என் மலர்
ஈரோடு
- எதிர்பாராத விதமாக சோப்பு தவறி தண்ணீரில் விழுந்தது.
- பிரியதர்ஷினி தண்ணீருக்குள் சென்ற போது திடீரென அவரை தண்ணீர் அடித்து சென்றது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த வெள்ளாங்கோவில், அம்மா நகரை சேர்ந்தவர் பழனியம்மாள். இவருக்கு பிரியதர்ஷினி (15) என்ற மகளும், நவீன்குமார் (13) என்ற மகனும் உள்ளனர்.
இதில் பிரியதர்ஷினி வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்து விடுமுறையில் தற்போது வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 29-ந் தேதி பழனியம்மாள் தனது மகள் பிரியதர்ஷினி மற்றும் மகன் நவீன் குமார் ஆகியோருடன் அதேப்பகுதியில் செல்லும் கீழ் பவானி வாய்க்கால் கரையில் துணி துவைத்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சோப்பு தவறி தண்ணீரில் விழுந்தது. சோப்பை எடுப்பதற்காக பிரியதர்ஷினி தண்ணீருக்குள் சென்ற போது திடீரென அவரை தண்ணீர் அடித்து சென்றது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் கதறினார். இது குறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பிரியதர்ஷினியை தேடினர். இரவு முழுவதும் தேடி பார்த்தும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை மீண்டும் உறவினர்கள் பிரியதர்ஷினியை தேடினர். அப்போது நீச்சாம் பாளையத்திலிருந்து தாசம்புதூர் செல்லும் கீழ பவானி வாய்க்காலில் துரைசாமி கோவில் அருகே பிரியதர்ஷினி பிணமாக மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சிறுவல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குட்கா பொருட்களை மூட்டை மூட்டையாக கட்டி அங்குள்ள லோடு வேனில் ஏற்றுக் கொண்டிருந்தனர்.
- போலீசார் குடோனில் மேற்கொண்ட சோதனையில் 85 மூட்டையில் 1500 கிலோ குட்கா இருந்ததது.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபாடு கொண்டிருந்தனர். அப்போது அந்தியூர்-பவானி ரோடு, செம்புளிச்சாம்பாளையம் பகுதி, கற்பகம் நகர், 3-வது குறுக்கு வீதியில் உள்ள ஒரு குடோனில் தமிழ அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பெயர் போலீசார் குடோனுக்குள் சென்று அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த சிலர் குட்கா பொருட்களை மூட்டை மூட்டையாக கட்டி அங்குள்ள லோடு வேனில் ஏற்றுக் கொண்டிருந்தனர்.
போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சேலம் மாவட்டம் மேச்சேரி பத்திரகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த அஜித் (23), ஓமலூர் திமிரிகோட்டை ராமன் பட்டியைச் சேர்ந்த மணி (30), சீலநாயக்கன்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம்(42), கார்த்தி (20) என தெரிய வந்தது.
போலீசார் குடோனில் மேற்கொண்ட சோதனையில் 85 மூட்டையில் 1500 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் இருக்கும்.
இந்த குடோனின் உரிமையாளர் பவானியை சேர்ந்த ரவி என தெரிய வந்தது. ரவி தலைமறைவு ஆகிவிட்டார்.
வெளியிடங்களில் இருந்து குட்கா கொண்டு வரப்பட்டு இங்கிருந்து பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித் ,மணி, செல்வம், கார்த்தி ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் குடோன் உரிமையாளர் ரவியை தேடி வருகின்றனர்.
ரவி சிக்கினால் தான் குட்கா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது எங்கு விற்பனை செய்யப்படுகிறது இதில் மேலும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என முழு விவரம் தெரிய வரும்.
கடத்தலுக்கு பயன்படு த்தப்பட்ட லோடு வேன் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 1500 கிலோ குட்கா பொருட்க ளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கொடிவேரி அணைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து இருந்தனர்.
