என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை தடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
    • போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை தீவிர மாக கண்காணிக்க வேண்டும்.

    பு.புளியம்பட்டி, 

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் பதவி ஏற்ற பின் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தர விட்டார்.

    மேலும் கஞ்சா, கள்ளச்சா ராயம், லாட்டரி சீட்டு, குட்கா மற்றும் ரவுடிகள் செயல்பாடு போன்ற சட்ட விரோத செயல்களை ஒழிக்கவும், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற ங்களை தடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை தீவிர மாக கண்காணிக்க வேண்டும். மற்றும் பொது மக்கள் புகார் மற்றும் அவர்களது பிரச்சினைகள் குறித்து உடனடியாக நடவடி க்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    இதையடுத்து புளிய ம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் சப்-இன்ஸ்பெ்கடர் ரபி மற்றும் போலீசார் நேற்று இரவு பவானிசாகர் ரோடு, கோவை சாலை, நால்ரோடு சோதனை சாவடி, நம்பியூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து இரவு நேர வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வாகன ங்களின் ஆர்.சி. புத்தகம், இன்சூரன்ஸ் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்தும் மற்றும் வாகனங்களையும் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    • குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக வெளியேறது.
    • நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்தனர்.

    கோபி, 

    கோபிசெட்டிபாளையம் நகராட்சியல் 30 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிக்கு நஞ்சை புளியம்பட்டி பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் குழாய் மூலம் எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நிரப்பி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோபி செட்டி பாளையம் கால்நடை ஆஸ்பத்திரி முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக வெளியேறது. மேலும் அந்த தண்ணீர் அருகில் இருந்த கால்நடை ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி குளம் போல் மாறியது.

    இதுப்பற்றி தெரியவந்ததும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்தனர். பின்னர்அவர்கள் குடிநீரை நிறுத்தி விட்டு குழாய் உடைப்பை செய்தனர். பின்னர் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த குடிநீர் குழாய் உடைப்பால் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியமாக மாறியது.

    • பார்த்திபனை விட்டு பிரிந்து அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
    • பவித்ராவை பார்த்து விட்டு வந்து இரவு வீட்டில் தூங்கினார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி நேரு நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பார்த்திபன்(32). தொழிலாளி. இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன் பவித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது.

    கருத்து வேறுபாடு காரணமாக பவித்ரா, பார்த்திபனை விட்டு பிரிந்து அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். கடந்த 6-ந் தேதி பார்த்திபன் கள்ளிப்பட்டியில் உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு சென்று பவித்ராவை பார்த்து விட்டு வந்து இரவு வீட்டில் தூங்கினார்.

    மறுநாளான நேற்று பார்த்திபனை எழுப்ப அவரது அம்மா அமிர்தவேணி சென்றார். அப்போது பார்த்திபன் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • பவானிசாகா் பங்களாமேடு பகுதியில் தங்கி நெசவு தொழில் செய்து வந்தார்.
    • அவர் வேலை பார்த்த இடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சாவக்காட்டுபாளையம் தெற்கு வீதியை சேர்ந்தவர் மோகன்ராஜன்(40). நெசவு தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் உள்ளது. மோகன்ராஜன் கடந்த 3 மாதமாக பவானிசாகா் பங்களாமேடு பகுதியில் தங்கி நெசவு தொழில் செய்து வந்தார்.

    மோகன்ராஜன் அவரது நண்பர்களிடம் கடன் வாங்கி, அதனை திரும்ப செலுத்த முடியாமல் இருந்து வந்தார்.கடனை திரும்ப செலுத்த முடியாத மனவேதனையில் இருந்த மோகன்ராஜன் நேற்று அவர் வேலை பார்த்த இடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அணைக்கு வினாடிக்கு 126 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • 1005 கன அடி தண்ணீ ர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு, 

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8மணி நிலவரப்படி 80.97 அடியாக இருந்தது.

    அணைக்கு வினாடிக்கு 126 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வாய்க்காலுக்கு 5 கன அடியும், தடப்பள்ளி அரக்கன் கோட்டைக்கு 800 கன அடியும், குடிநீருக்காக 200 கன அடியும் என மொத்தம் 1005 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 32.65 அடியா கவும், பெரும்ப ள்ளம் அணையின் நீர்மட்டம் 22.44 அடியாக வும், வரட்டு ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23.39 அடியாகவும் உள்ளது.

    • சோதனை சாவடி பகுதி மிகவும் குளிர்ச்சியாக இருக்கக்கூடிய பகுதியாகும்.
    • ஆண் மயில் ஒன்று தனது தோகையை விரித்து ஆடி கொண்டிருந்தது.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்து வரட்டுப்பள்ளம் அணை உள்ளது.

    இந்த அணையின் அருகே உள்ள ேசாதனை சாவடி பகுதி மிகவும் குளிர்ச்சியாக இருக்கக்கூடிய பகுதியாகும். இந்த பகுதியில் மயில்கள் அதிக அளவில் உள்ளது. அவ்வப்போது மயில்கள் அந்த பகுதியில் உள்ள விலை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும் சேதப்படுத்தியும் வருகிறது.

    இந்த நிலையில் மாலை நேரத்தில் ஆண் மயில் ஒன்று தனது தோகையை விரித்து ஆடி கொண்டிருந்தது. இதனை அந்தப் பகுதியில் சென்றவர்கள் பார்த்து ரசித்தனர்.

