என் மலர்tooltip icon

    ஈரோடு

    • படுகாயம் அடைந்த மாதேஸ்வரி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • விபத்து குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பொம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி மாதேஸ்வரி (50). இவர்களது ஒரே மகன் சிவானந்தம் (18).

    இந்நிலையில் நேற்று காலை மாதேஸ்வரி தனது மகன் சிவானந்தத்துடன் அவிநாசியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் நேற்று இரவு உறவினர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சிவானந்தத்துடன் மாதேஸ்வரி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சிவானந்தம் மோட்டார் சைக்கிள் ஓட்ட பின்னால் மாதேஸ்வரி அமர்ந்து வந்து கொண்டிருந்தார்.

    நம்பியூர் பவர் ஹவுஸ் மேடு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர் திசையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நூற்பாலையில் வேலை செய்யும் தொழிலாளி தீபக் (எ) திம்பா செட்டோம் தான் தங்கி இருக்கும் விடுதிக்கு செல்வதற்கு மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிவானந்தம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், தீம்பா செட்டோம் ஓடி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    இது குறித்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவக் குழுவினர் படுகாயம் அடைந்த மாதேஸ்வரி மற்றும் சிவானந்தம் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    பின்னர் இருவரையும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைப்போல் படுகாயம் அடைந்த வடமாநில வாலிபர் தீம்பா செட்டோமை சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இந்நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவானந்தம் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அதேபோல் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தீம்பா செட்டோமும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். படுகாயம் அடைந்த மாதேஸ்வரி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து நம்பியூர் போலீசார் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சரியான நேரத்திற்கு இந்தப் பஸ் தினமும் வருவதால் இவர்கள் அனைவருக்கும் திருப்பூருக்கு சரியான நேரத்தில் வேலைக்கு சென்று வருகின்றனர்.
    • கொரோனா தாக்கம் காரணமாக சில வருடங்களாக இந்த கடாய் வெட்டி கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெறவில்லை.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து தினமும் காலை 6:40 மணி க்கு திருப்பூர் வழியாக தேனி வரை அரசு பஸ் ஒன்று செல்லும். இந்த பஸ்சில் தினமும் பண்ணாரி, ராஜநகர் ஆகிய ஊர்களில் இருந்து சுமார் 36 பயணிகள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக இந்த பஸ்சில் பயணம் செய்து திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.

    சரியான நேரத்திற்கு இந்தப் பஸ் தினமும் வருவதால் இவர்கள் அனை வருக்கும் திருப்பூருக்கு சரியான நேரத்தில் வேலைக்கு சென்று வருகின்றனர். இதனால் இந்த 36 பயணிகளும் சேர்ந்து ஆண்டு தோறும் இந்த அரசு பஸ்சிற்காக ஆடி மாதம் கிடாய் வெட்டி கொண்டாடி வந்தனர். ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக சில வருடங்களாக இந்த கடாய் வெட்டி கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெறவில்லை.

    இதையடுத்து இந்த வருடம் கிடாய் வெட்டி கொண்டாட பயணிகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று 36 பயணிகளும் சேர்ந்து கிடாய் ஒன்றை வாங்கினர். அரசு பஸ்சுக்கு மாலை அணிவித்து, சந்தனமிட்டு பஸ் முன்பு பூஜை நடத்தி பின்பு கிடாய் வெட்டினர். இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    இந்த பஸ்சானது தினமும் காலை 6.40 மணிக்கு சத்தியமங்கலத்தில் இருந்து புறப்பட்டு 7.10 மணிக்கு பண்ணாரி சென்றடைகிறது. அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் செல்கிறது. பின்னர் அங்கிருந்து தேனிக்கு மதியம் 2.45 மணிக்கு செல்கிறது. இதைப்போல் தேனியில் 3 மணிக்கு கிள ம்பும் அரசு பஸ் திருப்பூருக்கு 7.40 மணிக்கு வருகிறது. அங்கிருந்து வேலையை முடித்து இந்த 36 பயணிகள் இந்த பஸ்சில் ஏறி இரவு 10 மணி அளவில் சத்தியம ங்கலத்துக்கு வருகின்றனர். 

    • குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கருமாண்டிசெல்லி பாளையம், காஞ்சிக்கோவில் ரோடு தாய் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி நாகமணி.

    இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். 2-வது ஆண் குழந்தை ஆகாஷ் (11 மாதம்). சதீஷ்குமார் பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு நாகமணி டியூசனில் படிக்கும் முதல் மகனை கூப்பிட சென்று விட்டார். வீட்டில் சதீஷ்குமார் மற்றும் 11 மாத ஆண் குழந்தை ஆகாஷ் மற்றும் இருந்தனர். சதீஷ்குமார் அலுப்பில் தூங்கிவிட்டார். 11 மாத குழந்தை ஆகாஷ் வீட்டில் விளையாடி கொண்டிருந்தான்.

    அப்போது வீட்டில் 20 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் வாளி இருந்துள்ளது. அந்த வாளியில் தண்ணீரும் இருந்துள்ளது. அப்போது ஆகாஷ் வாளியை பிடித்து எழுந்து நிற்க முயன்று உள்ளான்.

    அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை ஆகாஷ் வாளிக்குள் தவறி விழுந்து விட்டான். இதையாரும் கவனிக்கவில்லை. டியூசனுக்கு சென்று தனது முதல் மகனை அழைத்து வந்த நாகமணி வீட்டிற்குள் வந்துள்ளார். அப்போது வீட்டில் குழந்தை ஆகாஷ் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவர் கூச்சலிட்டதை கேட்டு சதீஷ்குமார் பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தார். பின்னர் பெற்றோர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கருமாண்டி செல்லிபாளையத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதைக் கேட்டு பெற்றோர் கதறி அழுதனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து 11 மாத ஆண் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் அப்படியே வெளி யேற்றப்பட்டு வருகிறது.
    • உப்பு தன்மையும் அதிகரித்து விட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. இந்த அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் பகுதியில் செயல்படும் சாயத் தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்து வந்ததால் ஒரத்துப்பாளையம் அணை முற்றிலும் மாசுபட்டது.

    இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    அதன்பேரில், அணைக்கு வரும் தண்ணீரில் சாயக்கழிவின் அளவு ஜீரோ டிஸ்சார்ஜாக இருக்கும் வரை அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    அதன்படி பல வருடங்களாக ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் அப்படியே வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    ஆனால் மழைக்காலங்களில் திருப்பூர் பகுதியில் இருந்து மழை நீரோடு சாக்கடை கழிவுகள் கலந்து வந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    கடந்த மாதத்தில் மழை வெள்ள நீர் அதிகமாக வந்ததால் சாயக்கழிவுகளே இல்லாமல் சுத்தமான தண்ணீராக நொய்யல் ஆற்றில் ஓடியது. அப்போது உப்பு தன்மை 440 டி.டி.எஸ் என்ற அளவில் இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீடிக்க வில்லை. நேற்று காலை நொய்யல் ஆற்று தண்ணீரில் உப்பு தன்மை 1520 டி.டி.எஸ்.சாக உயர்ந்துள்ளது.

    தற்போது நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் கலந்து நுங்கும், நுரையுமாக செல்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இது குறித்து ஆற்றங்கரையோர விவசாயிகள் கூறுகையில், நல்ல தண்ணீராக நொய்யல் ஆற்றில் ஓடியது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம்.

    ஆனால் திருப்பூர் பகுதி சாய ஆலை, சாயக்கடை கழிவுநீரால் மீண்டும் நொய்யல் ஆற்றில் கருப்பு நிறத்தில் தண்ணீர் செல்கிறது. உப்பு தன்மையும் அதிகரித்து விட்டது.

    இனி இந்த தண்ணீரில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பதே சிரமம் என்றனர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் காளைமாடு சிலை அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சூரம்பட்டி பாரதிபுரம் யுவராஜ் (வயது 37), என்பவரை போலீசார் கைது செய்தனர். மூலப்பாளையம் பழனி குமார் என்பவர் தலைமறைவாகி விட்டார்.

    மேலும் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார்சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
    • சிகிச்சையில் இருந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டை வேடிச்சி வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28). வெல்டிங் பட்டறை தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று மாலை நெரிஞ்சிப் பேட்டையில் இருந்து பூனாச்சிக்கு மோட்டார் சைக்கிளில் தனது நண்பர்களான நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த கேசவன் (24), பாரதி (19) ஆகியோரை பின்னால் அமர வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.

    அந்தியூர் ரோட்டில் அம்மாபேட்டையை அடுத்து செலம்பனூர் பிரிவு அருகில் சென்ற பொழுது எதிரே வந்த மோட்டார்சைக்கிளும் மணிகண்டன் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

    இதில் மணிகண்டன் பலத்த காயமடைந்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பித்தனர்.

