என் மலர்
ஈரோடு
- ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
- 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.
ஈரோடு:
தீயணைப்பு துறையில் பணியின் போது எதிர்பாராத விதமாக இறந்து வீரமரணமடையும் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மரியாதை செலுத்தப்பட்டு வருவதோடு ஒரு வாரகாலத்திற்கு தீ தொண்டு நாள் வாரம் அனுசரிக்கப்படுவது வழக்கமாகும்.
இந்நிலையில் இன்று ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் இறந்த வீரர்களின் நினைவை போற்றும் வகையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தலைமை தாங்கி உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதில் நிலைய அலுவலர் வேலுச்சாமி உள்பட 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.
இதேபோல பவானி, சென்னிமலை, மொட க்குறிச்சி, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை, கொடுமுடி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களிலும் மரியாதை செலுத்தப்பட்டது.
- ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு பெரிய ரக வாகனம் வழங்கப்பட உள்ளது.
- அந்த வாகனம் தற்போது ஐதராபாத்தில் பாடி கட்டப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலைய ங்களுக்கு நவீன உபகர ணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் தீ விபத்து ஏற்பட்டால் உடனு க்குடன் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்லும் வகையில் அதிநவீன வாகன ங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை பெரிய நகர பகுதியாகும். காரணம் இங்குதான் ஏராளமான தொழிற்சா லைகள் இயங்கி வருகின்றன.
இதில் பெருந்துறை சிப்காட்டில் பல்வேறு ரசாயனம் மற்றும் உற்பத்தி தொழிற்சா லைகள் இருப்பதால் இங்கு தீ விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக அணைக்க தற்போது கூடுதலாக நவீன ரக சிறிய வாகனம் அரசு சார்பில் வழங்கப்ப ட்டுள்ளது.
இந்த புதிய வாகனத்தில் 300 லிட்டர் தண்ணீர், 100 லிட்டர் நுரை கலவை, 2 பம்ப் மற்றும் வாகனத்தின் டிரைவர் கேபின் முழுவதும் ஏசி வசதியுடன் அமைக்க ப்பட்டுள்ளது.
மேலும் இந்த வாகனம் ஓடும்போதே வீரர்கள் மூலம் தீயை அணைக்கும் வசதி உள்ளது. அதுவும் சோதனை செ ய்தபோது வெற்றியடைந்தது.
இதேப்போல் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு 15 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட பெரிய ரக வாகனம் விரைவில் வழங்கப்பட உள்ளது.
அந்த வாகனம் தற்போது ஐதராபாத்தில் பாடி கட்டப்பட்டு வருகிறது. அந்த வாகனத்தில் பயன்படுத்தப்படும் சில வகையான உதிரி பாகங்கள் ஈரோட்டிற்கு வந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.
- ரூ.3 லட்சத்து 96 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.
அந்தியூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து நிலக்கடலையை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில் 34 மூட்டைகள் காய்ந்த நிலக்கடலை காய் குறைந்த பட்சமாக 67 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 80 ரூபாய்க்கும், சராசரியாக 72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மொத்தம் 191 மூட்டைகளில் 61 குவிண்டால் நிலக்கடலை காய் கொண்டு வரப்பட்டு ரூ.3 லட்சத்து 96 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
- புஞ்சை புளியம்பட்டி நகராட்சி அவசரக் கூட்டம் நடைபெற்றது.
- இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பு.புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள வாரச்சந்தையில் மாட்டி றைச்சி கடைகள் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட 15,16-வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் மாட்டிறைச்சி கடைகளால் துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதார கேடு ஏற்படுவதாகவும், நகராட்சி ஆணையாளரிடம் புகார் அளித்ததன் கார ணமாக எந்த விசாரணையும் இன்றி இரவோடு இரவாக பொக்லைன் எந்திரம் மூலம் மாட்டிறைச்சி கடைகள் தரை மட்டமாக்கப்பட்டது.
இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக மாட்டி றைச்சி கடை உரிமை யாளர்கள், மார்க்சிஸ்டு, கம்யூனிஸ்டு கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
தங்களுக்கு மீண்டும் வார சந்தையில் வியாபாரம் செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மார்க்சிஸ்டு, கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்பு களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்தில் தடையை மீறி நிரந்தரமாக குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை கலைந்து செல்வ தில்லை எனவும் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்களோடு நகராட்சி ஆணையாளர் மற்றும் தலைவர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் நகர்மன்ற கூட்டம் கூட்டப்பட்டு அதில் விவாதம் செய்து கடை அமைப்பது குறித்து முடிவு தெரிவி க்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்ப ட்டது.
இந்நிலையில் நேற்று புஞ்சை புளியம்பட்டி நகராட்சி அவசரக் கூட்டம் நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஆணையாளர் சையது உசேன், துணைத்தலைவர் சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து நகர மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதில் நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் பேசும்போது,
மாட்டிறைச்சி கடைகள் அகற்றப்பட்ட பிரச்ச னையில் ஆணையாளர் எடுத்த திடீர் தன்னிச்சையான முடிவினால் தற்பொழுது நகர மன்ற தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.
அந்த கடைகளை அகற்றியது ஆணையாளர் தான் எனவும், இதனால் ஆணை யாளர் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் திடீரென கூட்டம் நடந்து கொண்டிரு க்கும் பொழுதே நகராட்சி ஆணையாளர் சையது உசேன் திடீரென வெளி யேறி தனது அறைக்கு சென்று விட்டதால் ஆத்திர மடைந்த நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் ஆணையாளரின் அறைக்குள் சென்று அவரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறியது தவறு எனவும், அதனால் மீண்டும் வந்து முறைப்படி கூட்ட த்தை முடித்து வைக்க வேண்டும்.
உங்களால் தான் நகராட்சி நிர்வாகத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட்டு ள்ளது என கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்து சமாதானம் அடைந்த ஆணையாளர் சையது உசேன் மீண்டும் நகராட்சி கூட்ட அரங்கிற்கு வந்து கூட்டத்தை முடித்து வைப்பதாகவும்,
ஞாயிற்றுக்கி ழமைகளில் மட்டும் மாட்டு இறைச்சி விற்பனை செய்து கொள்ள அனுமதி அளிக்க லாம் எனவும், அதன் பிறகு மாற்று இடத்தில் நிரந்தர கொட்டகை அமைத்து வியாபாரிகளுக்கு கடைகள் வழங்க அனுமதி அளிக்கலாம் என தீர்மானம் அளித்ததின் பேரில் கூட்டம் முடிவடைந்தது.
- திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
- இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஈரோடு:
கொடுமுடி வட்டார விவசாயிகள் தங்கள் விபரங்களை கணிணியில் பதிவேற்றம் செய்து வேளாண்-உழவர் நலத்துறை திட்டங்களில் பயன்பெற ஆன்லைன் மூலம் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொ.யசோதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இத்திட்டமானது தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட தங்கள் கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி விவசாயிகளின் ஆதார் எண், விவசாயியின் புகைப்படம், குடும்ப அட்டை , வங்கி கணக்கு எண் விவரங்கள் மற்றும் நில உரிமை ஆவணங்களுடன் சென்று தானியங்கள் (வேளாண் உள்ளீட்டு அமைப்பின் விவசாயி ஆன்லைன் பதிவு) என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு பதிவேற்றம் செய்யும் போது நில விவரங்களுடன் இணை க்கப்பட்ட விவசாயியின் விவரம் தானியங்கள் என்ற இணையதளத்தில் சேகரிக்கப்பட்டு
வேளாண்மை-உழவர்நலத்துறை பேரிடர் மேலாண்மை துறை, தோட்ட க்கலைதுறை, கூட்டுற வுத்துறை, பட்டுவளர்ச்சி துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல்த்துறை,
ஊரக வளர்ச்சி த்துறை, கால்நடை பராமரி ப்பு த்துறை, வேளாண் வணிகம் , விதை சான்றளி ப்புத்துறை, வருவாய்த்துறை மற்றும் சர்க்கரை துறை ஆகிய துறைகளின் திட்டங்களில் பயனடைய பயன்படுத்தப்படுகிறது.
எனவே கொடுமுடி வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கிராம நிர்வாக அலுவலகம், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி தானியங்கள் இணைய தளத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் ஆதார் எண், விவசாயியின் புகைப்படம், வங்கி கணக்கு எண் விவரங்கள் மற்றும் நில உரிமை ஆவணங்களுடன் சென்று பதிவு செய்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
- கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து வருகிறது.
