என் மலர்
ஈரோடு
- தனியார் மீன்பிடி உரிமம் முடிந்த நிலையில் கடந்த 15-ந் தேதி முதல் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகமே நேரடியாக மீன்களை கொள்முதல் செய்தது.
- பழையபடி தங்களுக்கு 55 ரூபாய் கூலியாக வழங்க வேண்டும் என்று வலியுறு த்தி கடந்த 15-ந் தேதி முதல் பவானிசாகர் அணைப்பகுதி யில் மீனவர்கள் மீன் பிடிப்பதை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.
சத்தியமங்கலம்
ஈரோடு மாவட்டம் பவா னிசாகர் அணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் மூலம் மீன் குஞ்சுகள் விடப்பட்டு மீன் பிடிக்கும் உரிமம் தனியா–ருக்கு தரப்பட்டிருந்தது.
இங்கு சுசில் குட்டை, அண்ணா நகர், வெற்றிவேல் முருகன் நகர், கண்ட்ராயன் மொக்கை போன்ற பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பரிசல் மூலம் மீன்களைப் பிடித்து வருகி ன்றனர்.
நாள் ஒன்றுக்கு 2000 கிலோ மீன்கள் பிடித்து வந்தனர். இந்த மீன்கள் கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளு க்கு அனுப்பப்பட்டு வந்தது.
தனியார் மீன்பிடி உரிமம் முடிந்த நிலையில் கடந்த 15-ந் தேதி முதல் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகமே நேரடியாக மீன்களை கொள்முதல் செய்தது.
தனியார் குத்தகைதாரர் ஒரு கிலோ மீனுக்கு 55 ரூபாய் கூலியாக மீனவர்களுக்கு தந்த நிலையில் மீன் வளர்ச்சி கழகம் ஒரு கிலோ 35 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பழையபடி தங்களுக்கு 55 ரூபாய் கூலியாக வழங்க வேண்டும் என்று வலியுறு த்தி கடந்த 15-ந் தேதி முதல் பவானிசாகர் அணைப்பகுதி யில் மீனவர்கள் மீன் பிடிப்பதை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது.
- 500 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதே தவிர புதிதாக எங்கும் கடைகள் திறக்கப்படவில்லை.
- அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் 1045 குளங்களில் 920 குளங்களுக்கு சோதனையோட்டம் முடிக்கப்பட்டுள்ளது
ஈரோடு:
ஈரோட்டில் இன்று பல்வேறு திட்டப்பணிகளுக்கு அமைச்சர் சு.முத்துசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் டாஸ்மாக்கில் பணியாளர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் சீனியாரிட்டி அடிப்படையில் 2000 நபர்களுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக்கில் இரண்டு மாதத்தில் அனைத்தும் கணினி மயமாக்கப்படும் பணிகள் நிறைவு பெறும்.இதன் மூலம் ரசீது உள்பட மதுபானம் விற்பனை அனைத்தும் கண்காணிக்க முடியும்.
500 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதே தவிர புதிதாக எங்கும் கடைகள் திறக்கப்படவில்லை. பள்ளி, கோவில் மற்றும் மக்களின் புகாரின் அடிப்படையில் கடைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதே தவிர புதிய கடைகள் திறக்கவில்லை.
டாஸ்மாக் தொழிற்சாலைகள் கொடுத்த 49 கோரிக்கைகளில் 39 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஊதிய பேச்சுவார்த்தை என்பது நிதி துறை உள்பட மற்ற துறைகளையும் ஒப்பிட்டு செய்யவேண்டிய பணி அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்த்து வைக்க வேண்டும் என்பது தான் எங்களது எண்ணம்.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் 1045 குளங்களில் 920 குளங்களுக்கு சோதனையோட்டம் முடிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் மீதமுள்ள குளங்களுக்கு சோதனையோட்டம் செய்ய முடியவில்லை. அடிப்படை கால தாமதத்திற்கு காரணம் திட்டத்தின் முகப்பின் நிலம் கையகப்படுத்தல் செய்யாததாலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 26 விவசாயிகள் வீட்டிற்கு சென்று பேசி நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுவிலக்கு துறையில் தினமும் ரூ. 10 கோடிக்கு ஊழல் நடந்து கொண்டிருக்கிறது என்ற எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு கூறியுள்ளார். அதுகுறித்து உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் அமைச்சர் முத்துசாமிடம் கேட்டபோது,
அதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் முத்துசாமி, 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். தமிழகத்தில் சட்டவிரோதமாக மதுபான பார்கள் ஒரு இடத்தில் கூட இல்லை.
அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க திறந்த மனதோடு தயாராக இருக்கின்றோம் என்றார்.
- நீரை பயன்படுத்திய பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
- நிலத்தடி நீர் அருகில் உள்ள கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமாக சாய கழிவு நீராக வெளியேறிக்கொண்டு இருக்கிறது.
சென்னிமலை:
சென்னிமலை மற்றும் பெருந்துறை பகுதிகளில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு 2,700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்து உள்ளது.
இந்த சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் அதிக அளவில் சாய மற்றும் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரினால் சிப்காட் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்பட்டு பொது மக்களும், கால்நடைகளும் பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆனது. இந்த நீரை பயன்படுத்திய பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் மழை காலங்களில் இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் அப்பகுதியில் உள்ள குளங்களுக்குச் செல்லும் நீர்வழிப் பாதைகளும் குளங்களும் கழிவு நீரினால் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.
இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை ஆலை நிர்வாகமே பூஜ்ஜியம் முறையில் மறுசுழற்சி செய்து வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த தொழிற்சாலை வளாகம் இருக்கக்கூடிய பகுதிகளில் ஏற்கனவே விவசாயிகள் அமைத்திருந்த ஆழ்துளை கிணறுகள் மூலமாக வெளியேற்றப்பட்ட கழிவுநீர் நிலத்தடியில் இன்னும் இருப்பதால் மழை க்காலங்களில் நிலத்தடி நீர் அருகில் உள்ள கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமாக சாய கழிவு நீராக வெளியேறிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவின் படி குளத்திற்கு செல்லும் நீர்வழி பாதை மற்றும் பல இடங்களில் நிலத்தில் தேங்கி நிற்கின்ற கழிவு நீரை புதிய முயற்சியாக டேங்கர் லாரிகள் மூலமாக அந்த கழிவு நீரை சேகரித்து தொழிற்சாலைகளுக்கு எடுத்து சென்று அங்கு அமைக்கபட்டுள்ள ஜீரோ டிஸ்சார்ஸ் முறையில் சுத்திகரிப்பு எந்திரம் மூலமாக சுத்திகரிப்பு செய்து மீண்டும் தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கே எடுத்துக்கொள்ளும் புதிய முயற்சியை மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலமாக தொடங்கி உள்ளனர்.
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த முயற்சி நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும். மேலும் இதற்கு இப்பகுதி பொதுமக்கள், விவசாயிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கு வசிக்கும் மக்கள் கூறும்போது:-
இப்பகுதியில் உள்ள குளத்திற்கு செல்லும் நீர்வழி பாதையை கான்கிரீட் பாதையாக மாற்றி தடுப்பணை அமைத்து மழை காலத்தில் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும். கழிவு நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கைகளை தொழிற்சாலை நிர்வாகமும், மாசுகட்டுப்பாட்டு வாரியமும் எடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
மாசுகட்டுப்பாட்டு வாரி யம் எடுத்துள்ள இந்த புதிய முயற்சி பலன் அளிக்குமா என்பது பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
- 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையில் தற்போதைய நீர் இருப்பு 82.54 அடியாக உள்ளது.
- அணையில் இருந்து வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டால் அணையின் நீர்மட்டம் குறையும் நிலை ஏற்படும்.
ஈரோடு:
பவானிசாகர் அணையில் இருந்து, இந்த ஆண்டுக்கான முதல் போகத்துக்கான தண்ணீர் கீழ்பவானி வாய்க்காலின் இரட்டைப் படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாயின் ஒற்றைப்படை மதகுகளில் கடந்த 15-ந் தேதி முதல் வரும் டிசம்பர் 13ஆம் தேதி வரை வரை 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்புப் பணிகள் முடிவடையாத நிலையில், ஆகஸ்ட் 15-ந் தேதி மாலை 5 மணியளவில் தண்ணீர் திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் நிறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மீண்டும் 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை செயற்பொறியாளர் திருமூர்த்தி தெரிவித்தார்.