    மேலும் தங்களது செல்போனில் படம் பிடித்து நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தனர். மயில் தோகை விரித்து ஆடினால் மழை வரும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். அதே போல் மயில் ேதாகை விரித்து ஆடியதும் அந்தப் பகுதியில் சிறிது நேரம் மழையும் தூறியது.

    • கடந்த 6-ந் தேதி மதுபோதையில் வீட்டிற்கு வந்தவர்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று மகாலிங்கம் உயிரிழந்தார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் பவானி கல்தொழிலாளர் முதல் வீதியை சேர்ந்தவர் மகாலிங்கம்(54). தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மகாலிங்கம் கடந்த 6-ந் தேதி மதுபோதையில் வீட்டிற்கு வந்தவர்.

    அவர் சாப்பிடும் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது தம்பி குமார், மகாலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மகாலிங்கம் உயிரிழந்தார். இதுகுறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விளையாடி வந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
    • அவர்களிடம் இருந்த ரூ.5,350 ரொக்க பணம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், டவுன் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையிலான போலீசார் நேற்று அங்கு விரைந்து சென்று பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில், அவர்கள், ஈரோடு கருங்கல்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த அலாவுதீன்(45), கலைஞர் நகரை சேர்ந்த சபரி(25), பெரியசேமூரை சேர்ந்த சேகர்(50), பெரியமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பொன்னுசாமி(51), நாடார்மேட்டினை சேர்ந்த பாலகிருஷ்ணன்(41), மணல்மேட்டினை சேர்ந்த சண்முகம்(58) ஆகிய 6 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.5,350 ரொக்க பணம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    • சுவாமி விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யும் விழா நடந்தது,
    • ஆராதனை வழிபாடு செய்து சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப ட்டது.

    சென்னிமலை, 

    சென்னிமலை அடுத்து ள்ள முருங்கத்தொ ழுவில் மிக பழமையான பிரம்மன் பூஜித்த தலமாக அமைந்து ள்ள வடிவுள்ள மங்கை உடனமர் பிரம்மலிங்கே ஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு பக்தர்களால் காணி க்கையாக அளிக்கப்பட்ட நடராஜர், சிவகாமசுந்தரி மற்றும் ரிஷப வாகனத்துடன் நின்ற மேனியில் பிரதோஷ நாயனார் (சந்திரசேகர மூர்த்தி) ஆகிய சுவாமி விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யும் விழா நடந்தது,

    இதில் காலையில் கோவில் பரம்பரை அர்ச்சகர் சிவகாம திலகம் அமிர்லிங்க சிவச்சாரியார் தலைமையில் விநாயகர் வழிபாடு மற்றும் சிறப்பு யாக பூஜை மற்றும் புதிய சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீப ஆராதனை வழிபாடு செய்து சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த விழாவில் 20-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் வசித்த பஞ்ச வாத்தியம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பொதுமக்கள் வெயிலுக்கு கூட ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
    • சுங்கச்சாவடி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    அம்மாபேட்டை, 

    ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து தொப்பூர் வரையுள்ள சாலை 85 கிலோ மீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்காக 7 மீட்டர் அகலம் கொண்ட இந்த சாலையை 10 மீட்டராக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.

    இதற்காக பவானியில் இருந்து தொப்பூர் வரை ரோட்டின் இருபுறமும் உள்ள சுமார் 950 மரங்கள் வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது. ரோட்டின் இருபுறமும் பசுமையாக காட்சி அளிக்கும் இந்த மரங்கள் தற்போது வெட்டப்பட்டு வருவதால் எதிர்காலத்தில் இந்த பகுதியில் பொதுமக்கள் வெயிலுக்கு கூட ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் சாலை விரிவாக்க பணியின் காரணமாக அம்மாபேட்டை உள்ளிட்ட 2 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக ரோட்டின் இருபுறங்களிலும் தலா 1.50 மீட்டருக்கு தார்சா லையும், மண் சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது அகலப்படு த்தப்பட்டு வரும் இந்த ரோட்டில் டோல்கேட் அமைப்பதற்கான தகுதி இல்லை என்று சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கூறி வருகின்றனர்.

    மேலும் இந்த டோல்கேட் அமைப்பதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

    • ஒரு நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • 30 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    பவானி, 

    பவானி அருகிலுள்ள போத்த நாயக்கனூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் பவானி போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது சுடுகாடு மறைவாக உள்ள இடத்தில் சந்தேகத்திற்க்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த ஒரு நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்து இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பவானி, சின்னமோளபாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வரும் மணி (45) என்பவரை பவானி போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 30 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    • சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
    • இறந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இக்கரை நெகமம் கெஞ்சனூர் பகுதியில் ஓடும் பவானி ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் உடல் மிதந்து கொண்டிருப்பதாக வி.ஏ.ஓ. ராஜசேகரன், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதன்பேரில், சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்த நபருக்கு சுமார் 55 வயது இருக்கும் எனவும், இறந்த நபர் வெள்ளை நிற கட்டம் போட்ட சட்டை, சிமெண்ட் நிற அரைக்கால் டிராயர் அணிந்துள்ளார்.

    ஆனால், இறந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×