- இன்று 90 சதவீதம் வியாபாரம் நடைபெற்றது.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சோதனை சாவடி அருகே வாரந்தோறும் வியாழ–க்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்த சந்தைக்காக கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, நேபாளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருவது வழக்கம்.
இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம். தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து வருகிறது.
இன்று நடந்த மாட்டு சந்தையில் 450 பசு மாடுகள், 200 எருமை மாடுகள், 50 வளர்ப்பு கன்றுகள் என மொத்தம் 700 மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. கடந்த வாரத்தை விட கூடுதலாக 50 மாடுகள் வந்துள்ளன.
இன்று கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனர். பசுமாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ. 75 ஆயிரம் வரை விற்பனையானது.
எருமை மாடு ஒன்று ரூ.30 முதல் 65 ஆயிரம் வரை விற்பனையானது. வளர்ப்பு கன்றுகள் 15 ஆயிரம் வரை விற்பனையானது. இன்று 90 சதவீதம் வியாபாரம் நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- நகையை பறித்துக்கொண்டு 2 பேரும் தப்பியோடினர்.
- இது தொடர்பாக பூபதி என்கிற பிரபாகரன் என்பவரை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரகு (36). இவர் மேட்டூர் ரோட்டில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.
அப்போது 2 பேரும் திடீரென்று வியாபாரி ரகுவிடம் வாய்த்தகராறு செய்ததோடு தாக்குதலில் ஈடுபட்டனர்.
அப்போது ரகுவின் கழுத்தில் இருந்த 6 அரை பவுன் நகையை பறித்துக்கொண்டு 2 பேரும் தப்பியோடினர்.
இதையடுத்து பின்னால் மற்றொரு வாகனத்தில் ரகு துரத்தி சென்றதையடுத்து மோட்டார் சைக்கிளை அந்த கும்பல் அப்படியே விட்டு விட்டு தப்பியோடிவிட்டனர்.
இது தொடர்பாக ரகு கொடுத்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட ஈரோடு பழைய கரூர் ரோடு, கோணவாய்க்கால், பாலதண்டாயுதம் வீதியை சேர்ந்த பூபதி என்கிற பிரபாகரன் (30) என்பவரை கைது செய்தனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சுரேஷ் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.
- அன்கீத்குமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
- கொலை செய்து வேறு இடத்தில் வீசியதை ஒப்புக்கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை கந்தாம்பாளையத்திற்கு அருகே உள்ள தனியார் பள்ளியின் காம்பவுண்ட் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி நிர்வாண நிலையில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் பிணமாக கிடந்தது உத்திரபிரதேச மாநிலம் மெரகாபாத் மாவட்டம் முஜாப்பூர் பகுதியை சேர்ந்த ரேஷ்மா காதூன் (36) என தெரியவந்தது.
மேலும் ரேஷ்மா காதூனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளதும், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்று ரேஷ்மா காதூன் தனியாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.
அப்போது அதே மாவட்டத்தை சேர்ந்த அன்கீத்குமார் (24), ரேஷ்மா காதூனுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை கந்தாம்பாளையத்தில் உள்ள நூல் மில்லில் தங்கி பணியாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில் ரேஷ்மா காதூனுக்கும், அன்கீத்குமாருக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி ஏற்பட்ட தகராறில் அன்கீத்குமார் ரேஷ்மாகாதூனை தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார்.
கொலையை மறைக்க ரேஷ்மா காதூனை நிர்வாணமாக்கி உடலை அருகே உள்ள தனியார் பள்ளி காம்பவுண்டிற்குள் வீசி விட்டு தலைமறைவானது தெரியவந்தது.
இதையடுத்து பெருந்துறை போலீசார் தலைமறைவான அன்கீத்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் பெருந்துறை பகுதியில் பதுங்கியிருந்த அன்கீத்குமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் ரேஷ்மா காதூனை கொலை செய்து வேறு இடத்தில் வீசியதை ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து கொலை செய்தல், கொலையை மறைத்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து அன்கீத்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாகி கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு கொலையாளி பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒற்றை யானை ஒன்று சாலையில் சுற்றி திரிந்தது.