இந்நிலையில், அவர் தெரிவித்தபடி, 19-ந் தேதி காலை 11 மணியளவில் பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தொடர்ந்து படிப்படியாக பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதுமேலும் அதிகரிக்கப்பட்டு நேற்று மாலை 4 மணிக்கு வினாடி க்கு 750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரத்தின் படி அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,250 கன அடியாக அதிகரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையில் தற்போதைய நீர் இருப்பு 82.54 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 217 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
கீழ்பவானி வாய்க்கால் மூலமாக நேரடியாகவும், கசிவு நீர் மூலமாகவும் சுமார் 1.25 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்று வரும் நிலையில், வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக நடப்பு முதல்போகத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா என பாசனதாரர்களும், இந்த வாய்க்கால் மூலமாக குடி நீர் ஆதாரம் பெறும் கிராம மக்களும் பெரும் அச்சத்துக்குள்ளாகி இருந்தனர்.
இருப்பினும், ஆகஸ்ட் 15-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட அமைச்சர், மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் 4 நாள்கள் தாமதமானாலும் குறிப்பிட்டவாறு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளது.
இதனால், விவசாய முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டிருந்த விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
கடந்த வருடங்களில் இதே காலகட்டத்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பி இருந்தது.
ஆனால், தற்போது போதிய மழையின்மை காரணமாக 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையின் நீர் இருப்பு, தற்போது 82 அடியாக மட்டுமே உள்ளது.
இதனால், அணையில் இருந்து வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டால் அணையின் நீர்மட்டம் குறையும் நிலை ஏற்படும்.
இருப்பினும், போதிய மழை பெய்து அணையின் நீர்மட்டத்தை உயரச் செய்தும், கீழ்பவானி வாய்க்காலில் அதன் முழு அளவு தண்ணீரான வினாடிக்கு 2,300 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு இந்த போகம் சாகுபடி எவ்வித பாதிப்புமின்றி நடைபெற வேண்டும் என்பதே கீழ்பவானி பாசன விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடுவது பதிவாகியுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பருவாச்சியில் உள்ள ஒரு மளிகை கடையில் நேற்று முன்தினம் இரவு உரிமையாளர் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார்.
இன்று காலை மீண்டும் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்தா பணம் திருட்டு போயிருந்தது.
இதேபோல் அந்தியூர் அடுத்த அண்ணா மடவு பகுதியில் உள்ள ஒரு மளிகை கடை, எலக்ட்ரானிக் கடை, ஜெராக்ஸ் கடை என 4 கடைகளில் இன்று காலை அந்தந்த உரிமையாளர்கள் கடையை திறக்க சென்ற போது கடையின் கதவு போட்டு உடைக்கப்பட்டு உள்ளே பணம் கொள்ளை போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதே போல் அந்தியூர் அருகே உள்ள நகலூர் பெருமாள்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையிலும் ரூ. 7000 பணம் திருட்டுப் போய் உள்ளது. இதேபோல் மங்கலம் பள்ளி பகுதியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையிலும் பணம் திருடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சனிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்ததும் அந்தந்த கடை உரிமையாளர்கள் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் நோட்டமிட்டு நள்ளிரவில் புகுந்து கடையில் பணத்தை திருடி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் மங்களம் பள்ளியில் ஜெராக்ஸ் கடையில் மர்ம நபர்கள் திருடும் காட்சி அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் நள்ளிரவு 2.15 மணி அளவில் மர்ம நபர்கள் வந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடுவது பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் பகுதிகள் இரவு நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இரவு நேர ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த 15-ந் தேதி முதல் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகமே நேரடியாக மீன்களை கொள்முதல் செய்தது.
- பழையபடி தங்களுக்கு 55 ரூபாய் கூலியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் மூலம் மீன் குஞ்சுகள் விடப்பட்டு மீன் பிடிக்கும் உரிமம் தனியாருக்கு தரப்பட்டிருந்தது.