    இந்நிலையில் சிகிச்சையில் இருந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இறந்து போன மணிகண்டனுக்கு சம்பூர்ணம் என்ற மனைவியும், 2 வயதில் குழந்தையும் உள்ளனர். இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • உலக யானைகள் தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • இதில் வனவிலங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்தில் உலக யானைகள் தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    பள்ளி மாணவ-மாணவிகளுடன் இணைந்து வனத்துறையினர் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். இதில் வனவிலங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குனர் சுதாகர் வனச்சரகர் பாண்டிராஜன் மற்றும் வனத்துறையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சிகிச்சை பெற்று வந்த மாதேஸ் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    • பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    அந்தியூர்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் அடுத்த மாக்கம்பாளையம் பகுதியை சுரேஷ் (18). இவர் மற்றும் மாக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த மகேஷ் (19) ஆகிய இருவரும் மாக்கம் பாளை யத்தில் இருந்து உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அந்தியூர் அடுத்த பர்கூர் பகுதிக்கு சென்றனர்.

    அவர்கள் அந்தியூர் அருகே வரட்டு பள்ளம் அணை செக்போஸ்ட் மலை அடி வார பகுதியில் இருந்து பர்கூர், மைசூருக்கு ரோட்டில் மலைப்பாதை வழியாக சென்று கொண்டி ருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரி யாத ஒரு வாகனம் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் இறந்தார். இதில் மாதேஷ் படுகாயம் அடைந்த மாதேஷ் மீட்க ப்பட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல் சிகி ச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த மாதேஸ் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    • பவானி வட்ட வழங்கல் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மனு வழங்கினர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள ஊராட்சிக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி பவானி வட்ட வழங்கல் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

    பவானி வட்ட வழங்கல் அலுவலர் பாலமுருகாயி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் ஊராட்சிக் கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களின் ரேஷன் கார்டில் பெயர் நீக்கல், பெயர் சேர்த்தல் போன்றவற்றிக்கு மனு வழங்கினர்.

    அதேபோல் தாங்கள் வைத்திருந்த ரேஷன் கார்டு காணாமல் போயிருந்தால் பழைய ரேஷன் கார்டு ஜெராக்ஸ் மற்றும் உரிய ஆவணங்களளை கொண்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தால் அவர்களின் முகவரிக்கு ரேஷன் கார்டு கிடைக்க பெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கான மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரணத்தால் இந்த முகாமில் புதிய ரேஷன் கார்டு வேண்டி எந்த ஒரு மனுவும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இந்த முகாமில் ஊராட்சி கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் குணசேகரன், எழுத்தர் ஈஸ்வரன், ரேஷன் கடை விற்பனையாளர் ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோபாலகிருஷ்ணன் சம்பவத்தன்று திராவகத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
    • ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ஈரோடு:

    ஈரோடு குறிக்காரன் பாளையம் சரவணபவன் 2-வது வீதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (57). பருப்பு வியாபாரி. இவரது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், கடந்த சில மாதங்களாக வியாபா ரத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    வியாபாரத்திற்காக வாங்கிய பணத்தை செலுத்த முடியாமல் மனவேதனையில் இருந்த கோபாலகிருஷ்ணன் சம்பவத்தன்று வீட்டில் கழிப்பறையை சுத்தம் செய்யும் திராவகத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் கோபால கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிக்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் கோபி, சித்தோடு, சென்னிமலை, சத்தியமங்கலம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த கோபி மொடச்சூர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 21),

    சித்தோடு அம்மன் நகரை சேர்ந்த பாலநாதகுமார் (50), சென்னிமலை பாரதிநகரை சேர்ந்த சுப்ரமணி (57), சக்தி வடக்கு பேட்டையை சேர்ந்த இன்பராஜ் (53) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் இருந்த போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 46 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பதாக ஈரோடு டவுண், கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அரசு அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த பெருந்துறை மேட்டுப்புதுரை சேர்ந்த சுரேஷ் (வயது 38), நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த பைரவன் (49), மதுரை மாவட்டம் ஆண்டி ப்பட்டி சேர்ந்த சுரேஷ்பவன் (42),

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் பகுதியை சேர்ந்த ஹரி கிரு ஷ்ணன் (32), கோவை மாவ ட்டம் ராஜீவ் நகரை சேர்ந்த ஸ்ரீதர் (45), சென்னிமலை ரோடு பகுதியை சேர்ந்த குப்புசாமி (48), சூலூர் பகுதியை சேர்ந்த பரமசிவன் ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்த 46 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×