என் மலர்
ஈரோடு
- நின்று கொண்டிருந்த லாரி மீது அருண் ஒட்டி வந்த பைக் எதிர்பாராத விதமாக மோதியது.
- இதில் அருண் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
ஈரோடு:
திருப்பூர் மாவட்டம் ஊத் துக்குழி தாலுகா குன்ன த்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனி வாசன் (வயது 48). இவரது உறவினர் திருப்பூர் மாவட்டம் பல்லக்கவுண்டன் பாளை யத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் அருண் (25) ஆகிய இருவரும் கட்டிட வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் வழக்க ம்போல் செங்கப்பள்ளியில் கட்டிட வேலை முடித்து வி ட்டு ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் பெருந்து றைக்கு சென்று கொண்டிரு ந்தனர்.
அப்போது கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை யில் சென்று கொண்டிருந்த போது அங்கு நின்று கொ ண்டிருந்த லாரி மீது அருண் ஒட்டி வந்த பைக் எதிர்பா ராத விதமாக மோதியது. இதில் அருண் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
பின்னர் அருணை ஆம்பு லன்ஸ் மூலம் ஈரோடு மரு த்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அருண் வரும் வழியிலேயே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
இதையடு த்து விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநர் கிருஷ்ண மூ ர்த்தி என்பவர் மீது நடவடி க்கை எடுக்க கோரி ஸ்ரீனி வாசன் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அத ன்பேரில் போ லீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
- நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென நிலை தடுமாறி லாரிக்குள் விழுந்தார்.
- இச்சம்பவத்தில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஈரோடு:
ஈரோடு ெரயில் நிலையம் எதிரில் உள்ள சென்னிமலை சாலையில் இன்று அதிகா லை ஒரு விறகு லாரி செ ன்று கொண்டிருந்தது.
அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென நிலை தடுமாறி லாரிக்குள் விழுந்தார்.
இதில் லாரியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது.கண்ணிமைக்கும் நேரத்தில் நேரிட்ட இச்சம்பவத்தில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில் சூரம்பட்டி போலீ சார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு ஈரோ டு அரசுத் தலைமை மருத்து வ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதை தவிர வேறு எந்த தகவல்களும் தெரியவி ல்லை. இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
- தவறும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை படி கடுமையான நடடிவக்கை எடுக்கப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, ம ஞ்சள், மரவள்ளி, நிலக்கட லை, மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்ப ட்டுள்ளன.
விவசாயிகள் பயிர் சாகு படி பணிகளை தொடர ஏது வாக தற்போது யூரியா உரம் 2936 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 4006 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 2671 மெ.டன்னும்,
காம்ப்ளக்ஸ் உரம் 13961 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 965 மெ. டன்னும், தொடக்க வேளா ண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறு ப்பு) முருகேசன் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உரம் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், உரங்க ளின் அதிகபட்ச விற்பனை விலை மற்றும் இருப்பு விவ ரங்களை விலைப்பலகையில் தெளிவாக எழுதி கடையின் முன் விவசாயிகளுக்கு தெரி யும்படி வைப்பது,
விற்பனை ரசீதில் விவசாயிகள் கையொ ப்பம் பெற்று உரங்கள் வழ ங்குவது, அனைத்து விற்ப னைகளையும் விற்பனை மு னைய கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்வது,
உரிய முதன்மைச்சான்று படிவங்க ளை நிறுவனங்களிடமிருந்து பெற்று உரங்களை கொள்மு தல் செய்வது, உரங்களை அங்கீகரிக்கப்பட்ட இடங்க ளில் மட்டும் இருப்பு வைத்தி ருப்பது ஆகியவற்றை தவறா மல் பின்பற்ற அறிவுறுத்த ப்படுகிறது.
அத்துடன் உரங்களுடன் சேர்த்து பிற பொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயி களுக்கு வழங்கக்கூடாது என்றும், பயிர்களின் உண வாகக் கருதப்படும் உரங்களி ல் கலப்படம் செய்து விற்பனை செய்யக்கூடாது என்றும்,
தவறும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன்படி கடுமையான நடடிவக்கை எடுக்கப்படும்.
