தோகை விரித்து ஆடிய மயில்

சோதனை சாவடி பகுதி மிகவும் குளிர்ச்சியாக இருக்கக்கூடிய பகுதியாகும். ஆண் மயில் ஒன்று தனது தோகையை விரித்து ஆடி கொண்டிருந்தது.
தோகை விரித்து ஆடிய மயில்
Published on

அந்தியூர், 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்து வரட்டுப்பள்ளம் அணை உள்ளது.

இந்த அணையின் அருகே உள்ள ேசாதனை சாவடி பகுதி மிகவும் குளிர்ச்சியாக இருக்கக்கூடிய பகுதியாகும். இந்த பகுதியில் மயில்கள் அதிக அளவில் உள்ளது. அவ்வப்போது மயில்கள் அந்த பகுதியில் உள்ள விலை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும் சேதப்படுத்தியும் வருகிறது.

இந்த நிலையில் மாலை நேரத்தில் ஆண் மயில் ஒன்று தனது தோகையை விரித்து ஆடி கொண்டிருந்தது. இதனை அந்தப் பகுதியில் சென்றவர்கள் பார்த்து ரசித்தனர்.

மேலும் தங்களது செல்போனில் படம் பிடித்து நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தனர். மயில் தோகை விரித்து ஆடினால் மழை வரும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். அதே போல் மயில் ேதாகை விரித்து ஆடியதும் அந்தப் பகுதியில் சிறிது நேரம் மழையும் தூறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com