அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று தொழிலாளி தற்கொலை

கடந்த 6-ந் தேதி மதுபோதையில் வீட்டிற்கு வந்தவர்.சிகிச்சை பலனின்றி நேற்று மகாலிங்கம் உயிரிழந்தார்.
அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று தொழிலாளி தற்கொலை
Published on

ஈரோடு, 

ஈரோடு மாவட்டம் பவானி கல்தொழிலாளர் முதல் வீதியை சேர்ந்தவர் மகாலிங்கம்(54). தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மகாலிங்கம் கடந்த 6-ந் தேதி மதுபோதையில் வீட்டிற்கு வந்தவர்.

அவர் சாப்பிடும் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது தம்பி குமார், மகாலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மகாலிங்கம் உயிரிழந்தார். இதுகுறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com