- விற்பணை செய்யப்படும் மீன்களையும் ருசித்து சாப்பிட்டு சென்றனர்.
கோபி:
கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடி வேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.
இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பத ற்கும் ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராள மான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்ப த்துடன் வந்து செல்கிறார்கள்.
மேலும் திருவிழா மற்றும் விடுமுறை நாட்க ளில் வழக்கத்தை விட பொது மக்களின் கூட்டம் அதிகள வில் காணப்படும்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. சுமார் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கொடிவேரி உள்பட பல்வேறு நீர்நிலைகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சனிக்கிழ மை மற்றும் ஞாயிற்றுக்கி ழமை என தொடர் விடுமுறை நாட்கள் வந்த தால் கொடிவேரி தடுப்ப ணைக்கு வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.
கொடிவேரி அணைக்கு நேற்று சனிக்கிழமை என்ப தால் ஆயிர க்கணக்கான பொதுமக்கள் வந்து இருந்தனர்.
இதே போல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் பலர் தங்கள் குடும்பத்தி னருடன் வந்தி ருந்தனர். காலை நேரத்தில் கூட்டம் குறைந்த காணப்பட்டாலும் நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் அலை மோதியது.
தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக இளைஞர்கள் பலர் கொடி வேரி தடுப்பணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.
இதனால் இன்று கொடிவேரி எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது. குடும்ப த்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை தடுப்பணை யின் வெளி பகுதியில் அமர்ந்து சாப்பிட்ட னர்.
மேலும் அங்கு விற்பணை செய்யப்ப டும் மீன்களையும் ருசித்து சாப்பிட்டு சென்றனர்.
- விவசாயிகள் 1,445 மூட்டை கள் நாட்டுச் சர்க்கரையை கொண்டு வந்திருந்தனர்.
- மொத்தம் ரூ.29 லட்சத்து 98 ஆயிரத்து 35-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை
விற்பனைக்கூடத்தில் இருந்து நாட்டுச்சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,445 மூட்டை கள் நாட்டுச் சர்க்கரையை கொண்டு வந்திருந்தனர்.
இதில் 60 கிலோ எடையிலான மூட்டை முதல் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.2,600-க்கும், அதிகபட்சமாக ரூ.2,615-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக மூட்டை ரூ.2,430 -க்கும், அதிகபட்சமாக ரூ. 2,530-க்கும் விற்பனையானது.
இதில் மொத்தம் 70 ஆயிரத்து 800 கிலோ எடையிலான 1,180 நாட்டுச்சர்க்கரை மூட்டை கள் மொத்தம் ரூ.29 லட்சத்து 98 ஆயிரத்து 35-க்கு கொள்முதல் செய்ய ப்பட்டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- மனைவி-மகனை பிரிந்த வேதனையில் உமர் பரூக் இருந்து வந்துள்ளார்.
- தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
சேலம் மாவட்டம் சூரமங்கலம் அந்தோணிபுரம் பகுதியை சேர்ந்தவர் உமர் பரூக் (44). இவரது மனைவி ஜாபிரா பானு. இவர்களுக்கு ஜாபர் சாதிக் என்ற மகன் உள்ளார்.
உமர் பாரூக் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மனைவி-மகனுடன் கூலி வேலை செய்வதற்காக ஈரோட்டுக்கு வந்தார்.
உமர் பரூக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த 3 மாதத்துக்கு முன்பு உமர் பரூக் தனது மனைவி, மகனுடன் கோபித்து கொண்டு அவர்களை விட்டு பிரிந்து வந்து ஈரோடு பிரகாசம் வீதியில் உள்ள ஒரு லாட்ஜில் மாத வாடகைக்கு குடியிருந்து அதே பகுதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார்.
