என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டுமனை பட்டா கேட்டு"

    • நரிக்குறவர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    • வீட்டுமனை பட்டாவும், வீடுகளும் இலவசமாக கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஈரோடு ரங்கம் பாளையம் அன்னை சத்யா நகரில் வசிக்கும் நரிக்குறவர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    நாங்கள் மேற்கொண்ட முகவரியில் கடந்த 45 வருடமாக 37 குடும்பங்க ளுடன் குடிசை அமைத்தும், சிறிய ஓடு வீடுகளை கட்டியும் வசித்து வருகிறோம்.

    மழைக்காலங்களில் குழந்தைகளுடன் தங்குவதற்கு நாங்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். நாங்கள் வசித்து வரும் இடம் குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான இடம் என்று தெரிய வந்துள்ளது.

    எனவே குடிசை மாற்று வாரியத்தில் வீடு கட்டி கொடுத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். எங்கள் ஏழ்மை நிலையை மனதில் வைத்து 37 நரிகுறவர்கள் குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டாவும், வீடுகளும் இலவசமாக கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    ×