என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாட்ஜில் தூக்குபோட்டு தற்கொலை"

    • மனைவி-மகனை பிரிந்த வேதனையில் உமர் பரூக் இருந்து வந்துள்ளார்.
    • தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் சூரமங்கலம் அந்தோணிபுரம் பகுதியை சேர்ந்தவர் உமர் பரூக் (44). இவரது மனைவி ஜாபிரா பானு. இவர்களுக்கு ஜாபர் சாதிக் என்ற மகன் உள்ளார்.

    உமர் பாரூக் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மனைவி-மகனுடன் கூலி வேலை செய்வதற்காக ஈரோட்டுக்கு வந்தார்.

    உமர் பரூக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த 3 மாதத்துக்கு முன்பு உமர் பரூக் தனது மனைவி, மகனுடன் கோபித்து கொண்டு அவர்களை விட்டு பிரிந்து வந்து ஈரோடு பிரகாசம் வீதியில் உள்ள ஒரு லாட்ஜில் மாத வாடகைக்கு குடியிருந்து அதே பகுதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    மனைவி-மகனை பிரிந்த வேதனையில் உமர் பரூக் இருந்து வந்துள்ளார். இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று தான் தங்கி இருந்த லாட்ஜில் உள்ள அறையில் உமர் பரூக் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×