search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 women were arrested"

    • தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்ப னையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
    • விசாரணையில் அவர்கள், போதைக்காக வலி நிவாரணி மாத்திரை களை தண்ணீரில் கலந்து ஊசி மூலமாக உடலில் செலுத்த விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.

    ஈரோடு:

    தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்ப னையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதனடிப்படையில் ஈரோடு மதுவிலக்கு போலீ சா ர் ஈரோடு, கோட்டை பத்ரகா ளியம்மன் கோயில் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று இருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் ஈரோடு, கருங்கல்பாளை யம், ராஜா ஜிபுரம், ராஜூ மகன் பசுபதி (23), காஞ்சிகோயில், காமராஜ் நகர், பழனிசாமி மகன் ராஜா (23), ஈரோடு, வெட்டுக்காட்டு வலசு, விவேகானந்தர் சாலை, லியாகத் அலி மகள் சமீம் பானு (22), ஈரோடு, மாணி க்கம்பாளையம், நேதாஜி நகர், மாணிக்கம் மகள் சந்தியா (22), ஈரோடு வீரப்பன்சத்தி ரத்தை சேர்ந்த டார்ஜன் (20) என்பது தெரியவந்தது.

    மேலும், அவர்கள் 49 வலி நிவாரணி மாத்தி ரைகள், சிரிஞ்சுடன் கூடிய ஊசிகள் 2 வைத்திருந்ததும் கண்டுபி டிக்கப்பட்டது.

    விசாரணையில் அவ ர்கள், போதைக்காக வலி நிவாரணி மாத்திரை களை தண்ணீரில் கலந்து ஊசி மூலமாக உடலில் செலுத்த விற்பனைக்கு வை த்தி–ருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து, போலீசார் அவர்கள் 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதில், பசுபதி, சமீம் பானு ஆகியோர் ஏற்கனவே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி ய–தாகவும், விற்பனை செய்ததாகவும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×