என் மலர்
ஈரோடு
- கீழ்பவானி வாய்க்கால்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- செயற்பொறியாளர் கண்ணன் தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு திட்டம் 2020-ம் ஆண்டு அரசாணை எண் 276-ன் படி அறிவிக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு முதல் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. மற்றொரு விவசாய சங்கத்தினர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சீரமைப்பு பணிகள் பாதியில் நின்றது.
பின்னர் அமைச்சர் முத்துசாமி தலைமையில் 2 தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
இதற்கிடையே சீரமைப்பு பாசன பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் பாசன சபைகள் சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அரசாணை எண் 276-ன் படி கால்வாய் சீரமைப்பு பணிகளை மே மாதம் 1-ந் தேதி முதல் தொடங்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி தெளிவாக ஆணையிட்டது.
மேலும் கடந்த ஆண்டு ஒப்பந்ததாரர்கள் போட்ட வழக்கில் சீரமைப்பு பணி களை செய்யும்போது ஒப்பந்த தாரர்கள் ஊழியர்களுக்கும், எந்திரங்களுக்கும் தக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஒரு ஆணையையும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதன் அடிப்படையில் கடந்த 1-ந் தேதி முதல் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. எனினும் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் முழுமையாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி கீழ்பவானி ஆயகட்டு நில உரிமையாளர்கள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்த ப்பட்டது.
இல்லையென்றால் இன்று முதல் கோண வாய்க்கால் பகுதியில் உள்ள பொதுப்ப ணித்துறை அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணா விரத போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதே நாளில் எதிர் தரப்பை சேர்ந்த விவசாய சங்கங்களும் பொதுப்ப ணித்துறை அலுவலகத்தில் வந்து மனு கொடுப்பதாக அறிவித்திருந்தனர். இதனால் இன்று பொது பணித்துறை அலுவலகம் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது.
இந்த நிலையில் இன்று காலை கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமை யாளர்கள் சங்கத்தின் தலைவர் பெரியசாமி, செயலாளர் பொன்னையன், பொருளாளர் சிவ சபாபதி, தமிழக விவசாய சங்கத்தின் செயலாளர் சுப்பு ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவ லகத்திற்கு உண்ணாவிரத போராட்டத்திற்காக திரண்டு வந்தனர்.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் கீழ்பவானி வாய்க்கால்களில் முழுமையான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம். பழனிச்சாமி ஆகியோரும் உடன் இருந்தனர்
பின்னர் விவசாய சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டனர்.அதன்படி விவசாய சங்க பிரதிநிதிகளுடன் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எம்.பழனிசாமியும் உடன் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். செயற் பொறி யாளர் கண்ணன் தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது சீரமைப்பு பணிகள் எங்கெங்கு நடைபெறுகிறது என்ற விவரத்தை செயற்பொ றியாளர் அவர்களிடம் தெரிவித்தார். இதனை விவசாய சங்க பிரதி நிதிகளும் ஏற்றுக் கொண்டனர். இதனை அடுத்து உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
- திடீரென நடந்து சென்றவர் மயங்கி கீழே விழுந்தார்.
- பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே தென்னரசு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் தவிட்டுப்பா ளையம் பகுதியை சேர்ந்த வர் தென்னரசு (30). சம்பவத்த ன்று இவர் அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை பகுதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென நடந்து சென்றவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே தென்னரசு இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.
- தாமரை கரைக்கும்-வரட்டுப்பள்ளம் இடைப்பட்ட சாலையில் நடுவே லாரி பழுதாகி நின்றது.
- இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அந்தியூர்:
அந்தியூர் பர்கூர் சாலை வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லக்கூ டிய பிரதான சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக சென்றால் கர்நா டக மாநிலத்திற்கு குறைந்த தூரம் என்பதாலும், திம்பம் மலைப்பாதை வழியாக சென்றால் 27 கொண்டை ஊசி வளைவுகள் கடந்து செல்ல வேண்டும்.
ஆனால் அந்தியூர் பர்கூர் மலைப்பாதை வழியாக சென்றால் 2 வளைவுகள் மட்டுமே உள்ளது.
தற்போது சாலைகள் விரி வாக்கம் செய்யப்பட்டு ள்ளதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் பெருந்துறையில் இருந்து அந்தியூர் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது தாமரை கரைக்கும்-வரட்டு ப்பள்ளம் ேசாதனை சாவடி க்கும் இடைப்பட்ட சாலை யில் நடுவே லாரி பழுதாகி நின்றது.
இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் இருபுறங்களி லும் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
இதனையடுத்து லாரி யில் வந்த நபர்களே சாலை யின் ஓரப்பகுதியில் உள்ள கற்களை அகற்றி வாகன ங்கள் போகும் வகையில் சரி செய்து கொடுத்தனர்.
இதனை அறிந்த பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடனடி யாக போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.83 அடியாக உள்ளது.
- குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் 35.54 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.83 அடியாக உள்ளது. அணை க்கு வினாடிக்கு 968 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 950 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 35.54 அடியாக உள்ளது.
30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.21 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 26.57 அடியாக உள்ளது.
- ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 22923 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.
- இது 94.73 சதவீத தேர்ச்சி ஆகும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 10753 மாணவர்களும், 12170 மாணவிகளும் என மொத்தம் 22923 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.
இதில் மாணவர்களில் 10353 பேரும், மாணவிகளில் 11878 பேரும் என மொத்தம் 22231 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 96.98 சதவீத தேர்ச்சி ஆகும்.
ஈரோடு மாவட்டத்தில் 96.28 மாணவர்களும், 97.60 மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
அரசு பள்ளிகளில் 5190 மாணவர்களும் 6726 மாணவிகளும் என மொத்தம் 11916 பேர் தேர்வு எழுதியதில் மாணவர்கள் 4836 பேர் தேர்சி அடைந்து உள்ளனர்.
மாணவிகள் 6452 தேர்ச்சி அடைந்து உள்ளனர். மொத்தம் 11288 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 94.73 சதவீத தேர்ச்சி ஆகும்.
- சோதனையில் அனுமதியின்றி மது விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- 96 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சத்தி-மைசூர் ரோடு காரப்பள்ளம் சோதனை சாவடியில் ஆசனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கர்நாடகாவில் இருந்து தமிழகம் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டி ருந்தது. பஸ்சில் இருந்த பயணிகளிடம் போலீசார் சோதனை நடத்தி கொண்டிருந்தபோது ஒரு வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து அவரது பையை சோதனை செய்ததில் கர்நாடகா அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு வாங்கி வந்து சட்ட விரோதமாக விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அந்த வாலிபர் கோவை சேனைக்கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த தமிழரசன் (30) என தெரிய வந்தது. இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர். அவரிடமிருந்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேப்போல் நேற்று ஒரே நாளில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் அனுமதியின்றி மது விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 96 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கொரோனா பாதிப்புடன் 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
கடந்த சில நாட்களாக பாதிப்பை விட குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 880 உள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.
மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 117 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 736 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- பவானி நகர தி.மு.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- இது போன்று பல திட்டங்களை முதல்-அமைச்சர் மக்களுக்காக செய்து வருகிறார்.
பவானி:
பவானி நகர தி.மு.க. சார்பில் பவானியில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொது க்கூட்டம் நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமை வகித்தார். அவை த்தலைவர் மாணிக்கராஜ், நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன், நகர பொருளாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பவானி நகர தி.மு.க. செயலாளர் நாகராசன் வரவேற்று பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பா ளராக ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான முத்துசாமி கலந்து கொண்டு 2 ஆண்டு கால ஆட்சியின் சிறப்பை பற்றி கூடியிருந்த மக்களிடையே விளக்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
276 கோடி முறை பெண்கள் பஸ்சில் பயணம் செய்துள்ளதாகவும், அதன் மூலம் 4426 கோடி ரூபாய் அரசிற்கு செலவு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த தொகை பெண்களுக்கு சேமிப்பாக உள்ளது. அரசு அதை ஏற்று கொண்டு உள்ளது எனவும், அதேபோல் முதல்- அமைச்சர் இலவசம் என கூற கூடாது கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் பெண்கள் என கூறுங்கள் என அறிவுறுத்தி பேசினார்.
தற்போது 6-ம் வகுப்பு சேர்க்கை உயர்ந்துள்ளது. 8-ம் வகுப்பு இடையில் நின்ற மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கல்லூரியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை கூடியுள்ளது. சாதாரண மக்கள் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும். எதிர்காலத்தில் அவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என நினைக்கி ன்றனர். தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்பு படிக்கும் மாணவர்கள் குறைந்து வருகின்றனர்.
வடமாநிலத்தில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் நம் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகமாக படிக்கும் மாணவர்கள் இல்லாமல் போய்விடும். இதற்காக முதல்-அமைச்சர் இந்த தேர்வு நடக்கும் முன்னதாக பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன் முறையாக ரூ.7,500, 2-வது முறையாக தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.25,000 வழங்கி வருகிறார்.
