search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் கடையின் விற்பனை நேரம் குறைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்- அமைச்சர் முத்துசாமி
    X

    அமைச்சர் முத்துசாமி

    டாஸ்மாக் கடையின் விற்பனை நேரம் குறைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்- அமைச்சர் முத்துசாமி

    • தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் விலைப்பட்டியல் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • வீட்டு வசதி துறை சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டதில் பொதுமக்களிடம் இருந்து 6 ஆயிரம் புகார்கள் வரப்பெற்றன.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் விலைப்பட்டியல் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1 அல்லது 2 இடங்களில் மட்டும் இல்லை. 99 சதவீதம் மதுக்கடைகளில் விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.

    அதையும் டாஸ்மாக் பொது மேலாளர் மூலமாக அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள விலை பட்டியல்களை புகைப்படங்களாக எடுத்து அதை பட்டியலாக தயாரித்து நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க உள்ளோம்.

    இதுகுறித்து வழக்கறிஞர்கள் ஆய்வு செய்ய நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அது எங்களுக்கு ஊக்கமாக அமையும். பணிகளை விரைவுபடுத்த நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பயனுடையதாக இருக்கும். மது விற்பனை நேரம் குறைப்பதற்கும் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. நீதிமன்றத்தின் முழு உத்தரவு கிடைக்கப்பெற்றதும் அதை நடைமுறைப்படுத்த அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். இது நீதிமன்றம் உத்தரவு என்பதால் அதற்கு கீழ்படிந்து தான் ஆக வேண்டும்.

    வீட்டு வசதி துறை சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டதில் பொதுமக்களிடம் இருந்து 6 ஆயிரம் புகார்கள் வரப்பெற்றன. துறை அதிகாரிகள் மூலம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. கலைஞர் நூற்றாண்டு நினைவு சின்னம் சிறந்த திட்டமாக ஏற்படுத்தப்படும்.

    இவை கலைஞரின் நினைவை மட்டும் போற்றுவதாக மட்டுமல்லாமல் மக்களுக்கு 100 விழுக்காடு பயன்படுவதாக இருக்க வேண்டும் என்பது தான் முதலமைச்சரின் நோக்கமாக உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 15 ஆயிரம் பேருக்கு விற்பனை பத்திரங்கள் தரப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×