என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண்ணாரி ரோட்டில்"

    • பண்ணாரியம்மன் கோவில் அருகே யானைகள் திடீரென கூட்டமாக வெளியேறி ரோட்டில் நின்று உலாவியது.
    • இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை முன்னும் பின்னும் நகர்த்தி கொண்டு இருந்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச் சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை, மான் உள்பட பல்வேறு வன விலங்குள் உள்ளன.

    இந்த வனப்பகுதியில் திண்டுக்கல்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்து உள்ளது. இதனால் இந்த வழியாக தினமும் ஏராள மான வாகனங்கள் சென்று வருகின்றன.

    மேலும் பண்ணாரி, தாளவாடி, தல மலை வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீருக்காக யானைகள் வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ரோட்டை கடந்து சென்று வருகிறது.

    ரோட்டில் உலாவரும் யானைகள் அந்த வழியாக வரும் வாகனங்களை விரட்டுவது தொடர் கதை யாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலம் அடுத்த மைசூர் தேசிய நெடுஞ் சாலை பண்ணாரியம்மன் கோவில் அருகே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் யானைகள் திடீரென கூட்டமாக வெளி யேறி வனப்பகுதி ரோட்டில் நின்று உலாவியது.

    அந்த பகுதி ரோட்டில் யானைகள் நிற்பதை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் வாகனங்களை ரோட்டில் ஆங்காங்கே நிறுத்தினர். அந்த பகுதியில் யானைகள் சிறிது நேரம் அங்கேயே நின்றது.

    இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை முன்னும் பின்னும் நகர்த்தி கொண்டு இருந்தனர். யானைகள் அங்கேயே நின்றதால் அவர்கள் அச்ச மடைந்தனர்.

    இதையடுத்து சுமார் அரை மணி நேரம் அங்கும் இங்கும் போக்கு காட்டிய காட்டு யானைகள் ஒரு வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பிறகு வாகன ஓட்டிகள் சென்றனர்.

    இது குறித்து வனத்துறை யினர் கூறும் போது, இது யானைகள் இடம்பெயரும் காலம் என்பதால் யானை களின் நடமாட்டம் அதிக மாக காணப்படும்.

    மேலும் இரவு நேரங்களில் தண்ணீரு க்காக யானைகள் சாலையை கடக்க கூடும். எனவே வாகன ஓட்டிகள் வளைவு களில் மிகுந்த எச்சரிக்கை யுடனும் கவனமுடனும் வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும்.

    மேலும் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஆரன்களை பயன்படுத்த கூடாது என வாகன ஓட்டி களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×