என் மலர்
ஈரோடு
- பட்டப்பகலில் ஆசிரியை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
ஈரோடு:
ஈரோடு கொல்லம்பாளையம் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் மனோகரன்.ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மனைவி புவனேஸ்வரி (53). வைரா பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. சொந்த வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு மனோகரன் நடை பயிற்சிக்காக வெளியே சென்று விட்டார். வீட்டில் புவனேஸ்வரி மட்டும் இருந்துள்ளார். மனோகரன் நடைபயிற்சி முடித்து கொண்டு பின்னர் மீண்டும் 8.30 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் கட்டிலில் புவனேஸ்வரி கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சூரம்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்தனர். போலீஸ் மோப்பநாய் வீரா சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் வெளியே ஓடி நின்றது.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
பட்டப்பகலில் ஆசிரியை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
- 17 திருமணம் நடந்ததால் கோவில் முழுவதும் நாதஸ்வர மங்கள இசை முழங்கியப்படி இருந்தது.
- கோவில் வளாகம் முழுவதும் திருமண கோஷ்டியினர் அதிகளவில் வந்திருந்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை மலை மேல் அமைந்துள்ள முருகன் கோவிலில் சுபமுகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடந்து வருகிறது.
இன்று ஆவணி மாதத்தில் வருகின்ற முதல் சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் 17 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்தது. இதனால் அதிகாலையில் இருந்தே கோவிலில் உறவினர்கள் கூட்டம் அலைமோதியது. 17 திருமணம் நடந்ததால் கோவில் முழுவதும் நாதஸ்வர மங்கள இசை முழங்கியப்படி இருந்தது.
திருமணம் முடிந்ததும் மணமக்கள் கோவிலை சுற்றி வந்து முருக பெருமானை தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் உறவினர்களுடன் போட்டோ, வீடியோ, செல்பி எடுத்து கொண்டனர். கோவில் வளாகம் முழுவதும் திருமண கோஷ்டியினர் அதிகளவில் வந்திருந்தனர்.
திருமணத்தில் கலந்து கொள்ள உறவினர்களும் அதிகளவில் வந்ததால் மலைமீது அவர்கள் வந்த வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டு இருந்தது. கோவில் கூடுதல் பணியாளர்கள் மூலம் கூட்டத்தினை சரி செய்தனர். திருமண ஜோடி மற்றும் அவர்கள் உறவினர்களால் மலை கோவில் வளாகம் காலை நேரத்தில் கலை கட்டி இருந்தது.
- கடந்த 3 மாதமாக கணவன்-மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டு வந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நஞ்சை கொளாநல்லி, சத்திரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கும் பவானி அடுத்த ஒலகடம் பகுதியை சேர்ந்த கோகிலா (30) என்பவருக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 3 மாதமாக கணவன்-மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 14-ந் தேதி சத்திரம்பட்டிக்கு வந்த கோகிலாவின் தந்தை தனது மகள், மருமகன் மற்றும் பேரனை அழைத்து கொண்டு ஊருக்கு சென்றுள்ளார். பின்னர் 16-ந் தேதி மீண்டும் கோகிலா தனது கணவர், மகனுடன் சத்திரப்பட்டிக்கு சென்றார்.
இந்நிலையில் கடந்த 17-ந் தேதி கோகிலா அவரது வீட்டின் அருகே தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதையடுத்து பெரியசாமி அவரது உறவினர்கள் சேர்ந்து கோகிலாவை மீட்டு கணபதிபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து கோகிலாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது கோகிலா மயக்க நிலையில் இருந்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோகிலா ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோகிலா பரிதாபமாக இறந்தார்.
இந்நிலையில் கோகிலாவின் தந்தை சுப்பிரமணி மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் சென்று தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
- போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளையத்தில் மகா மாரியம்மன், கரிய காளியம்மன் ஆகிய 2 கோவில்கள் அருகருகே உள்ளன.
இந்நிலையில் இன்று காலை அந்த வழியாக பொதுமக்கள் கடந்து சென்ற போது 2 கோவில்களின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உ ள்ளே சென்று பார்த்த போது கோவில்களின் உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உண்டியலில் இருந்த பணங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. கோவில் வளாகத்தில் பணங்கள் சிதறி கிடந்தன. அதேபோல் உண்டியல் அருகே அரிவாள் கிடந்தது.
இதுகுறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் கோவிலுக்கு வந்து தடைகளை சேகரித்தனர். இந்த 2 கோவில்கள் உண்டியலும் கடந்த ஒரு வருடமாக எண்ணப்படவில்லை. இதனால் ஏராளமான பணங்கள் இருந்ததாகவும், கொள்ளை போன பணங்களின் மதிப்பு எவ்வளவு என்று உடனடியாக தெரியவில்லை.
இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதேபோல் கடந்த 16-ந் தேதி கோபி பகுதியில் உள்ள அண்ணமார் கோவிலிலும் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து அருகில் உள்ள தோட்டத்தில் உண்டியலை விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாகவே கோபி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோவில்களை குறி வைத்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விசேஷ நாட்களை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
- பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லி, முல்லை, சம்பங்கி, செண்டு மல்லி, கோழி கொண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கு விளையும் பூக்கள் விவசாயிகளால் நடத்தப் படும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஆவணி மாதம் வளர்பிறை முகூர்த்த சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக விசேஷ நாட்களை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சம்பங்கி பூ ஒரு கிலோ ரூ.100-க்கு விற்ற நிலையில் நேற்று இரு மடங்கு உயர்ந்து ஒரு கிலோ ரூ.220-க்கு விற்பனையானது.
இதேபோல் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.600-க்கும், முல்லைப் பூ ஒரு கிலோ ரூ.250-க்கும், கோழி கொண்டை ஒரு கிலோ ரூ.130-க்கும், செண்டு மல்லி ஒரு கிலோ ரூ.92-க்கும் விற்பனையானது.
சம்பங்கி பூக்கள் இரு மடங்கு விலை உயர்ந்தாலும், மற்ற பூக்களுக்கும் நல்ல விலை கிடைத்ததால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடந்தது.
- 203 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
ஈரோடு:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை மற்றும் அனைத்து உதவிகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதை செல்வி கூறியதாவது:-
மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் சிறப்பு முகாமில் பங்கேற்றனர். இதில் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைபெற 75 விண்ணப்பங்கள்,
புதிய தேசிய அடையாள அட்டைக்கு 61 பேர், குடிசை மாற்று வாரிய வீடு வழங்க கோரி 23 பேர், முதல்வரின் காப்பீடு திட்ட அட்டை பெற 42 பேர்,
ஏற்கனவே அட்டை பெற்றவர்களில் தங்கள் பெயர்களை சேர்க்க கோரி 5 பேர், வேலை வழங்க கோரி 15 பேர் செயற்கைக் கால் பொருத்து வதற்கான அளவீடு செய்து விண்ணப்பம் வழங்கிய 4 பேர் உள்பட 203 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
அவை அனைத்தும் விரைவாக பரிசீலனை செய்து அடையாள அட்டை உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோன்ற சிறப்பு முகாம் வரும் 25-ந் தேதி கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அம்மனுக்கு வாசனை திரவியங்களுடன் அபிஷேக பூஜை நடைபெற்றது.
- பெண் பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடி தாலாட்டி அம்மனை வழிபட்டனர்.
பு.புளியம்பட்டி:
புஞ்சைபுளியம்பட்டி நம்பியூர் சாலையில் மாரியம்மன் மற்றும் பிளாக் மாரியம்மன் கோவில்கள் உள்ளது. கோவிலில் ஆடி 4 வெள்ளிக்கிழமைகளில் அரசன், வேம்பு, மாவலிங்க மூன்றும் இணைந்த மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், இளநீர் போன்ற வாசனை திரவியங்களுடன் அபிஷேக பூஜை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து இரவு உற்சவ சிலைகள் கோவிலை சுற்றி வளம் வந்து ஊஞ்சலில் வைக்கப்பட்ட மாரியம்மன், பிளேக் மாரியம்மன் உற்சவர்களை பெண் பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடி தாலாட்டி அம்மனை வழிபட்டனர்.
பின்பு அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சலில் வைத்துள்ள இரு உற்சவர்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதை ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் விளக்கு பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் கயிறு, வளையல்கள் பக்தர்களுக்கு வழங்கினர்.
இதைத்தொடர்ந்து விழாவில் கூடியிருந்த பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- 12 பேரை அந்த தெருநாய் கடித்தது.
- இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் அந்த தெருநாய்யை அடித்து கொன்றனர்.
கொடுமுடி:
கொடுமுடியை அடுத்த ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (52). விவசாயி. இவர் கொடுமுடியில் உள்ள ஒரு தனியார் மின்சாதன விற்பனைகடையில் பொருட்களை வாங்க தனது மோட்டார்சைக்கிளில் வந்துள்ளார்.
