என் மலர்
நீங்கள் தேடியது "old daughter."
- சம்பவத்தன்று நள்ளிரவு, தான் எலிபேஸ்ட்டை தின்று–விட்டதாக திவ்யா தனது பெற்றோரிடம் கூறி–யுள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம், கொடுமுடி, காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கீதாமணி (49). இவரது மகள் திவ்யா (29).
இவருக்கு, கொடுமுடி, பூசாரிபாளையம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவரு–டன் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. தேவராஜ், கொம்பனை–புதூரில் டீ கடை வைத்து–ள்ளார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் தனக்கும், தனது கணவருக்கும் சண்டை ஏற்பட்டுவிட்டதாக தனது பெற்றோருக்கு திவ்யா கடந்த 23-ந் தேதி தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவரது பெற்றோர் திவ்யாவை அவர்களது வீட்டுக்கு அழைத்துச் சென்று–விட்டனர். இந்த நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு, தான் எலிபேஸ்ட்டை தின்று–விட்டதாக திவ்யா தனது பெற்றோரிடம் கூறி–யுள்ளார்.
அவரை உடனடியாக கொடுமுடி அரசு மருத்துவ–மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கரூர் அரசு மருத்து–வக் கல்லூரி மருத்துவ–மனையில் சேர்த்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக கடந்த 27-ந் தேதி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திவ்யா பரிதாப–மாக உயிரிழந்தார். இது–குறித்து கீதாமணி அளித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீ–சார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






