என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கோடை காலம் தொடங்கும் முன்பே அனல் காற்று வீசி வருகிறது.
    • வெயிலின் தாக்கம் காரணமாக பழங்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே அனல் காற்று வீசி வருகிறது. குறிப்பாக காலை 8 மணிக்கே வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது.

    நேரம் செல்ல, செல்ல அதிகளவில் அனல் காற்று வீசிவருகிறது. மேலும் பகல் நேரங்களில் பஸ்களில் மக்கள் கூட்டம் குறைந்து விட்டது. சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை–யும் குறைந்து–விட்டது.

    அதோடு இல்லாமல் வீடுகளில் எந்தநேரமும் புழுக்கமாக இருப்பதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தின் பல்ேவறு இடங்களில் மாலை நேரங்களில் கோடை மழை பெய்தாலும் இரவில் மட்டுமே குளிர்ந்த காற்று வீசுகிறது.பின்னர் மீண்டும் காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    கோடை காலம் தொடங்கும் முன்பே ஈரோட்டில் அனல் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    வெயிலின் தாக்கம் காரணமாக பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் பழங்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது. பொதுமக்களும் வெப்பத்தை தணிக்க பழங்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

    வெயிலின் காரணமாக பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது. பொது–மக்கள் தர்பூசணி, இளநீர், சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, சப்போட்டா உள்ளிட்ட பழங்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

    அதோடு இல்லாமல் நுங்கு விற்பனையும் களை கட்டியுள்ளது. இது போக கம்பங்கஞ்சி, தயிர், மோர், விற்பனையும் அதிகரித்துள்ளது.

    வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிகளவில் குளிர்ச்சியான பொருட்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். 

    • ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    பவானி:

    பவானி-மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ள தாசில்தார் அலுவலக வளாகத்தின் நுழைவாயில் பகுதியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நிதி நிலை அறிக்கையில் எந்த ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தலைமை வகித்தார். பவானி தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். புதிய முரண்பாட்டைகளைதல், காலி பணியிடங்களை நிரப்புதல், கால முறை ஊதியம் வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இதனைத்தொடர்ந்து பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தின் நுழைவாயில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் ஜாக்டோ ஜியோவுக்கு உட்பட்ட அரசு ஊழியர் சங்கம், வருவாய்த்துறை, ஆசிரியர் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ் சாலை துறை, சத்துணவு ஊழியர் சங்கம் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அந்தியூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலி–யுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயேந்திரன் தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில்

    பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். அக விலைப்படி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் அந்தியூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து போலீஸ் நிலையம் வரை அரசு ஊழியர்கள் மனித சங்கிலியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பாலு, சிவகுமார், ஆனந்தகுமார், ரமேஷ்குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • பழனிசாமி தோட்டத்து கிணற்றில் கால் தவறி விழுந்தார்.
    • தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஓட்டக்குட்டை ரோடு கோழிக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (43). விவசாயி. இவரது தோட்டத்தில் 50 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது.

    இந்நிலையில் பழனிசாமி தோட்டத்து கிணற்றில் மோட்டார் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது கால் தவறி அவர் கிணற்றில் விழுந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 4 மணி நேரமாக போராடி கயிறு கட்டி பழனிசாமியை பிணமாக மீட்டனர்.

    இறந்த பழனிசாமிக்கு ரேவதி என்ற மனைவியும், 7 வயதில் மகனும் உள்ளனர். இதனையடுத்து சத்தியமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அக்கரை தட்டப்பள்ளி மாரியம்மன் கோவிலில் சப்பரம் திருவீதி உலா புறப்பட்டது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடந்து வருகிறது.

    விழாவையொட்டி ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.

    விழாவையொட்டி கடந்த 3 நாட்களுக்கு முன்பு பண்ணாரியம்மன் சப்பரம் திருவீதி உலா தொடங்கியது. இதை தொடர்ந்து அம்மன் சத்தியமங்கலத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் திருவீதி உலா நடந்து வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுகிறார்கள்.