இங்கு சுசில் குட்டை, அண்ணாநகர், வெற்றிவேல் முருகன் நகர், கண்ட்ராயன் மொக்கை போன்ற பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பரிசல் மூலம் மீன்களைப் பிடித்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 2000 கிலோ மீன்கள் பிடித்து வந்தனர். இந்த மீன்கள் கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது.
தனியார் மீன்பிடி உரிமம் முடிந்த நிலையில் கடந்த 15-ந் தேதி முதல் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகமே நேரடியாக மீன்களை கொள்முதல் செய்தது. தனியார் குத்தகைதாரர் ஒரு கிலோ மீனுக்கு 55 ரூபாய் கூலியாக மீனவர்களுக்கு தந்த நிலையில் மீன் வளர்ச்சி கழகம் ஒரு கிலோ 35 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பழையபடி தங்களுக்கு 55 ரூபாய் கூலியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 15-ந் தேதி முதல் பவானிசாகர் அணைப்பகுதியில் மீனவர்கள் மீன் பிடிப்பதை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது.
- நாய்களை பிடிக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
- பராமரிப்பின்றி தெருக்களில் சுற்றித்திரிந்த 30 நாய்களை பிடித்து சென்றனர்.
ஈரோடு:
கொடுமுடி பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று 12 பேரை கடித்து பதம்பார்த்தது. வெறிபி டித்து திரிந்த அந்த நாயின் ஆட்டம் அந்த பகுதியை ேசர்ந்த மக்களின் முயற்சியால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
அந்த நாயிடம் கடிபட்டவர்களில் பெரும்பாலான வர்கள் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கொடுமுடி பகுதியில் பராமரிப்பின்றி சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
இதன்பேரில் 5 பேர் கொண்ட நாய்களை பிடிக்கும் குழுவினர் மதுரையில் இருந்து கொடுமுடி அருகே அமைந்துள்ள சென்ன சமுத்திரம் பேரூராட்சிக்கு வந்தனர்.
அந்த குழுவினர் சென்ன சமுத்திரம் பேரூ ராட்சி, சா லைப்புதூர், வருந்தியாபா ளையம் உ ள்ளிட்ட பகு திகளில் பராமரிப்பின்றி தெருக்களில் சுற்றித்திரிந்த 30 நாய்களை பிடித்து சென்றனர்.
இதனைத்தொடர்ந்து கொடுமுடியில் தெருநா ய்களை பிடிக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
- போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
- முயல் வேட்டையில் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல்க ளை தடுக்க காவல்துறை மற்றும் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சி க்கோவில் அடுத்துள்ள பெ த்தாம் பாளையம் பகுதியில் ஒரு கும்பல் சட்ட விரோதமா க முயல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக காஞ்சிக்கோவில் போலீஸ் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடை த்துள்ளது.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அதிரடி சோதனை மேற்கொ ண்டனர்.
அப்போது சட்ட விரோதமாக முயல் வேட்டையில் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த சங்கர் கணேஷ், பொன்னு சாமி ஆகிய 2 பேரை கைது செய்து செய்த போலீசார் அவர்களிடம் இருந்து வேட்டைக்கு பயன்படுத்திய உபகரணங்க ள் மற்றும் 2 மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 2 பேர் மற்றும் பறிமுதல் செய்யப் பட்ட பொருட்களையும் ஈரோடு மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
- கோட்டை மாரியம்மன், முனியப்பன் கோவில் கும்பாபி ஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
- விழாவில் பங்கேற்ற கலந்து கொண்ட பல்லாயிரகணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கபட்டது.
பெருந்துறை:
பெருந்துறை பஸ் நிலையம் அருகே உள்ள கோட்டை மாரியம்மன், முனியப்பன் கோவில் கும்பாபி ஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 17-ந் தேதி தீர்த்தம் எடுத்து வருதல், மகா கணபதி ஹோமம், 2-ம் கால பூஜை, கோபுரகலசம் நிறுவுதல், 3-ம் கால பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து இன்று மங்கல இசையும், 4-ம் கால பூஜையும் நடைபெ ற்றதை தொடர்ந்து கோபுரத்தின் மேல் உள்ள விமான கல சங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
வேத மந்திரங்கள் முழங் மகா கணபதி, மகா மாரியம்மன் கும்பாபிஷேகம் நடைபெ ற்றது. இந்த கும்பாபிஷேக த்தை தொடர்ந்து கோட்டை மாரியம்மன், முனியப்பன் சாமிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெ ற்றது.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற கலந்து கொண்ட பல்லாயிரகணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கபட்டது.
