என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவானி கூடுதுறை-கொடுமுடியில்"

    • பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடி பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
    • கொடுமுடியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்க மேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் பின்பகுதியில் இரட்டை விநாயகர் சன்னதி படி த்துறை பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் என்றும் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் ஆடி அமாவாசை, தை அமா வாசை, மகாலய அமாவாசை ஆடி பெருக்கு, விடுமுறை தினங்கள் உள்பட ஆண்டு மமழுவதும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் வந்து புனித நீராடி சங்கமேஸ்வ ரரை வழிபடுகிறார்கள்.

    மேலும் பொதுமக்கள் பலர் ஆற்றில் நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும் தண்ணீர் விடுதல், பிண்டம் விடுதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வந்தது. கடந்த மாதம் முதல் ஆடி அமாவாசை வந்தது. இதை தொடர்ந்து இன்றும் ஆடி அமாவாசை அனுஷ்டி க்கப்பட்டது.

    ஆடி அமவாசையை யொட்டி பவானி கூடுதுறைக்கு இன்று அதிகாலை முதலே ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ண கிரி உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடு ம்பத்தில் இறந்தவர்களுக்கு பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    இதையடுத்து தங்கள் குடும்பத்துடன் வந்த மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, மற்றும் மற்றும் பரிகார பூஜைகள் செய்தனர்.

    ஆடி அமாவாசை இன்று மதியம் வரை மட்டுமே உள்ளதால் இன்று அதி காலையிலேயே பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்திரு ந்தனர். தொடர்ந்து கூடு துறையில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காண ப்பட்டது.

    பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டு கண்காணித்து வந்தனர்.

    இதே போல் ஆடி அமாவாசையையொட்டி கொடு முடி காவிரி ஆற்றுக்கு இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டனர். மேலும் பொ துமக்கள் பலர் காவிரி ஆற்றில் நீராடி தங்கள் மு ன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். இதே போல் வாலிபர்கள் மற்றும் இளம் பெண்கள் திருமண தடை தோஷ பரிகார பூஜை செய்தனர்.

    இதனால் கொடுமுடியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதை யொட்டி போலீஸ் பாது காப்பும் போடப்பட்டு இருந்தது.

    • பக்தர்கள் வழக்கத்தை விட அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
    • இறந்த முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் தினமும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

    கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் பவானி, காவிரி கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் தென்னகத்தின் காசி பரிகாரத் தளம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    மேலும் இங்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடி வருகிறார்கள். அமாவாசை, பவுர்ணமி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் வழக்கத்தை விட அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    குறிப்பாக ஐப்பசி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை உள்பட ஒவ்வொரு மாத த்தில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் பலர் வந்து தங்கள் குடும்ப த்தில் இறந்த முன்னோ ர்களுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடு தல், பிண்டம் விடுதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் இங்கு செய்யப்படுகிறது.

    இதனால் பவானி கூடுதுறைக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், உள்ளூர், வெளியூர் என தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்து பல்வேறு பரிகாரங்கள் செய்து வருகிறார்கள். அதே போல் கர்நாடகா, ஆந்திரா உள்பட வெளி மாநில பக்தர்கள் ஏராளமான வர்கள் வந்து புனித நீராடி பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) தை மாத அமாவாசை தினத்தை யொட்டி பவானி சங்கமே ஸ்வரர் கோவில் கூடுதுறை பின்பகுதியில் உள்ள முக்கடல் சங்கமிக்கும் கூடுதுறைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சேலம்,நாமக்கல், கரூர், கோவை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் காலை முதலே பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

    இதை தொடர்ந்து அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் பல்வேறு பரிகார பூஜைகள் செய்து விட்டு சென்றனர். இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.

    இதையொட்டி பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்கள் தனி த்தனியாக குளித்து விட்டு பரிகார பூஜைகள் செய்தனர். தொடர்ந்து சங்கமேஸ்வரரை வழிபாடு செய்து விட்டு சென்றனர்.

    தை அமாவாசை தின த்தை முன்னிட்டு அங்கு தற்காலிக இரும்பு தகர செட் அமைக்கப்பட்ட இடங்களில் இறந்த முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்தனர்.

    பவானி போலீசார் சிசி டிவி கேமராக்கள் பொரு த்தப்பட்டு குற்ற செயல்களை தடுக்கும் வகையில் பாது காப்பு பணியில் பவானி மற்றும் சித்தோடு, அம்மா பேட்டை, அந்தியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வரு கிறார்கள்.


    இதேபோல் அம்மாபேட்டை காவிரி படித்துறையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர்.

    மேலும் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து காவிரி ஆற்றில் புனித நீராடினர். தொடர்ந்து அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கும் திதி கொடுத்தனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல் திருமணம் ஆகாத இளம் பெண்கள், வாலிபர்கள் அதிகளவில் வந்து ஆற்றில் புனித நீராடி பரிகார பூஜைகள் செய்தனர். மேலும் பலர் பல்வேறு பரிகாரங்களையும் செய்து விட்டு சென்றனர்.

    இதையடுத்து கொடுமுடி மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு சென்றனர். இதனால் அதிகாலை முதலே கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

    இதே போல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் நகரின் பல பகுதிகளைில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் முன்னோ ர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து விட்டு சென்றனர். தொடர்ந்து பக்தர்கள் குடும்பத்துடன் வந்து பரிகார பூஜைகள் செய்து விட்டு சென்றனர்.

    ×