என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A large medical camp at"

    • சென்னிமலை அருகே முகாசி பிடாரியூரில் மாபெரும் மருத்துவ முகாம் நடக்கிறது.
    • நெசவாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என கைத்தறி துறை உதவி இயக்குனர் பெ.சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சென்னிமலை:

    சென்னிமலை வட்டா ரத்தில் உள்ள கைத்தறி நெச வாளர்கள் பயன் பெறும் வகையில் நாளை (வெள்ளி க்கிழமை) சென்னிமலை அருகே முகாசி பிடாரியூரில் மாபெரும் மருத்துவ முகாம் நடக்கிறது.

    இதில் நெசவாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என கை த்தறி துறை உதவி இயக்குனர் பெ.சரவணன் வே ண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது குறித்து கைத்தறி துறை உதவி இயக்குனர் சரவணன் கூறியதாவது:

    தமிழ்நாடு அரசு கைத்தறி துறை ஈரோடு சரகம் சார்பா க முன்னாள் முதல்-அமை ச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கைத்தறி நெசவாளர்களு க்கான மாபெரும் மருத்துவ முகாம் நாளை (வெள்ளிக்கி ழமை) காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை சென்னிமலை அடுத்துள்ள முகாசிபிடாரியூர் காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடக்கிறது.

    இதில் இதயம், நுரையீரல், கண் உட்பட அனைத்து வித மான உருப்புகளுக்கும், நோ ய்களுக்கும் தனி தனி 36 தலை சிறந்த மருத்துவ நிபு ணர்கள் கலந்து கொ ண்டு ஆலோசனைகளும், சிகி ச்கைகளும் அளிக்க உள்ள னர்.

    இந்த மாபெரும் மருத்து வ முகாமினை தமிழ் வள ர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாத ன் தொடங்கி வைக்கிறார்.

    இந்த மருத்துவ முகா மில் அனைத்து கைத்தறி நெச வாளர்களும் கலந்து கொ ண்டு பயனடையுமாறு கே ட்டு கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×