இதில் குறைபாடுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தி ல், விவசாயிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்கு நர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளா ண்மை விரிவாக்க மையங்க ளில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படுத்துவதோடு,
திண்டலில் உள்ள வேளா ண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரைக்கப்படு வதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்தி உர செலவை குறைத்து கொள்ள லாம்.
இவ்வாறு அவர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வாக்குசாவடி அமைவிடம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- இதில் மொடக்குறிச்சி தொகுதியை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
ஈரோடு:
மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வாக்குசாவடி அமைவிடம் குறித்த ஆய்வுக்கூட்டம் தாசில்தார் இளஞ்செழியன் தலைமையில் நடந்தது.
தேர்தல் துணை தாசில்தார் அறிவ ழகன் முன்னிலை வகித்தார். இதில் மொடக்குறிச்சி தொகுதியை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
மொடக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 277 பூத்கள் உள்ளன. இந்த பூத்களில் 15-ல் இருந்து 20 பூத்களை ஒருங்கிணைத்து அந்த பூத்களை சேர்ந்த அரசியல் கட்சி பிரதிநிதி களுடன் கூட்டம் நடத்த வேண்டும்.
வாக்களர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை நீக்க வேண்டும்.
பூத்களில் வாக்குசாவடி அலுவலரின் அலைபேசி எண்ணை குறிப்பிட்டுள்ள அறிவிப்பினை வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்வைத்தனர்.
- பொதுமக்கள் போராட்டம் காரணமாக அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணி வகுத்து நின்றன.
- வாகனங்களில் வந்த ஏராளமானவர்களின் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலை கிராமம் தாமரைக்கரை பகுதியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை அந்தியூர்- மைசூர் மெயின் ரோடு தாமரைக்கரை பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் பர்கூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் போராட்டம் காரணமாக அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணி வகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாத்திப்பு ஏற்பட்டது.
இந்த ரோடு அந்தியூர்- மைசூர் செல்லும் பிரதான சாலையாக உள்ளதால் வேலைக்கு செல்பவர்கள், மற்றும் அலுவலகம் செல்பவர்கள் என வாகனங்களில் வந்த ஏராளமானவர்களின் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன.
மேலும் பர்கூர் மலை கிராம பகுதிகளில் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. அந்தியூரில் இருந்து பர்கூர் பள்ளிக்கு இன்று காலை சென்ற வேன்களும் செல்ல முடியாமல் ரோட்டோரம் நிறுத்தப்பட்டன. இதனால் ஆசிரிய- ஆசிரியைகளும் சரியான நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
- ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டிற்கு 450 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
- இதனா ல் சில காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை இந்த வாரம் குறைந்து உள்ளது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.
தாளவாடி, ஓசூர், ஒட்டன் சத்திரம். திண்டுக்கல், பெங்களூர், கர்நாடகா, தாராபுரம் போன்ற பகுதிகளில் இருந்து தினமும் 150 டனுக்கு மேற்பட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு காரணங்களால் காய்கறிகள் வரத்து குறைய தொடங்கி யது. இதன் எதிரொலியாக தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ், இஞ்சி, போன்றவை களின் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்த து. தக்காளி சில்லரை விற்பனையில் கிலோ 160 ரூபாய் விற்பனையானது.
இதேபோல் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 160 ரூபாய் வரை உயர்ந்தது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி, சின்ன வெங்காயம் விலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் மீண்டும் காய்கறிகள் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதன் எதிரொலியாக காய்கறிகள் விலையும் குறைந்து வருகிறது.
கடத்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை வரத்து அதிகரித்ததன் காரணமாக படிப்படியாக குறைந்து இன்று கிலோ ரூ. 30 முதல் 40-க்கு விற்பனையாகி வருகிறது. இதேப்போல் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த வாரம் ரூ.50 இருந்தது. இன்று மேலும் குறைந்து ரூ.40-க்கு விற்பனையாகி வருகிறது.
இன்று ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டிற்கு 450 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இது வழக்கத்தை விட 3 மடங்கு அதிகரிப்பு. இதனா ல் சில காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை இந்த வாரம் குறைந்து உள்ளது.