    இதை தொடர்ந்து நேற்று இக்கரை தட்டப்பள்ளிக்கு சப்பரம் சென்றது. தொடர்ந்து அங்கு அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று இரவு வெள்ளியம்புதூரில் இருந்து சப்பரம் புறப்பட்டு பவானி ஆற்றை கடந்து அக்கரை தட்டப்பள்ளி மாரியம்மன் கோவிலுக்கு வந்தது.

    இதை தொடர்ந்து இன்று காலை அக்கரை தட்டப்பள்ளி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சப்பரம் திருவீதி உலா புறப்பட்டது.

    இதையடுத்து சுற்று வட்டார பகுதி கிராமங்களில் அம்மன் சப்பரம் திருவீதி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். மேலும் பலர் அம்மன் சப்பரம் முன்பு படுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    இதை தொடர்ந்து இன்று இரவு பண்ணாரிம்மன் சப்பரம் சத்தியமங்கலம் மாரியம்மன் கோவிலுக்கு வருகிறது. இதையடுத்து நாளை காலை சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் அம்மன் சப்பரம் வீதி உலா நடக்கிறது.

    • வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடந்தது.
    • பணியினை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னே ற்றம் தொடர்பாக அனை த்துத் துறை அலுவலர்க ளுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் நடந்தது.

    இதில் மாவட்ட கண்கா ணிப்பு அலுவலரும், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆரா ய்ச்சித்துறை ஆணை யருமான ஜி.பிரகாஷ் கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசினார்.

    தொடர்ந்து வேளா ண்மை, உழவர் நலத்துறை சார்பில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,

    சமத்துவபுர குடியிருப்புகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நமக்கு நாமே திட்டம், ஜல்ஜீவன் மிஷன், அம்ருத், தூய்மை பாரத இயக்கம், பாதாள சாக்கடை,

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிலுவையில் உள்ள பட்டாக்கள், இ-சேவை மையம், பள்ளிக் கல்வித் துறை சார்பில் எண்ணும் எழுத்தும் இலக்கியம்,

    பள்ளிக் கட்டிடங்களின் உட்கட்டமைப்பு வசதிகள்; மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம், சிறப்பு திட்ட செயலாக்கம், நான் முதல்வன்,

    உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆரா ய்ச்சித் துறை ஆணை யருமான ஜி.பிரகாஷ் விரி வாக ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் அவர் கோடை காலம் தொடங்க உள்ளதால் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மாவட்ட த்தின் அனைத்து பகுதிக ளிலும் தடுப்பு நடவ டிக்கைகளை முழுமையாக மேற்கொண்டு டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை முன்பே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழக அரசின் திட்ட ங்கள் அனைத்தும் அனை த்து தரப்பு மக்களுக்கும் முழுமையாக சென்றடையும் வகையில் தங்களது பணி யினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) பொன்மணி, கலெகக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீசன் (வளர்ச்சி), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார்,

    துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) டாக்டர் சோம சுந்தரம், கீழ்பவானி வடிநில கோட்டம் செயற்பொ றியாளர் கண்ணன், மாநகர நல அலுவலர் பிரகாஷ்,

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கோதை உள்பட அனைத்து துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    • இன்று இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • தொடர்ந்து பொதுமக்கள் தினமும் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபடுவர்.

    ஈரோடு:

    ஈரோடு நகரின் பிரசித்தி பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் பொங்கல் விழா ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.முன்னதாக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

    இதனையடுத்து தற்போது கோவில் முன்பு பந்தல் அமைக்கும் பணியும், கடைகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

    தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) இரவு 8.30 மணிக்கு பட்டாளம்மன் அபிஷேகம், 10 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    29-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அன்ன வாகன ஊர்வலம், இரவு 10.30 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சியும் நடைபெறுவது.

    தொடர்ந்து பொதுமக்கள் தினமும் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபடுவர். அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிசேகம், பூஜைகள் நடைபெறும்.

    இதையடுத்து வரும் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8 மணிக்கு மாவிளக்கு, கரகம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து 5-ந் தேதி காலை 9.30 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், சின்னமாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெறும்.