அந்த மின்சாதன விற்பனைக்கடைக்கு சொந்தமான குடோன் ஒன்று சாலைப்புதூரை ஒட்டி அமைந்துள்ளது. அந்த குடோனில் பொருட்களை பார்வை யிட்ட பின்னர் குடோனிலிருந்து வெளியே வந்த விவசாயி சுப்பிரமணி குடோனுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு செல்ல முயன்றபோது அவரை நோக்கி வந்த தெருநாய் ஒன்று சுப்பிரமணியை கடித்துள்ளது.
இதனால் அதிர்ச்சியான விவசாயி சுப்பிரமணி உடனே தனது மோட்டார் சைக்கிளை கீழேபோட்டு விட்டு அந்த நாயை விரட்டியுள்ளார். இதனையடுத்து அந்த நாய் அங்கிருந்து சாலைப்புதூர் ரோட்டிற்கு ஓடிச்சென்றுள்ளது.
செல்லும் வழியில் சாலையில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடித்துள்ளது. அப்போது அந்த வழியில் சென்றுகொண்டிருந்த கரூர் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரையும் கடித்துள்ளது.
முதலில் சாலைப்புதூர் வருந்தியாபாளையம் பிரிவில் துவங்கிய இந்த நாயின் வெறியாட்டம் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து கொடுமுடி பேரூராட்சி பணியாளர்கள் தங்களது பேரூராட்சியின் வரம்பிற்குள் உள்ள தழுவம்பாளையத்தை நோக்கி நாய் சென்றுகொண்டிருப்தை அறிந்து உஷாராகி மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்ல ஒலிபெருக்கியுடன் சென்றுள்ளனர்.
இந்த இடைபட்ட நேரத்துக்குள் தழுவம்பாளையத்திற்குள் ஆறுபேரை நாய் பதம்பார்த்துவிட்டு கொடுமுடியை நோக்கி விரைந்துள்ளது.
இதற்கிடையே நாய்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு வந்து முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தனர்.
அவர்கள் சென்று கொண்டிருந்தபோதே அடுத்தடுத்து கொடுமுடி அரசு மருத்துவனைக்கு நாய்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் வரத்துவங்கியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியான கொடுமுடி அரசு மருத்துவமனை பணியாளர்கள் தங்களது பணியை தொடர்ந்து கொண்டிருந்தபோது இரவு 7 மணிக்கு கொடுமுடிக்குள் உள்ள கோகுலம் நகருக்குள் புகுந்த அந்த நாய்.
அங்கு கொடுமுடியில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் ஆசிரியை சாந்தியை கடித்துவிட்டு அந்த நகரை சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஒருவனையும் கடித்துள்ளது. இவ்வாறு 12 பேரை அந்த தெருநாய் கடித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் அந்த தெருநாய்யை அடித்து கொன்றனர்.
நாய் கடித்து காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சிகிச்சையில் உள்ளனர்.
கொடுமுடி அரசு மருத்துவமனையில் நாய்கடிக்கு சிகிச்சை பெற்றுவருபவர்களை கொடுமுடி பேரூராட்சி தலைவி திலகவதி மற்றும் துணைத்தலைவர் ஹசன் ஆகியோர் நேற்று இரவுநேரில்சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.
நாயின் வெறியாட்டம் குறித்து கேள்விபட்ட மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி சம்பவம் குறித்து கொடுமுடி பேரூராட்சி நிர்வாகத்திடம் விசாரித்துள்ளார்.
அப்போது தெருநாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.
- முக்கிய குற்றவாளியான பாலாஜி கைது செய்யப்பட்டு பவானி சிறையில் அடைக்கப்பட்டார்.
- திருமூர்த்தி தலைமறைவாக இருந்து வந்தார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக்கு இளைஞர்கள் சிலர் போதை மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து அந்தியூர் பவானி சாலையில் உள்ள சாந்திய பாளையம் பிரிவு மயான பகுதியில் போலீசார் ஆய்வு செய்து சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது 7 பேர் கொண்ட கும்பல் அந்த பகுதியில் நின்று கொண்ட இருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.
போலீசார் அவர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 5 பேர் சிக்கனர். அவர்கள் 5 போலீசார் கைது செய்து பவானி சிறை யில் அடைத்த னர்.
இதில் முக்கிய குற்ற வாளியான ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த பாலாஜி சந்தியபாளையம் மண க்காடு பகுதியை சேர்ந்த திருமூர்த்தி ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு முக்கிய குற்றவாளியான ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த பாலாஜி கைது செய்யப்பட்டு பவானி சிறையில் அடைக்கப்பட்டார்.
