மயங்கி விழுந்து வாலிபர் பலி

திடீரென நடந்து சென்றவர் மயங்கி கீழே விழுந்தார்.பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே தென்னரசு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மயங்கி விழுந்து வாலிபர் பலி
Published on

அந்தியூர்:

அந்தியூர் தவிட்டுப்பா ளையம் பகுதியை சேர்ந்த வர் தென்னரசு (30). சம்பவத்த ன்று இவர் அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை பகுதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென நடந்து சென்றவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே தென்னரசு இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com