    தொடர்ந்து 6-ந் தேதி இரவு 8 மணிக்கு பெரிய மாரியம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். 7-ந் தேதி மாலை 4 மணிக்கு தேர் நிலை சேரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் திருவீதி உலா, 9.30 மணிக்கு சின்ன மாரியம்மன் திருவீதி உலா நடைபெறவுள்ளது.

    இதையடுத்து 8-ந் தேதி மாலை 3 மணிக்கு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும்.

    இதில் பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோவில்களை சேர்ந்த பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் கம்பங்கள் எடுத்து வரப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் எடுத்து செல்லப்பட்ட காவிரி ஆற்றில் விடப்படும்.

    அன்று உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்படுகிறது. தொடர்ந்து இறுதி நிகழ்ச்சியாக 9-ந் தேதி காலை 10.30 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது.

    • பின்னால் வந்த தனியார் பள்ளி பஸ்சுக்காக ரோஷன் வழி விட ஒதுங்கினார்.
    • மோட்டார் சைக்கிளில் சென்ற ரோஷன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மகன் ரோஷன் பிஜி (வயசு 19). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை ரோஷன் பிஜி மோட்டார் சைக்கிளில் தனது நண்பரை ஈரோடு காளைமாட்டு சிலை அருகே இறக்கி விட்டு மீண்டும் மணல் மேட்டில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    ஈரோடு சென்னிமலை ரோடு, பழைய கூட் செட் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் பள்ளி பஸ்சுக்காக ரோஷன் வழி விட ஒதுங்கினார். அந்த பகுதியில் புதிதாக ரோடு போடுவதற்காக சாலையை தோண்டி வைத்துள்ளனர்.

    இதனால் மோட்டார் சைக்கிளில் சென்ற ரோஷன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சின் பின் சக்கரம் ரோஷன் தலையில் ஏறி இறங்கியது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிய ரோசனை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி ரோஷன் பிஜி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மாணவனின் உடலை பார்த்து அவரது பெற்றோர் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வங்கி கணக்கை சரிபார்த்த போது இந்த முறைகேடு நடந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
    • ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் பயணிக்க வனத்துறை சார்பில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் வாகனங்களுக்கு பண்ணாரி வன சோதனை சாவடியிலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி வரும் வாகனங்களுக்கு ஆசனூர் அருகே காரப்பள்ளம் வன சோதனை சாவடியிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வாகனங்களுக்கு முறையே கட்டணமாக ரூ.20 முதல் ரூ. 50 என வசூலிக்கப்பட்டு புலிகள் காப்பக அறக்கட்டளை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்த 2 சோதனைச்சாவடிகளும் முக்கிய போக்குவரத்து பகுதியாக விளங்கி வருகிறது. இங்கு நாளொன்றுக்கு 750 முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் ஆசனூர் வனச்சரக அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரியும் ஓங்கல் வாடி கிராமத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஜனாமூர்த்தி (28) காரப்பள்ளம் வன சோதனை சாவடியில் வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்து வந்தார்.

    இந்நிலையில் காரப்பள்ளம் வன சோதனை சாவடியில் வசூலிக்கப்பட்ட வாகனங்களின் நுழைவு கட்டணம் சரிவர சம்பந்தப்பட்ட வங்கிக்கு செலுத்தப்படாமல் முறைகேடு நடந்துள்ளதாக ஆசனூர் வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்கள் வங்கி கணக்கை சரிபார்த்த போது இந்த முறைகேடு நடந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் விசாரித்த போது கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஜனாமூர்த்தி வன சோதனை சாவடியில் தினமும் வசூல் ஆகும் வாகன நுழைவு கட்டணம் வசூல் பணத்தை அங்குள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் செலுத்தி வந்துள்ளார். இதில் சில நாட்கள் வங்கியில் பணத்தை செலுத்தாமல் போலியாக வங்கி சலானை பணம் செலுத்தியது போல் சீல் வைத்து அலுவலக கோப்புகளில் பணம் செலுத்தியது போல் எழுதி வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இவ்வாறாக அவர் ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் பணம் கையாடல் செய்தது தெரியவந்தது. இது தவிர வனப்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணம், வன விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதமாக விதிக்கப்படும் கட்டணங்களையும் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட தற்காலிக பணியாளர் ஜனாமூர்த்தி பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது வனத்துறையினர் ஆசனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ணாரி மாரியம்மன் சப்பரம் வீதி உலா நடந்தது.
    • சத்தியமங்கலத்தை அடுத்து உள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில்.