கடந்த வாரம் 60 ரூபாய்க்கு விற்ற கத்திரிக்காய் இன்று ஒரு கிலோ ரூ.45 விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கடந்த வாரம் 40 ரூபாய்க்கு விற்ற வெண்டைக்காய் இன்று 30, முள்ளங்கி 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வ.உ.சி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
பாவக்காய்-40, பீர்க்க ங்காய்-45, புடலங்கா ய்-25-30, முருங்கைக்காய்-30, சுரக்காய்-15, கருப்பு அவரை-70, பட்டவரை-80, கேரட்-70, பீட்ரூட்-65, முட்டைகோஸ்-25, பீன்ஸ்-70, காலிபிளவர்-25, உருளைக்கிழங்கு-35 பெரிய வெங்காயம்-40, பச்சை மிளகாய்-55, கொடைமி ளகாய்-70, பழைய இஞ்சி-250, புதிய இஞ்சி-120.
- கருப்புசாமி சேலையால் தூக்கிட்டு தொங்கியுள்ளார்.
- பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடு த்துள்ள மேட்டுப்புதூர், கினிப்பாளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் சென்னியம்மாள் (50). இவரது கணவர் குருநாதன் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்.
இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். கடைசி மகன் கருப்புசாமி (19). டிரைவராக வேலை பார்த்து வந்தார். மதுவுக்கு அடிமையான கருப்புசாமி தனது தாய் சென்னி யம்மாளிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
மதுவுக்கு அடிமையானதை நினைத்து கருப்புசாமி கடந்த சில நாள்களாகவே விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்ப வத்தன்று மாலை சென்னி யம்மாள் வெளியில் சென்றி ருந்தார். சிறிது நேரம் கழித்து அவரது மகள் வீட்டுக்கு வந்து பார்த்த போது கருப்புசாமி சேலையால் தூக்கிட்டு தொங்கியுள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சி யடைந்த சென்னியம்மா ளின் மகள் அக்கம் பக்கத்தி னரின் உதவியுடன் கருப்பு சாமியை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கருப்புசாமி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து சென்னிய ம்மாள் அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சீரான குடிநீர் வழங்க கோரி பெண்கள் காலிகுடங்களுடன் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அந்தியூர்:
அந்தியூர் அத்தாணி ரோட்டில் பாலம் விரிவா க்கம் பணி நடந்து வருகிறது. இதையொட்டி குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
இதனால் கடந்த 5 நாட்களாக அந்தியூர் பகுதியில் குடிநீர் தட்டு ப்பாடு நிலவி வருகிறது. இதனால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்தியூர் 3-வது வார்டு பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கவுன்சிலர் கீதா சேகர் தலைமையில் அந்தியூர், பர்கூர் ரோடு அரசு மருத்துவமனை கார்னர் பகுதியில் ஒன்று திரண்டனர்.
இதையடுத்து சீரான குடிநீர் வழங்க கோரி பெண்கள் காலிகுடங்களுடன் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அந்த பகுதி பெண்கள் கூறும் போது, அந்தியூர் பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக குடிநீர் வருவதில்லை. இதனால் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம்.
லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த குடிநீர் கலங்கலாக குடிக்க முடியாத நிலையில் உள்ளது. எனவே குழாய்கள் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி, பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணை தலைவர் பழனிசாமி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்து க்கு வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் லாரிகள் மூலம் நல்ல குடிநீர் சீரான முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குழய் அமைக்கும் பணி விரைந்து முடித்து வழக்கம் போல் குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பு ஏற்பட்டது.
- ஈரோட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் தொடக்க விழா நடந்தது.
- அமைச்சர் முத்துசாமி புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி பகுதி யில் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளி க்கிறது. புதிய தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக் கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சாலை சீரமைப் புக்கு முதல் கட்டமாக ரூ.132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது.
இந்தநிலையில் ஈரோட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் தொடக்க விழா நேற்று நடந் தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர்ராஜகோபால்சுன் கரா தலைமை தாங்கினார்.