மற்றொரு குற்றவாளியான சந்திய பாளையம் மணக்காடு பகுதியை சேர்ந்த திருமூர்த்தி தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் அந்தியூர் போலீசாருக்கு திருமூர்த்தி அந்தியூர் பகுதியில் சுற்றி திரிவதாக தகவல் கிடைத்தது. இதனை அடித்து சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் திரு மூர்த்தியை இன்று காலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அந்தியூர் போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து அவரை பவானி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- விதைப்பண்ணைகள் தற்போது பூப்பருவம் முதல் அறுவடை நிலை வரை உள்ளது.
- அறுவடை தொழில் நுட்ப ங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களை ேசர்ந்த தனியார், அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் விதைப் பண்ணைகள் அமைத்துள்ளனர்.
இவ்விதைப் பண்ணை களை ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகன சுந்தரம் ஆய்வு செய்தார். மேலும் விதைச்சான்று உதவி இயக்குநர் தெரிவித்ததாவது:-
விதை உற்பத்தியாளர்கள் இப்பகுதியில் நெல் ஏடிடி 37, ஏஎஸ்டி 16, டிபிஎஸ் 5, எம்டியு 1010, என்எல்ஆர் 34449 ஆகிய ரகங்களின் வல்லுநர் மற்றும் ஆதாரநிலை ஒன்று விதைகளை கொண்டு விதைப்பண்ணைகளை அமைத்துள்ளனர்.
இவ்விதைப்பண்ணைகள் தற்போது பூப்பருவம் முதல் அறுவடை நிலை வரை உள்ளது. இவ்விதைப் பண்ணை களின் வயல் தரம் ஆய்வு செய்யப்பட்டு சாகுபடி யாளர்களுக்கு பயிர் பாதுகாப்பு மற்றும் அறுவடை தொழில் நுட்ப ங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தால் தற்போது புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட புதிய நெல் ரகங்களான ஏஎஸ்டி 21, கோ 54, கோ 55 மற்றும் ஏடிடி 57 ரகங்களின் உண்மைநிலை மாதிரி விதைப்பண்ணை களும் ஆய்வு செய்யப்பட்டு ஈரோடு மாவட்ட விதைச்சான்று அலுவலர்கள் மற்றும் கோபிசெட்டி பாளையம் உதவி விதை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
- தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
- வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் தொழில் முனைவோர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட தொழில் மையம் சார்பில் உணவு பதப்படுத்தும் தொழில் மற்றும் ஏற்றுமதி தொடர்பாக மாவட்ட அளவிலான கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி ஊக்குவிப்பு கழக நிர்வாக இயக்குநரும், தொழில் ஆணையரும், தொழில் வணிக இயக்குனருமான சிஜீ தாமஸ் வைத்தியன் தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட தொழில் மையம் சார்பில், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்ட ங்களை சேர்ந்த உணவு பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் தொழி ல்களில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி ஊக்கு விப்பு கழக அலுவலர்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசி ரியர்கள் கலந்து கொண்டு உணவுப்பொருட்கள் மற்றும் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, மதிப்பு கூட்டுதல் சந்தை இணைப்புகளை உருவாக்குதல் தொடர்பாக தொழில் முனைவோர்களுக்கு விரிவாக எடுத்து கூறினர்.
மேலும் வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆகிய துறைகளின் சார்பில் வேளாண்மை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதில் குறிப்பாக வேளாண் உட்கட்டமைப்பு நிதியினை பயன்படுத்துதல் தொடர்பா கவும் மற்றும் அறுவடைக்கு பின்பு உணவு பதப்படுத்துதல் பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் தொழில் முனை வோர்களுக்கு தெரிவிக்க ப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவு பதப்படு த்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி ஊக்குவிப்பு கழக தலைவர் அழகுசுந்தரம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணி கண்டன், இணை இயக்குநர் (வேளாண்மை) முருகேசன் (பொறுப்பு), துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மகாதேவன் மற்றும் அரசு அலுலவர்கள் உள்பட ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட ங்களை சார்ந்த தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
- சாலையில் வந்து கொண்டிருந்த லாரி அவர் மீது மோதியது.
- பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்த சரலை ஏரி கருப்பராயன் கோவில் அருகே சம்பவ த்தன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்பொழுது சாலையில் வந்து கொண்டி ருந்த லாரி அவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவர் ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
10 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இதேபோல் கோவை- சேலம் தேசிய நெடுஞ்சா லையில் பூவன்பாளையம் பிரிவு அருகே அடையாளம் தெரியாத நபர் ஓருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதி நிற்காமல் சென்றுவிட்டது.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இறந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்த வர்கள்? போன்ற விவரம் தெரியவில்லை.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






