என் மலர்
ஈரோடு
- பாதசாரிகள் சாலையை கடக்கும் போது விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது.
- வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் செல்லும் வகையில் நாளை முதல் மாற்றி அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு பகுதியில் உள்ள சாலையில் மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொள்ள உள்ளனர்.
இந்த பகுதியில் ஜவுளி, நகைக்கடை, சாலையோர வியாபாரிகள் அதிகம் உள்ளனர். பொதுமக்கள், வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் அதிகம் கூடுவதால் நெருக்கடியாக உள்ளது.
இப்பகுதியில் பாதசாரிக ள் சாலையை கடக்கும்பே ாது விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது.
இந்த சாலையி ல் போக்கு வரத்தை குறை க்கு ம் வகையில் இந்த சாலை சந்திப்பு வாகன ங்களும், பாதசாரிகளும் பாதுகாப்பாக கடந்து செல்லும் வகையில் வாகன போக்குவரத்தை சோதனை அடிப்படையில் தற்காலி கமாக மாற்றி அமைக்க மா வட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் முடிவு செய்துள்ளது.
இதற்காக திருவேங்கடம் வீதிக்கு பிரதான சாலையில் இருந்து வடக்கு நோக்கி மட்டும் வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் செல்லும் வகையில் நாளை (புதன்கி ழமை) முதல் மாற்றி அமை க்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மறுவழியில் வரும் வாக னங்கள், ஈஸ்வரன் கோவில் வழியாக மீனாட்சி சுந்தர னார் சாலையில் இணைய லாம். அல்லது மணிக்கூண்டு சந்திப்பினை கடந்து பெரி யார் மன்றம் சந்திப்பின் வழியாக பன்னீர்செல்வம் பூங்காவை அடையலாம்.
எனவே பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- விவசாயத்திற்காக ஆகஸ்ட் மாதத்தில் வலது கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும்.
- அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதால் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அம்மாபேட்டை:
மேட்டூர் அணை கட்டி முடிக்கும் முன்பாகவே வலது மற்றும் இடது கரை வாய்க்கால்கள் அமைக்க ப்பட்டன. விவசா யத்திற்காக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த வலது கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும்.
மேலும் முன்னதாகவே மேட்டூர் அணை முழு கொள்ளளவு எட்டும் போது உபரி நீர் இந்த வாய்க்கால்களில் திறந்து விடப்படும்.
அப்படி திறக்கப்படும் தண்ணீரை வைத்து சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய பகுதிகளில் சுமார் 46 ஆயிரம் ஏக்கர் விவசாயம் செய்யப்படு கிறது. அதன் மூலம் விவசா யத்தை மூலதனமாக நம்பி இருக்கும் கூலி தொழிலா ளர்களும் பயன்பட்டு பலனடைந்து வருகின்றனர்.
இந்த வருடம் மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதால் வலது கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
வலது கரை வாய்க்காலை நம்பியே எங்கள் விவசா யமும், பொதுமக்களின் குடிநீர் தேவையும் உள்ளது. இந்த வருடம் ஆரம்பம் மு தலில் மழை வெகுவாக குறை ந்து போய் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக வலது கரை வாய்க்கால் வறண்டு காணப்படுகிறது.
இதனால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியு ள்ளது. எனவே 10 நாட்களுக்கு ஒரு முறையாவது முறை வைத்து வலது கரை மற்றும் இடது கரை வாய்க்காலில் தண்ணீர் விடப்பட்டால் பூமி குளிர்ந்து மழை பெறுவ தற்கான வாய்ப்பு உள்ளது.
மக்களின் நலன் கருதி அரசு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு வலது கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- நரிக்குறவர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
- வீட்டுமனை பட்டாவும், வீடுகளும் இலவசமாக கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஈரோடு ரங்கம் பாளையம் அன்னை சத்யா நகரில் வசிக்கும் நரிக்குறவர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
நாங்கள் மேற்கொண்ட முகவரியில் கடந்த 45 வருடமாக 37 குடும்பங்க ளுடன் குடிசை அமைத்தும், சிறிய ஓடு வீடுகளை கட்டியும் வசித்து வருகிறோம்.
மழைக்காலங்களில் குழந்தைகளுடன் தங்குவதற்கு நாங்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். நாங்கள் வசித்து வரும் இடம் குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான இடம் என்று தெரிய வந்துள்ளது.
எனவே குடிசை மாற்று வாரியத்தில் வீடு கட்டி கொடுத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். எங்கள் ஏழ்மை நிலையை மனதில் வைத்து 37 நரிகுறவர்கள் குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டாவும், வீடுகளும் இலவசமாக கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
- பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது.