மாநகராட்சி மேயர் நாகரத்தி னம், ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழ்நாடு வீட் டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச் சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் சூரம்பட்டி கோவலன் வீதி, என்.எஸ்.கே.நகர், சக்தி நகர், காரப்பாறை, கருவேப்பிலை வலசுரோடு, மாணிக்கம் பாளையம் அடுக்குமாடி பகுதி, மண்டல அலுவலகம், சொட்டையம்பாளையம், ராம்பாலக்காடு வீதி உள் ளிட்ட இடங்களில் ரூ.16 கோடியே 22 லட்சம் செல வில் தார் சாலை அமைக் கப்படுகிறது.
இதேபோல் கங்காபு ரத்தில் ரூ.10 லட்சம் செல வில் அமைக்கப்பட்ட புதிய குடி நீர்தொட்டியையும், தண்ணீர் பந்தல்பாளையம் அரசு பள்ளிக்கூடத்தில் ரூ.35 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடங் களையும் அமைச்சர் முத்து சாமி திறந்து வைத்தார்.
இந்த விழாவில் மாநக ராட்சி துணை மேயர் செல்வ ராஜ், துணை ஆணையாளர் சுதா, செயற்பொறியாளர் விஜயகுமார், துணை பொறி யாளர் சண்முகவடிவு, மண் டல தலைவர்கள் பி.கே.பழனி சாமி, சுப்பிர மணியம், சசிகுமார், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிர மணியம், மாவட்ட துணைச் செயலாளர் செந்தில் குமார், பகுதி செயலாளர் அக்னி சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
- போலீசார் சோதனையிட்டதில் சிறிய நோட் ஒன்றில் 6 பக்கங்களில் லாட்டரி எண்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
ஈரோடு சென்னிமலை ரோடு, கூட்ஸ் ஷெட் எதிரில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், கண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த புகழேந்தி (29), ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (35), சென்னிமலை ரோடு, கூட்ஸ் ஷெட் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (30) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் போலீசார் சோதனையிட்டதில் சிறிய நோட் ஒன்றில் 6 பக்கங்களில் லாட்டரி எண்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- கோபாலுக்கு வலிப்பு நோய் பாதிப்பு உள்ளது.
- அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கோபால் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மொ டக்குறிச்சியை அடுத்துள்ள எழுமாத்தூர் அய்யகவுண்ட ன்பாளையம் நெறிப்பாறை பகுதியை சேர்ந்தவர்
கோபால் (32). ஜே.சி.பி. டிரைவர். இவரது மனைவி மணிமேக லை (28). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் கோபாலுக்கு வலிப்பு நோய் பாதிப்பு உள்ளது. காலை வழக்கம் போல வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கோபால் சென்றார்.
சிறிது நேரத்தில் கோபாலின் உறவினர் ஒருவர் மணிமேகலைக்கு போன் செய்து கூட்டப்பள்ளி வாய்க்கால் அருகே கோபால் மூச்சு பேச்சின்றி, வாயில் நுரை தள்ளிய நிலையில் கீழே விழுந்து கிடப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து மணிமேகலை உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று உறவினர்கள் உதவியுடன் கோபாலை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கோபால் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து மொடக்கு றிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
ஈரோடு:
ஈரோடு காசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதையொட்டி நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஈரோடு சூரம்பட்டி வலசு, அணைக்கட்டு ரோடு, சங்கு நகர், சேரன் நகர், மாதவி வீதி,
டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு, கோவலன் வீதி, காமராஜர் வீதி, நேரு வீதி, தாத்துக் காடு, நேதாஜி வீதி, சாஸ்திரி நகர், ரெயில் நகர், கே.கே. நகர், சென்னிமலை ரோடு,
ரங்கம்பாளையம், பெரிய சடையம்பாளையம், சிவம் நகர், அண்ணா நகர், சேனாதி பாளையம், காசிபாளையம், சாஸ்திரி நகர், மூலப்பாளையம், நாடார் மேடு,
கொல்லம்பாளையம், பச்சப்பாளி, காந்திஜி ரோடு, ஈ.வி.என். ரோடு, முத்தம்பாளையம ஹவுசிங் போர்டு, நல்லியம்பாளையம், கள்ளுக்கடை மேடு,
பழைய ரெயில் நிலைய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய செயற் பொறியாளர் தெரிவித்தார்.