    சத்தியமங்கலத்தை அடுத்து உள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில். குண்டம் விழா கடந்த 21-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பண்ணாரி மாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன்கள் கிராமங்கள் தோறும் வீதி உலா தொடங்கியது. தாரை தப்பட்டை மற்றும் மங்கள வாத்தியத்துடன் சிக்கரசம்பாளையத்துக்கு சப்பரத்தை கொண்டு் சென்று அங்குள்ள அம்மன் கோவிலில் தங்கினார்கள்.

    தொடர்ந்து வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம், வழியாக வெள்ளியம்பாளையம் புதூருக்கு அம்மன் சப்பரம் சென்றது. அங்கு நேற்று முன்தினம் இரவு சப்பரத்துடன் தங்கினார்கள்.

    நேற்று 4-வது நாளாக பண்ணாரி மாரியம்மன் சப்பரம் வீதி உலா நடந்தது. சப்பரத்தை இக்கரை தத்தப்பள்ளியில் இருந்து அக்கரை தத்தப்பள்ளி கொண்டு செல்ல பவானி ஆற்றை கடந்து செல்ல வேண்டும். இதற்காக தயாரான நிலையில் அலங்கரிக்கப்பட்ட பரிசல் ஒன்றில் அம்மனின் சப்பரம் வைக்கப்பட்டது.

    சப்பரம் ஆற்றை கடந்து அக்கரை தத்தப்பள்ளி சென்றதும் அங்கு கரையில் நின்றிருந்த பக்தர்கள் தாரை தப்பட்டை முழங்க பண்ணாரி மாரியம்மனை வரவேற்றார்கள்.

    அதைத்தொடர்ந்து சப்பரம் அக்கரைதத்தப்பள்ளி மாரியம்மன் கோவிலில் இரவு தங்க வைக்கப்பட்டது.

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேற்று பண்ணாரி மாரியம்மன் குண்டம் விழா ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பக்தர்கள் குண்டம் மிதிக்கும் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்புகளையும், அம்மனை வணங்க பக்தர்கள் செல்லும் வழிகளையும், தற்காலிக பஸ் நிலையம், கடைகள் அமைக்கப்பட உள்ள பகுதிகளையும் பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகளுக்கு சில ஆலோசனை வழங்கினார். அப்போது சத்தியமங்கலம் உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு அய்மன் ஜமால் மற்றும் போலீசார் சென்றனர்.

    • கண்ணாடி விரியன் பாம்பு மரத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • அந்த பாம்புகளை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது. கோடை காலம் தொடங்கி விட்டதால் வனப்பகுதி வறட்சியாக காணப்படு கிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே வீடுகளை நோக்கி அதிக அளவு பாம்புகள் படையெடுக்க தொடங்கிவிட்டன. வெயிலின் தாக்கம் காரணமாக குளிர்ச்சியான இடங்களை தேடி பாம்புகள் வருகின்றன.

    அந்த வகையில் வீட்டில் உள்ள குளியலறை, கழிப்பறை, வயல்வெளி களுக்கு, கிணறு பகுதிகளுக்கு அதிகளவில் வருகின்றன.

    ஈரோடு மாவட்டம் வெள்ளோடு புங்கம் பாடியை சேர்ந்தவர் சரவணன். இவர் கோழி பண்ணை மற்றும் விவசாயம் செய்து வருகிறார்.

    இவரது விவசாய தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் போடுவதற்காக கிணற்றுக்கு சரவணன் சென்றார்.