- போலீசார் சி.சி.டி.வி. கேமரா மூலம் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் பு ஞ்சை புளியம்பட்டி மாத ம்பாளையம் சாலை பிருந்தா வன் கார்டன் பகுதி யை சே ர்ந்தவர் ரமேஷ் (31) சமையல் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு திரு மணமாகி மனைவியுடன் அதே பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இவர் கேட்டரிங் வேலைக்காக வெளியூர் செல்வது வழக்கம்.
இந்நிலையில் சம்பவ த்தன்று வெளியூர் சென்று விட்டு புளியம்பட்டி வந்தா ர். இதை தொடர்ந்து ரமேஷ் புளியம்பட்டியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கேட்டரிங் வேலை முடித்து விட்டு இரவு தனது வீட்டிற்கு வந்தார்.
அவர் அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே செ ன்றி பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது.
இது குறித்து அவர் போலீ சில் புகார் கொடு த்தார். அதன் பேரில் போ லீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி னர். தொடர்ந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபு ணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் பீரோ வில் 3 இடங்களில் நகைகள் மற்றும் பணம் இருந்தது. பீரோவில் ஒரு பையில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரிய வந்தது.
இதில் பீரோவில் துணிகளை எல்லாம் கலைத்து விட்டு நகைகள் வைத்திருந்த பையை மட்டும் மர்ம நபர் திருடி சென்று விட்டதாக ரமேஷ் போலீசாரிடம் தெரிவித்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் நகைகளை திருடிய வர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்க ள்.
தொடர்ந்து இன்ஸ்பெ க்டர் அன்பரசு தலை மையிலான போலீசார் அப்பகுதியில் பொருத்தப்ப ட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் ஆய்வு மேற்கொண்டு விசா ரணை நடத்தி வருகின்றனர்.
பு.புளியம்பட்டி பகுதியில் இது போன்ற திருட்டு சம்பவம் தொடர்ந்து நடந்து வருவதாக பொது மக்கள் புகார் கூறினர். இதனால் மக்களிடம் பெரும் அச்சம் ஏற்பட்டு வருகிறது.
- வெயிலின் தாக்கத்தால் மீன்கள் இறந்து தண்ணீரில் மிதக்கிறது.
- செங்குளம் குளத்து பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது.
சென்னிமலை:
சென்னிமலை அருகே உள்ள ஈஙகூர் ஊராட்சி க்கு ட்பட்ட செங்குளத்தில் ஊரா ட்சி நிர்வாகம் சார்பாக வே லை உறுதி திட்டத்தில் முன்பு இருந்த 4.5 ஏக்கர் குளம் தூர் வார ப்பட்டு சீரமைக்கப்ப ட்டது.
இந்த பகுதியில் கடந்த ஆண்டு பெய்த கன மழையால் குளத்தில் நீர் நிரம்பி இருந்தது. இதில் செங்குளம் கிராம மக்கள் 7,500 ஜிலேபி ரக மீன் குஞ்சுகள் வாங்கி வந்து வளர விட்டு இருந்தனர்.
அந்த மீன் குஞ்சுகள் வளர்ந்து வரும் நிலையில் கடந்த 6 மாதங்க ளுக்கு மேலாக சரியான மழை இல்லாத காரணத்தாலும், கடும் வெய்யலின் தாக்கத்தாலும், குளத்து தண்ணீர் படி, படியாக குறைந்து வருகிறது.
தற்போது தண்ணீர் குறைந்ததால் நீர் பற்றாக்குறை ஏற்பட்டும், வெயிலின் தாக்கத்தால் மீன்கள் இறந்து தண்ணீரில் மிதக்கிறது. இறந்து கிடக்கும் மீன் குஞ்சுகளால் செங்குளம் குளத்து பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது.
இந்த இறந்து தண்ணீரில் மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி குழி தோண்டி புதைத்து குளத்தினை சுத்தம் செய்ய வேண்டும் என செங்குளம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போலீசார் பல்வேறு மளிகை கடைகளில் திடீரென சோதனை மேற்கொண்டுள்ளனர்.
- உரிமையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு 85 பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
பவானி:
பவானியில் உள்ள மளி கை கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சம்பவத்தன்று சப்-இ ன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் பவானி போலீசார் பல்வேறு மளிகை கடை களில் திடீரென சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அந்தியூர் பிரிவு அருகே உள்ள மளிகை கடை ஒன்றில் ஹான்ஸ் 68 பாக்கெட், கூல் லிப் 8 பாக்கெட் விற்ப னைக்காக வைத்திருந்த குற்றத்திற்காக பவானி, தேவராஜன் வீதியை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவர் கைது செய்யப்ப ட்டார்.