- வாகன ஓட்டிகள் அச்சத்தோடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பாதையில் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.
இன்று காலை 9 மணி அளவில் வரட்டுபள்ளம் அணை அருகே ஒற்றை யானை ஒன்று சாலையில் அங்கும் இங்குமாய் சுற்றி திரிந்தது.
இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட நேரம் நின்று செல்லும் நிலை ஏற்பட்டது.தற்போது கோடை காலம் தொடங்கி இருப்பதனால் வனப்பகுதிகளுக்குள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த ஒற்றை யானை கடந்த 2 நாட்களுக்கு முன்பு வட்டக்காடு பகுதிகளில் இரவு நேரத்தில் ஊருக்குள் உலா வந்து பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையை உருவாக்கி வந்தது.
எனவே இந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டக்காடு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
- மாலை தேர் திருவிழா நடைபெறுகிறது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் கரிய காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அன்று இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து கடந்த 9-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், கொடி ஏற்ற நிகழ்ச்சியும் நடந்தது. 10-ந் தேதி மலர் அலங்காரமும், 11-ந் தேதி சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெற்றது.
பின்னர் 12-ந் தேதி பெண்கள் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், சுவாமி பரிவாரங்கள் உடன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணி அளவில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. காலை 6 மணி அளவில் குண்டம் விழா நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலை தேர் திருவிழா நடைபெறுகிறது.
தொடர்ந்து நாளை பூத வாகன காட்சியும், 15-ந் தேதி மலர் பல்லக்கு நிகழ்ச்சியும், 16-ந் தேதி குதிரை வாகனத்தில் தெப்பத்தேர் மஞ்சள் நீர் உற்சவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 17-ந் தேதி மறு பூஜை நடைபெற உள்ளது.
- திடீரென மூச்சு விடுவதில் தியாகராஜனுக்கு சிரமம் ஏற்பட்டது.
- சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி கோவலன் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (61). இவருக்கு கடந்த 6 மாத காலமாக மூச்சு திணறல் ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்காக அவர் மருந்து, மாத்திரை எடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று திடீரென மூச்சு விடுவதில் தியாகராஜனுக்கு சிரமம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின்னர் மருத்துவர் மருந்து மாத்திரை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்.
இந்நிலையில் இரவு மீண்டும் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.அவரை மீண்டும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தியாகராஜன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 32 பள்ளிக்கூடங்களுக்கு தனியார் நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.
- ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கி உள்ளனர்.
மொடக்குறிச்சி:
அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு, பள்ளிக்கு தேவையான வசதிகளை மேம்படுத்திட நம்ம ஸ்கூல் திட்டம் தமிழக முதல்-அமைச்சரால் கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலமாக அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், சமுதாய தொண்டு நிறுவனங்கள், பெற்றோர்கள், புரவலர்கள் ஆகியோரிடம் இருந்து நன்கொடைகளை பெற்று பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பள்ளிக்கு தேவையான வசதிகளை இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் நன்கொடைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் சுமார் 32 பள்ளிக்கூடங்களுக்கு பெரிய அகன்ற தொடுதிரை ஸ்மார்ட் போர்டு, கணினி, மாணவர்கள் அமரும் நாற்காலிகள், மேசைகள், இரும்பு பீரோக்கள் போன்றவைகளை தனியார் நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.
அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட நவீன தொடுதிரை கணினி மற்றும் மேசைகள், நாற்காலிகள் வழங்கியதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.
ஒவ்வொரு பள்ளிக்கும் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கி உள்ளனர்.
மொடக்குறிச்சி வட்டாரம் கஸ்பாபேட்டை ஊராட்சிக்குட்பட்ட நாத கவுண்டன் பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் தொடுதிரை கணினி அமைக்கப்பட்டு பள்ளி ஆசிரியர் தாமஸ் மாணவ- மாணவிகளுக்கு வகுப்பு பாடங்களை கற்றுக்கொடுத்தார்.
நம்ம ஸ்கூல் திட்டத்தின் மூலம் கிடைத்த பொருட்களால் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பும், மகிழ்ச்சியும் பெற்றுள்ளது.






