என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 people were arrested for selling alcohol"

    • அனுமதியின்றி மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • 46 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி, நேற்று ஒரே நாளில், காசனுார் சோதனை சாவடி அருகே, தாளவாடி அருகே சினிதஹள்ளி, கோபி அருகே மொடச்சூர், அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம், வெள்ளித்திருப்பூர் அருகே மூலக்கடை பகுதி, சிறுவலுார் சமத்துவபுரம் பகுதி ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 46 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×