அதேபோல் பவானி செங்காடு பகுதியில் மேற்கொ ண்ட சோதனை யில் ஹான்ஸ் 4 பாக்கெட், கூல் லிப் 4 பாக்கெட் விற்பனைக்கு வைத்திருந்த குற்றத்திற்காக சொக்கார ம்மன் நகர் பகுதியை சேர்ந்த வில்சன் (41) என்பவர் கைது செய்யப்பட்டார்.
2 மளிகை கடையில் குட்கா விற்பனை செய்த குற்றத்திற்கு உரிமையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு 85 பாக்கெட் பறிமுதல் செய்ய ப்பட்டு உள்ளது.
- தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் விலைப்பட்டியல் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- வீட்டு வசதி துறை சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டதில் பொதுமக்களிடம் இருந்து 6 ஆயிரம் புகார்கள் வரப்பெற்றன.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் விலைப்பட்டியல் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1 அல்லது 2 இடங்களில் மட்டும் இல்லை. 99 சதவீதம் மதுக்கடைகளில் விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.
அதையும் டாஸ்மாக் பொது மேலாளர் மூலமாக அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள விலை பட்டியல்களை புகைப்படங்களாக எடுத்து அதை பட்டியலாக தயாரித்து நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க உள்ளோம்.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் ஆய்வு செய்ய நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அது எங்களுக்கு ஊக்கமாக அமையும். பணிகளை விரைவுபடுத்த நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பயனுடையதாக இருக்கும். மது விற்பனை நேரம் குறைப்பதற்கும் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. நீதிமன்றத்தின் முழு உத்தரவு கிடைக்கப்பெற்றதும் அதை நடைமுறைப்படுத்த அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். இது நீதிமன்றம் உத்தரவு என்பதால் அதற்கு கீழ்படிந்து தான் ஆக வேண்டும்.
வீட்டு வசதி துறை சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டதில் பொதுமக்களிடம் இருந்து 6 ஆயிரம் புகார்கள் வரப்பெற்றன. துறை அதிகாரிகள் மூலம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. கலைஞர் நூற்றாண்டு நினைவு சின்னம் சிறந்த திட்டமாக ஏற்படுத்தப்படும்.
இவை கலைஞரின் நினைவை மட்டும் போற்றுவதாக மட்டுமல்லாமல் மக்களுக்கு 100 விழுக்காடு பயன்படுவதாக இருக்க வேண்டும் என்பது தான் முதலமைச்சரின் நோக்கமாக உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 15 ஆயிரம் பேருக்கு விற்பனை பத்திரங்கள் தரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- விவசாயத்திற்காக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த வலது கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும்.
- விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
அம்மாபேட்டை:
மேட்டூர் அணை கட்டி முடிக்கும் முன்பாகவே வலது மற்றும் இடது கரை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டன. விவசாயத்திற்காக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த வலது கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும்.
மேலும் முன்னதாகவே மேட்டூர் அணை முழு கொள்ளளவு எட்டும் போது உபரி நீர் இந்த வாய்க்கால்களில் திறந்து விடப்படும்.
அப்படி திறக்கப்படும் தண்ணீரை வைத்து சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய பகுதிகளில் சுமார் 46 ஆயிரம் ஏக்கர் விவசாயம் செய்யப்படுகிறது. அதன் மூலம் விவசாயத்தை மூலதனமாக நம்பி இருக்கும் கூலி தொழிலாளர்களும் பயன்பட்டு பலனடைந்து வருகின்றனர்.
இந்த வருடம் மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதால் வலது கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
வலது கரை வாய்க்காலை நம்பியே எங்கள் விவசாயமும், பொதுமக்களின் குடிநீர் தேவையும் உள்ளது. இந்த வருடம் ஆரம்பம் முதலில் மழை வெகுவாக குறைந்து போய் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக வலது கரை வாய்க்கால் வறண்டு காணப்படுகிறது. இதனால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
எனவே 10 நாட்களுக்கு ஒரு முறையாவது முறை வைத்து வலது கரை மற்றும் இடது கரை வாய்க்காலில் தண்ணீர் விடப்பட்டால் பூமி குளிர்ந்து மழை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
மக்களின் நலன் கருதி அரசு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு வலது கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- சாதாரண நாட்களில் ரூ.2 முதல் 3 கோடி வரையும், பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரையும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
- வணிக வளாகத்தில் ஜவுளி சந்தை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் ஈரோடு கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) செயல்பட்டு வருகிறது. இங்கு வாரச்சந்தை மற்றும் 240-க்கும் மேற்பட்ட தினசரி கடைகள் செயல்பட்டு வருகிறது.
இங்கு நடைபெறும் வார ஜவுளி சந்தை உலக புகழ் பெற்றது. திங்கள்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை வார சந்தை நடைபெறுகிறது.
கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வார சந்தைக்கு வருவது வழக்கம்.