ஸ்தபதி சந்தானகிருஷ்ணா மற்றும் விழா கமிட்டி குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- அணையின் நீர்மட்டம் 82.76 அடி யாக உள்ளது.
ஈரோடு:
பவானிசாகர் அணை யில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்தி ற்காக ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம்.
இந்த ஆண்டு கீழ்பவானி வாய்க்கால் தடுப்பு சுவர் கட்டும் பணி மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலை யில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வழக்க ம்போல் ஆகஸ்ட் 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்ப டும் என அரசாணை வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 15-ந் தேதி பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவா னி வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலே யே தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் பாசன விவசாயி கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வாய்க்கால் சீரமைப்பு பணிகள் முடிவடையாத தால் தண்ணீர் நிறுத்தப்ப ட்டுள்ள தாகவும், 3 நாட்களில் பணி கள் முடிக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்படும் என நீர் வளத்துறை அதிகாரிகள் அறிவித்திருந்த நிலையில் தற்போது சீரமைப்பு பணி கள் முடிவடைந்து நேற்று முதல் மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு முதற்கட்டமாக 200 கனஅடி தண்ணீர் திறக்க ப்பட்டது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்ப வானி வாய்க்கால் பாசன த்திற்கு 500 கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்க ப்பட்டுள்ளது.
தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.76 அடி யாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 162 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொ ண்டிருக்கிறது.
பாசனத்தி ற்காக தடப்ப ள்ளி அரக்கன் கோட்டை க்கு 500 கனஅடி, காலிங்க ராயன் பாசனத்தி ற்கு 350 கனஅடி, குடிநீரு க்காக பவானி ஆற்று க்கு 100 கனஅடி என மொத்தம் 1450 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- ஈரோடு-சக்தி மெயின் ரோட்டை கடக்க முயன்று உள்ளார்.
- அந்த வழியாக வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக ராசான் மீது மோதியது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே முத்து காளிமடை பகுதியை சேர்ந்தவர் ராசான் (55). இன்று காலை குள்ளம்பாளையம் பிரிவு ஈரோடு-சக்தி மெயின் ரோட்டை கடக்க முயன்று உள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக ராசான் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லி மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராசான் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடந்தது.
- ரூ.11 லட்சத்து 65 ஆயிரத்து 682-க்கு தேங்காய் மற்றும் எள் விற்பனையாகின.
ஈரோடு:
அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடந்தது.
இதில் அவல்பூந்து றை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 35 ஆயிரத்து 532 எண்ணி க்கையிலான தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இவை கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ20.21 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ 24.60 காசு கள், சராசரி விலையாக 22.69 காசுகள் என்ற விலை களில் மொத்தம் 14 ஆயிர த்து 873 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.3 லட்சத்து 29 ஆயிரத்து 502-க்கு விற்பனையாகின.
இதேபோல சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற எள் விற்பனைக்கான ஏலத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 702 கிலோ எள் விற்பனை செய்யப்பட்டது.
விற்பனையான எள்ளில் கருப்பு ரக எள் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ100.29 காசு கள், அதிகபட்ச விலையாக ரூ171.42 காசுகள், சராசரி விலையாக 135.85 காசுகள் என்ற விலைகளிலும்,
சிவப்பு ரக எள் குறைந்த பட்ச விலையாக ரூ112.9 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.183.49 காசுகள், சராசரி விலையாக ரூ135.85 காசுகள் என்ற விலைகளில் விற்ப னையாகின.
மொத்தம் கரு ப்பு மற்றும் சிவப்புரக எள் ரூ.8 லட்சத்து 36 ஆயிரத்து 180-க்கு விற்பனையாகின.
மொத்தம் 2 விற்பனை க்கூடங்களிலும் சேர்த்து ரூ.11 லட்சத்து 65 ஆயிரத்து 682-க்கு தேங்காய் மற்றும் எள் விற்பனையாகின.