    மோட்டார் போடும் அறை அருகே கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் பாம்பு மரத்தில் தொங்கிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து பாம்பு பிடிக்கும் வீரர் யுவராஜுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த யுவராஜா சுருக்கு கம்பியை பயன்படுத்தி கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தார்.

    அதேப்போல் கிணற்றில் இருந்த மற்றொரு கண்ணாடி விரியன் பாம்பையும் லாபகரமாக பிடித்தார். பின்னர் அந்த பாம்புகளை ஈரோடு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

    வெயில் காலம் என்பதால் பாம்புகள் குடியிருப்பு பகுதியில் படையெடுத்த வண்ணம் உள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த கவனமாகவும், எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொ ண்டார்.

    • மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
    • தலைமை ஆசிரியை விளக்கம் அளிக்க கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான அறிவியல் பாட செய்முறைத்தேர்வு கடந்த 20-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த தனித்தேர்வரான அந்தியூரை சேர்ந்த ஆம்புலன்சு டிரைவர் மணிகண்டன் (வயது 25) என்பவர் நேற்று பள்ளிக்கு சென்றார்.

    அப்போது அங்கு பணியில் இருந்த தலைமை ஆசிரியை மணிகண்டனிடம் பயிற்சி வகுப்புக்கு முறையாக வராததால் செய்முறை தேர்வுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றால் ஏ 4 அளவு கொண்ட வெள்ளை காகிதம் 4 பண்டல்களை வாங்கி வந்து கொடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

    இதனால் மணிகண்டனும் அருகில் உள்ள கடைக்கு சென்று வெள்ளை காகித பண்டல்களை வாங்கி வந்தார்.

    இதேபோல் நன்னடத்தை சான்றிதழ் வாங்க வந்த ஒரு வாலிபரிடமும் 2 பண்டல்கள் வெள்ளை காகிதம் வாங்கி வர சொன்னதாக கூறப்படுகிறது.

    இதனால் மணி கண்டன் ஆசிரியை களிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் சூரம்பட்டி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது தலைமை ஆசிரியை கூறுகையில், "இந்த பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து பல்வேறு பொருட்களை வாங்கி கொடுத்து இருக்கிறார்கள்.

    அதுபோல் வெள்ளை காகித பண்டல்களையும் விருப்பத்தின்பேரில் வாங்கி கொடுத்தார்கள். ஆனால் மணிகண்டனிடம் நாங்கள் காகித பண்டல்களை வாங்கி வரச்சொல்லி கேட்க வில்லை" என்று கூறினார்.

    இதையடுத்து மணிகண்டனை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி நடந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியை விளக்கம் அளிக்க கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • ரூ.2.80 லட்சம் கொள்ளை போனது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்தவர் பழனிச்சாமி (50). இவர் அம்மாபேட்டையில் உள்ள வேளாண் அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளார்.

    இவரது மனைவி தவமணி. இவர் பவானி அருகே தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் பவிஷ்கர் ஐதராபாத்தில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பழனிச்சாமியும், அவரது மனைவி தவமணியும் வேலைக்கு சென்று விட்ட னர். வீட்டில் பழனிச்சாமி யின் தாயார் மட்டும் இருந்துள்ளார்.

    பின்னர் சிறிது நேரத்தில் அவரும் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு மற்றும் கதவு கடப்பாறையால் நெம்பி உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடை ந்தார்.

    இது குறித்து பழனிச் சாமிக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டினுள் பேக்கில் இருந்த ரூ.2.80 லட்சம் கொள்ளை போனது தெரிய வந்தது.

    வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.

    இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்ட னர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.

    வீட்டில் பொருத்தப்பட்டி ருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது 3 பேர் இருசக்கர வாகனத்தில் பழனிச்சாமி வீட்டில் இருந்து செல்வது பதிவாகி இருந்தது.

    இதன் அடிப்படையில் கவுந்தப் பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த திருட்டில் பழனிச் சாமியின் நெருங்கியவர்கள் யாராவது ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×