மது விற்றவர் கைது

ஒரு நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 30 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மது விற்றவர் கைது
Published on

பவானி, 

பவானி அருகிலுள்ள போத்த நாயக்கனூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் பவானி போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது சுடுகாடு மறைவாக உள்ள இடத்தில் சந்தேகத்திற்க்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த ஒரு நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்து இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பவானி, சின்னமோளபாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வரும் மணி (45) என்பவரை பவானி போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 30 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com