மனைவி-மகனை பிரிந்த வேதனையில் உமர் பரூக் இருந்து வந்துள்ளார். இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தான் தங்கி இருந்த லாட்ஜில் உள்ள அறையில் உமர் பரூக் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புலிகள் காப்பக பகுதியில் சட்ட விரோதமாக நுழைந்ததும் தெரிய வந்தது.
- அந்த முதியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம், ஏப்.30-
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் புலிகள் காப்பகம் உள்ளது. இந்த வனப்பகுதிகளில் கரடி, மான், சிறுத்தை யானை, புலிகள் என பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.
புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதிகளில் வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கேர்மாளம் வனச்சரகம் குத்தியாலத்தூர் காப்புக்காட்டு பகுதியில் வனச்சரகர் தினேஷ் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து ஒரு முதியவர் வந்தார்.
இதை தொடர்ந்து வனத்துறையினர் அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கர்நாடகா மாநிலம் அண்டே குருபன்தொட்டி கிராமத்தை சேர்ந்த ராம்ஜி நாயக்கர் ( வயது 50) எனவும்,.
அவர் பாதுகாக்கப்பட்ட அரசு காப்புக் காட்டு புலிகள் காப்பக பகுதியில் சட்ட விரோதமாக நுழைந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து ஆசனூர் வனக்கோட்ட துனை இயக்குனரின் உத்தரவின்படி அந்த முதியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் காப்புக் காடுகளில் அத்துமீறி நுழையக்கூடாது என வனத்துறையினர் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- மனமுடைந்த லட்சுமி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள எலவமலை, மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (53). இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மகன் பந்தல் போடும் வேலைக்கு சென்று வருகிறார். மகள் 11-ம் வகுப்பு முடித்து விட்டு கபடி விளையாட்டு பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை லட்சுமி கபடி பயிற்சிக்கு சென்று வந்த மகளிடம் இனி கபடி பயிற்சிக்கு செல்லவேண்டாம் என கண்டித்ததாக தெரிகிறது.
அதற்கு அவரது மகன் தன் தாய் லட்சுமியிடம், தங்கை விருப்பப்படி கபடி பயிற்சிக்கு போகட்டும் என கூறினார்.
இதனால் மனமுடைந்த லட்சுமி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
- இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 81.77 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மற்றும் கோவை பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.77 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,354 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2000 கன அடி திறந்து விடப்பட்ட நிலையில் இன்று முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 900 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடியும் என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 1,050 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதைப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 36.90 அடியாக உள்ளது.
30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.51 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 25.92 அடியாக உள்ளது.
- மிசாவையே தி.மு.க பார்த்துள்ளது.
- தி.மு.க கூட்டணியை ஆதரித்து பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
ஈரோடு:
தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று மாலை ஈரோட்டுக்கு வந்தார்.
ஈரோடு மாவட்ட எல்லையான விஜய மங்கலத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் சு.முத்துசாமி, அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி வெங்கடாசலம், வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், ஆகியோர் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதேப்போல் கலெக்டர் கிருஷ்ணனுண்ணியும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்றார்.
பின்னர் அமைச்சர் உதயநிதி பி.பி. அக்ரஹாரத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசா ரத்துக்கு வந்த போது 50 ஆயிரம் ஓட்டுக்கு மேல் வெற்றி பெற செய்தால் மாதம் ஒரு முறை ஈரோடு வந்து மக்களை சந்திப்பேன் என்றேன்.
சட்டசபை கூட்டத்தொடர் இருந்ததால் தாமதமாக வந்துள்ளேன். தேர்தல் வாக்குறுதியாக கூறியவற்றில் இதுவரை 90 சதவீதத்தை முதல்- அமைச்சர் நிறை வேற்றி உள்ளார்.
இன்னும் 3 ஆண்டுகள் காலம் உள்ளதால் முழுமையாக அனைத்து வாக்குறு திகளும் நிறைவேற்றப்பட்டு மேலும் புதிய திட்டங்களையும் நிறைவேற்றுவார்.
