கரிய காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா

பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.மாலை தேர் திருவிழா நடைபெறுகிறது.
தலைமை பூசாரி குண்டம் இறங்கிய போது எடுத்த படம்.
தலைமை பூசாரி குண்டம் இறங்கிய போது எடுத்த படம்.
Published on

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் கரிய காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அன்று இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து கடந்த 9-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், கொடி ஏற்ற நிகழ்ச்சியும் நடந்தது. 10-ந் தேதி மலர் அலங்காரமும், 11-ந் தேதி சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெற்றது.

பின்னர் 12-ந் தேதி பெண்கள் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், சுவாமி பரிவாரங்கள் உடன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணி அளவில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. காலை 6 மணி அளவில் குண்டம் விழா நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலை தேர் திருவிழா நடைபெறுகிறது.

தொடர்ந்து நாளை பூத வாகன காட்சியும், 15-ந் தேதி மலர் பல்லக்கு நிகழ்ச்சியும், 16-ந் தேதி குதிரை வாகனத்தில் தெப்பத்தேர் மஞ்சள் நீர் உற்சவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 17-ந் தேதி மறு பூஜை நடைபெற உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com