சாதாரண நாட்களில் ரூ.2 முதல் 3 கோடி வரையும், பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரையும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 2019 வருடம் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டு மார்க்கெட் பகுதி அருகே ரூ.54 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டப்பட்டது. இந்த வணிக வளாகத்தில் மொத்தம் 262 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வணிக வளாகத்தில் ஜவுளி சந்தை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் மாநகராட்சி சார்பில் பொது ஏலத்தில் கடைகள் விட முடிவு செய்யப்பட்டது. மேலும் வைப்பு தொகையாக ரூ.8 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதற்கு ஜவுளி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-
நாங்கள் இந்த பகுதியில் சுமார் 45 வருடமாக ஜவுளிக்கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்து கிறோம். இந்நிலையில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டப்பட்டுள்ளது. அதில் 262 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது இடத்தில் கடைகளை விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொது ஏலத்தில் கடைகளை ஏலத்தில் விடகூடாது மாறாக ஜவுளி வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து விட வேண்டும். அதேபோன்று வைப்பு நிதி தொகை அதிகமாக உள்ளது. அதை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
மேலும் தற்போது நாங்கள் கொடுக்கும் வாடகையை 12 மாத வைப்பு நிதியாக செலுத்த தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஈரோடு பெரியார் நகரில் உள்ள கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழி ல்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா இன்று (21-ந் தேதி) முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை நடைபெ றுகிறது.
- புதிய தொழில் முனைவோர் தொ ழிலதி பர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வந்து தொழில் கடன் மற்றும் மத்தி ய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் ராஜ கோபால் சுன்காரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக்கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு தொடங்கிய இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழி ற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடி யாக திகழ்கிறது.
இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழி ற்சாலைகளை நிறுவுவ தற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவு களை விரிவுபடுத்துவத ற்கும், உற்பத்தியை பன்முக ப்படுத்து வதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டதின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
இதையொட்டி ஈரோடு பெரியார் நகரில் உள்ள கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழி ல்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா இன்று (21-ந் தேதி) முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை நடைபெ றுகிறது.
இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் எங்கள் நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்ச ங்கள், மத்திய, மாநில அரசு களின் மூலதனமானியங்கள் புதியதொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரி வான விளக்கங்கள் தரப்படு கிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும்.
இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கபடும் பொதுகடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும்.
இந்த வாய்ப்பை புதிய தொழில் முனைவோர் தொ ழிலதி பர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வந்து தொழில் கடன் மற்றும் மத்தி ய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் ராஜ கோபால் சுன்காரா தெரிவித்துள்ளார்.
- கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நேரிட்ட விபத்தில் ராமசாமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.
- இதுகுறித்து, அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள பிச்சம்பாளையம், கணபதி காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (53). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வளர்மதி (38). கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நேரிட்ட விபத்தில் ராமசாமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.
இதனால் தொடர் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் ராமசாமிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.உடனடியாக அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அந்தியூர் அரசு ருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே ராமசாமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து, அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்ப னையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
- விசாரணையில் அவர்கள், போதைக்காக வலி நிவாரணி மாத்திரை களை தண்ணீரில் கலந்து ஊசி மூலமாக உடலில் செலுத்த விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.
ஈரோடு:
தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்ப னையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனடிப்படையில் ஈரோடு மதுவிலக்கு போலீ சா ர் ஈரோடு, கோட்டை பத்ரகா ளியம்மன் கோயில் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று இருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் ஈரோடு, கருங்கல்பாளை யம், ராஜா ஜிபுரம், ராஜூ மகன் பசுபதி (23), காஞ்சிகோயில், காமராஜ் நகர், பழனிசாமி மகன் ராஜா (23), ஈரோடு, வெட்டுக்காட்டு வலசு, விவேகானந்தர் சாலை, லியாகத் அலி மகள் சமீம் பானு (22), ஈரோடு, மாணி க்கம்பாளையம், நேதாஜி நகர், மாணிக்கம் மகள் சந்தியா (22), ஈரோடு வீரப்பன்சத்தி ரத்தை சேர்ந்த டார்ஜன் (20) என்பது தெரியவந்தது.
மேலும், அவர்கள் 49 வலி நிவாரணி மாத்தி ரைகள், சிரிஞ்சுடன் கூடிய ஊசிகள் 2 வைத்திருந்ததும் கண்டுபி டிக்கப்பட்டது.
விசாரணையில் அவ ர்கள், போதைக்காக வலி நிவாரணி மாத்திரை களை தண்ணீரில் கலந்து ஊசி மூலமாக உடலில் செலுத்த விற்பனைக்கு வை த்தி–ருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவர்கள் 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதில், பசுபதி, சமீம் பானு ஆகியோர் ஏற்கனவே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி ய–தாகவும், விற்பனை செய்ததாகவும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






