விரும்பிய பாடத்தை படிக்க முடியாததால் விபரீதம்- கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலை குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விரும்பிய பாடத்தை படிக்க முடியாததால் விபரீதம்-  கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டடிபாளையம், சஞ்சய் காந்தி தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகள் ரிதன்யா (17). கோபியில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் மற்றொரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி படிக்க அவருக்கு சீட் கிடைத்தது. இதில் படிக்க ரிதன்யா விரும்பினார். தனது விருப்பத்தை பெற்றோரிடம் அவர் தெரிவித்தார். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து கலை கல்லூரியிலேயே ரிதன்யாவை படிக்க பெற்றோர் வற்புறுத்தினர்.

இதனால் மனவேதனையில் இருந்த ரிதன்யா சம்பவத்தன்று இரவு பெற்றோர்கள் வெளியே சென்றிருந்த சமயத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கி கொண்டிருந்த ரிதன்யாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரிதன்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com