பவானி ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் உடல்

சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.இறந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
பவானி ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் உடல்
Published on

ஈரோடு, 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இக்கரை நெகமம் கெஞ்சனூர் பகுதியில் ஓடும் பவானி ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் உடல் மிதந்து கொண்டிருப்பதாக வி.ஏ.ஓ. ராஜசேகரன், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதன்பேரில், சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்த நபருக்கு சுமார் 55 வயது இருக்கும் எனவும், இறந்த நபர் வெள்ளை நிற கட்டம் போட்ட சட்டை, சிமெண்ட் நிற அரைக்கால் டிராயர் அணிந்துள்ளார்.

ஆனால், இறந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com