ஏனென்றால் அவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும் எனவும், நம் மாநில மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று பல்வேறு மாநிலங்களில் பணியாற்ற வேண்டும் என இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இது போன்று எண்ணற்ற பல திட்டங்களை இந்த 2 ஆண்டில் முதல்-அமைச்சர் மக்களுக்காக செய்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. பி.ஜி.நாராயணன், மாவட்ட துணைச்செயலாளர் அறிவானந்தம், மாவட்டத்துணை அமைப்பாளர் சுப்பிரமணி, முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் தவமணி, உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பவானி நகர துணைச்செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.
- அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் 2 நாட்கள் கால்நடை சந்தை கூடியது.
- சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் 2 நாட்கள் கால்நடை சந்தை கூடியது.
அந்தியூர், அத்தாணி, வெள்ளித்திருப்பூர், பர்கூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மாடுகளும், எருமை மாடுகளும் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.
இதில் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 41 ஆயிரம் ரூபாய் வரை மாடுகளும், 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 46 ஆயிரம் ரூபாய் வரை எருமை மாடுகளும் விற்பனை செய்யப்பட்டது.
2 நாட்கள் கூடிய கால்நடை சந்தையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டு ரூ.1 கோடியே 40 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என வியாபாரிகள் கூறினார்.
- புதுப்பாளையம் வாழைத்தார் விற்பனை நிலையத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது.
- ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் வாழைத்தார் விற்பனை நிலையத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் ஒரு கிலோ கதலி 18 ரூபாய்க்கும், நேந்திரம் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் பூவன் தார் ஒன்று 320 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 500 ரூபாய்க்கும், தேன் வாழை தார் ஒன்று 470 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 260 ரூபாய்க்கும்,
ரொபஸ்டோ தார் ஒன்று 380 ரூபாய்க்கும் ரஸ்தாலி தார் ஒன்று 520 ரூபாய்க்கும் விற்பனையானது.
மொத்தம் 3 ஆயிரம் வாழைத்தார் கொண்டு வரப்பட்ட நிலையில் ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
- சந்தேகப்படும்படியாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நின்றது.
- போலீசார் சோதனை நடத்தியதில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கவுந்தப்பாடி-காஞ்சிக்கோவில் பிரிவு பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நின்றது. அதை ஓட்டி வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் திருச்சி மாவட்டம் உறையூர் முஸ்லீம் வீதியை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பதும், பெருந்துறை பெத்தாம்பாளையத்தை சேர்ந்த தர்மராஜ் (33) என்பதும் தெரியவந்தது.
இவர்களின் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் போலீசார் சோதனை நடத்தியதில், அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா பொட்டலங்களை விற்ப னைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அப்துல் ரகுமான், தர்மராஜ் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 4 கிலோ கஞ்சா பொட்ட லங்கள் மற்றும் கார், மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஈரோடு மரப்பாலம் நடராஜா தியேட்டர் பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை யில் ஈடுபட்டிருந்த மரப்பா லம் ஆலமரத்து வீதியை சேர்ந்த தினேஷ் என்ற கொசு தினேஷ் (24) என்பவரை ஈரோடு டவுன் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
- பணியாற்றும் சாலை பணியாளர்களுக்கு மழை கோட்டு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.
- 100 பேரை கோபிசெட்டிபாளையம் போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.
கோபி:
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கோபி கோட்ட பொறியாளரை கண்டித்தும், சாலை பணியாளர்களின் ஒட்டு மொத்த முதுநிலை பட்டியல் வெளியிட்டதில் விதிமுறைகள் பின்பற்றவில்லை என்றும் எனவே அந்த பட்டியலை மாற்றி அமைக்க வேண்டும், கோபி கோட்டம், நம்பியூர் கோட்டத்தில் பணியாற்றும் சாலை பணியாளர்களுக்கு மாநகர ஈட்டுப்படியினை விரைந்து வழங்க வேண்டும்.
கோபி கோட்டத்தில் பணியாற்றும் சாலை பணியாளர்களுக்கு மழை கோட்டு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். 20 வருட பணி தொடர்ச்சியினை நிறைவு செய்தவர்களுக்கு சிறப்பு நிலை எய்தியமைக்குரிய ஆணையும், ஊதிய பலன்களும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக கோபி செட்டிபாளையம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் போராட்டம் நடத்தி வந்தனர்.
தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அவர்கள் போராட்டம் நடத்தி சென்றனர்.
சாலை பணியாளர்கள் இன்று காலை 5-வது நாளாக போராட்டம் நடத்த கோபி செட்டிபாளையம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் திரண்டனர். அப்போது சாலை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், 8 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 100 பேரை கோபிசெட்டிபாளையம் போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி ஒரு மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.






