என் மலர்
நீங்கள் தேடியது "Dead fish in"
- வெயிலின் தாக்கத்தால் மீன்கள் இறந்து தண்ணீரில் மிதக்கிறது.
- செங்குளம் குளத்து பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது.
சென்னிமலை:
சென்னிமலை அருகே உள்ள ஈஙகூர் ஊராட்சி க்கு ட்பட்ட செங்குளத்தில் ஊரா ட்சி நிர்வாகம் சார்பாக வே லை உறுதி திட்டத்தில் முன்பு இருந்த 4.5 ஏக்கர் குளம் தூர் வார ப்பட்டு சீரமைக்கப்ப ட்டது.
இந்த பகுதியில் கடந்த ஆண்டு பெய்த கன மழையால் குளத்தில் நீர் நிரம்பி இருந்தது. இதில் செங்குளம் கிராம மக்கள் 7,500 ஜிலேபி ரக மீன் குஞ்சுகள் வாங்கி வந்து வளர விட்டு இருந்தனர்.
அந்த மீன் குஞ்சுகள் வளர்ந்து வரும் நிலையில் கடந்த 6 மாதங்க ளுக்கு மேலாக சரியான மழை இல்லாத காரணத்தாலும், கடும் வெய்யலின் தாக்கத்தாலும், குளத்து தண்ணீர் படி, படியாக குறைந்து வருகிறது.
தற்போது தண்ணீர் குறைந்ததால் நீர் பற்றாக்குறை ஏற்பட்டும், வெயிலின் தாக்கத்தால் மீன்கள் இறந்து தண்ணீரில் மிதக்கிறது. இறந்து கிடக்கும் மீன் குஞ்சுகளால் செங்குளம் குளத்து பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது.
இந்த இறந்து தண்ணீரில் மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி குழி தோண்டி புதைத்து குளத்தினை சுத்தம் செய்ய வேண்டும் என செங்குளம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






