search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode By Polls"

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் வருகிற 1-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
    • அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நான் சந்திக்க செல்வதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

    சென்னை:

    தே.மு.தி.க. துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நான் சந்திக்க செல்வதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அந்த தகவல் தவறானது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் வருகிற 1-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

    இவ்வாறு சுதீஷ் கூறி உள்ளார்.

    • வேட்பாளர்கள் தங்களுடன் 4 பேரை மட்டும் அழைத்து வர வேண்டும் என்றும், கோஷம் போட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவால் இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (31-ந்தேதி) தொடங்கி வருகிற 7-ந்தேதி வரை நடக்கிறது. வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் 5-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை தவிர்த்து தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணிவரை வேட்பு மனுக்களை மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவக்குமாரிடம் தாக்கல் செய்யலாம்.

    வேட்பு மனுக்கள் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மனு தாக்கலின் போது மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திலே அரசியல் கட்சியினர் நிற்க வேண்டும் என்பதற்காக மாநகராட்சி அலுவலகத்தின் 4 புறமும் 100 மீட்டர் தூரத்துக்கு எல்லை கோடுகள் வரையபப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் வேட்பாளர்கள் தங்களுடன் 4 பேரை மட்டும் அழைத்து வர வேண்டும் என்றும், கோஷம் போட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளது.
    • குறிப்பாக கஞ்சா மற்றும் போதை பழக்கங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகமாகவே உள்ளது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. சட்டசபை குழு தலைவரும், எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அபரீதமான வளர்ச்சி அடைந்துள்ளது. அதை நாங்கள் சொல்வதை விட தி.மு.க அமைச்சரே கூறியிருக்கிறார்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஜி.கே.வாசனை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தமட்டில் மாநில தலைவர் அண்ணாமலை எடுக்கும் முடிவிலேயே போட்டியானது இருக்கும்.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் நாங்கள் ஏற்கனவே ஒரு முறை வெற்றி பெற்றுள்ளோம்.

    வருகிற தேர்தலிலும் கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிடும் போது நிச்சயம் தாமரை சின்னத்தில் இங்கு தேர்தலில் போட்டியிடுவோம்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளது. குறிப்பாக கஞ்சா மற்றும் போதை பழக்கங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகமாகவே உள்ளது.

    இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    டாஸ்மாக் கடைகள் முன்பு பள்ளி, மாணவர்கள் பெண்கள் அதிகமாக நிற்பதை காண முடிகிறது. இது தொடர்பாக வீடியோ காட்சிகளும் வந்துள்ளது.

    இதுகுறித்து நான் பலமுறை சட்டசபையில் கருத்து தெரிவித்துள்ளேன். ஆனால் இதுவரை அதற்கு தீர்வு கண்டதாக தெரியவில்லை.

    எனவே தமிழகத்தில் டாஸ்மாக் கடையின் நேரங்களை குறைப்பதுடன் மதுக்கடைகளையும் குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 238 வாக்கு சாவடிகள் உள்ளன.
    • வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமி பூத் வாரியாக ஆய்வு செய்கிறார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் 2 நாட்கள் ஆலோசனை நடத்தினார்.

    மேலும் தேர்தல் பணியாற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கொண்ட பணிக்குழுவை அறிவித்தார்.

    அதோடு இல்லாமல் பூத் வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். தேர்தல் பணிக்குழு மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கினார்.

    அப்போது வீடு, வீடாக சென்று வாக்காளர் சரிபார்க்கும் பணியை 3 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி இன்றுடன் வாக்காளர் சரி பார்ப்பு பணி நிறைவு பெறுகிறது.

    இந்த பணிகளை ஆய்வு செய்ய எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஈரோட்டுக்கு வருகிறார். வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் அவர் பூத் வாரியாக ஆய்வு செய்கிறார்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 238 வாக்கு சாவடிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் தேர்தல் பணிக்குழுவினர், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் உள்ளூர் பொறுப்பாளர்களுடன் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்தனர். அவர்களிடம் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

    அதில் பூத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள், கடந்த தேர்தலில் அங்கு அ.தி.மு.க.வுக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தது. புதிதாக எத்தனை வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். அந்த பூத்தில் உள்ள மக்கள் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து விரிவாக கேட்டறிகிறார். இதே போல் 238 பூத் கமிட்டியினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

    • ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள பணிக்குழு அமைப்பு.
    • அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், செயலாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் அடங்குவர்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்காக அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. தேர்தல் பணிக் குழுவில் 106 நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, கழக அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் கீழ்க்கண்டவர்கள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்றுவார்கள்.

    அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், செயலாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், பொன்னையன், தம்பிதுரை, தங்கமணி, வேலுமணி, பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண் முகம், செம்மலை,

    தளவாய்சுந்தரம், பா.வளர்மதி, செல்லூர் ராஜூ, கோகுல இந்திரா, விஜயபாஸ்கர், கடம்பூர் சி.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, பென்ஜமின், கருப்பசாமி பாண்டியன், கழக அமைப்பு செயலாளர் நா.பாலகங்கா, கழக இலக்கிய அணிச் செயலாளர் வைகைச் செல்வன், எஸ்.ஆர்.விஜய குமார், சி.த.செல்லப்பாண்டி யன், செ.தாமோதரன், இசக்கி சுப்பையா, ஆதிராஜாராம், வாலாஜாபாத் பா.கணேசன், எம்.சி.சம்பத், கே.சி.கருப்பணன், எம்.ஆர். விஜய பாஸ்கர், எஸ்.பி. சண்முக நாதன், மாதவரம் மூர்த்தி, பி.வி.ரமணா, எஸ்.ஆர். ராஜேஷ், டி.ஜி. வெங்கடேஷ் பாபு, தி.நகர். சத்தியா, எம்.கே.அசோக், விருகை வி.என்.ரவி, கே.பி.கந்தன், திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், சிட்லபாக்கம் ராஜேந்திரன், சிறுணியம் பலராமன், வி.அலெக்சாண்டர், தஞ்சை கணேச ராஜா, செல்வ மோகன்தாஸ் பாண்டியன், ஜாண்தங்கம் உள்ளிட்ட பல நிர்வாகிகள் இடம் பெற்று உள்ளன.

    ×