக மாக காணப்படும்.

    மேலும் இரவு நேரங்களில் தண்ணீரு க்காக யானைகள் சாலையை கடக்க கூடும். எனவே வாகன ஓட்டிகள் வளைவு களில் மிகுந்த எச்சரிக்கை யுடனும் கவனமுடனும் வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும்.

    மேலும் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஆரன்களை பயன்படுத்த கூடாது என வாகன ஓட்டி களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×