அ.தி.மு.க.வில் பல அணிகள் உள்ளன. அவர்களை வைத்து ஐ.பி.எல். போட்டி கூட நடத்தலாம். அவர்களால் மக்களுக்கான திட்டங்களை எப்போதும் கொண்டு வரவோ, பேசவோ முடி யாது.
பாராளுமன்ற த்தில் அதானி பற்றி ராகுல் பேசியதால் அவரது பதவியை பறித்தனர். முன்னாள் கவர்னர் சத்ய பால்சிங் மத்திய அரசை விமர்சித்ததால் அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடத்தினர்.
அதுபோல எங்களிடமும் வருமான வரி சோதனை நடத்தினர். இதற்காக அச்சப்படுவோர் நாங்கள் இல்லை. மிசாவையே தி.மு.க பார்த்துள்ளது.
இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணியை ஆதரித்தது போல் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் தி.மு.க கூட்டணியை ஆதரித்து பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார் .
இதில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி, இளைஞரணி மாநில துணைச் செயலாளர் கே.இ.பிரகாஷ், மேயர் நகரத்தினம், மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பி.கே.பழனிச்சாமி,
மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.திருவாசகம், மருத்துவ அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜியாவுதீன், ஈரோடு தெற்கு மாவட்ட ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணி,
பெருந்துறை நகர தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன், பேரூர் செயலாளர் அக்ரம் பி.எஸ்.திருமூர்த்தி, தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் எம்.தனசேகர்,
வி.எஸ்.சங்கர், கருங்கல்பாளையம் தி.மு.க. பிரமுகர் கேபிள் செந்தில்குமார், கவுன்சிலர் கீதாஞ்சலி செந்தில்குமார், ஈரோடு மாவட்ட ஆவின் இயக்குனர் என்.ஆர்.கோவிந்தராஜர்,
மருத்துவ அணி டாக்டர்.ஜி.யுவபால குமரன், பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- 9 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
அதிலும் குறிப்பாக கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 9 ஆக பதிவாகி வந்தது.
இந்நிலையில் நேற்றும் சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 845 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 9 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.
மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 054 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் தொடர்ந்து குணமடைந்து வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 735 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 56 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.
- ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜவித்தை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு ஸ்டேட் பேங்க் ரோடு கால்நடை மருத்துவமனை அருகே டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், ஏட்டு தியாகராஜன் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதியில் ஒரு வாலிபர் சந்தேகம் படும்படி நின்று கொண்டு இருந்தார். இதையடுத்து அவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.
இதையடுத்து போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து அவரிடம் சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சா பொட்டலம் வைத்து இருந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் பழைய பூந்துறை ரோடு பகுதியை சேர்ந்த ஜவித் (19) என்பதும், அவர் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.1,500 மதிப்புள்ள 100 கிராம் கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜவித்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விபத்தில் ஹரிகிருஷ்ணன், தனுஷ், ஹரி, முகமது ஆகிய 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
- மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த நல்லசொல்லிபாளையம் பகுதி சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் தனுஷ் (20), கொடுமுடி இலுப்பு தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஹரி (19), கொடுமுடி எஸ்.எம்.பி. நகரை சேர்ந்தவர் முகமது (22). இவர்கள் 4 பேரும் நண்பர்கள். நேற்று இரவு 11 மணியளவில் 4 பேரும் ஒரே காரில் கொடுமுடியில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை தனுஷ் ஓட்டி சென்றார்.
அப்போது கார் கோம்புபாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நாய் குறுக்கே வந்தது. நாய் மேல் மோதாமல் இருக்க தனுஷ் காரின் பிரேக்கை பிடித்துள்ளார். இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹரிகிருஷ்ணன், தனுஷ், ஹரி, முகமது ஆகிய 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் ஹரிகிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்து நடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விபத்து குறித்து மலையம்பாளையம் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே ஹரிகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






