என் மலர்
நீங்கள் தேடியது "கீழ்பவானி பாசன பகுதியில்"
- நெல் சாகுபடி செய்வதற்காக கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
- புரட்டாசி பட்டத்தில் பயிரிட ஏற்ற ரக மான வம்பன் 11 என்ற ரகம் இருப்பில் உள்ளது.
ஈரோடு:
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன பகுதியில் உள்ள ஒரு லட்சத்து 3,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற ஏதுவாக நன்செய் பாசனத்தி ற்கு நெல் சாகுபடி செய்வத ற்காக கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்க ழகத்தின் கீழ் இயங்கும் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் கீ ழ்பவானி பாசனப்பகுதியில் விவசாயிகள் நெல் பயிரிடு வதற்கு தேவையான குறுகிய கால மற்றும் நீண்ட கால ரக விதை நெல் ரகங்க ள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
பவானிசாகர் வேளா ண்மை ஆராய்ச்சி நிலைய த்தில் நெல், உளுந்து, பாசி ப்பயிறு, நிலக்கடலை, மஞ்ச ள் ஆகிய பயிர்களுக்கு தேவை யான தரமான விதைகள் உற்பத்தி செய்து இப்பகுதி விவசாயிகளுக்கு குறிப்பிட்ட பருவங்களில் பயிர் செய்வத ற்காக வழங்கி வருகிறோம்.
நெல்லில் வல்லுநர் விதை, ஆதார விதை, சான்று விதை மற்றும் உண்மை நிலை விதைகள் கோ 51, கோ 55, ஏடீடி ஆர் 45, ஏடீடி 37, ஏடீடி 51, கோ 54, பவானி, மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி போ ன்ற நெல் ரகங்களில் விதை உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது இந்த பருவ த்திற்கு தேவையான நெல் ரகங்களான கோ 51, கோ 55, ஏடீடி ஆர் 45, ஏடீடி 51 ஆகிய கிரகங்களில் ஆதார மற்றும் சான்று நிலை விதை நெல் இருப்பில் உள்ளது.
இதில் ஆதார விதை நெல் ஒரு கிலோ ரூ. 44-க்கும், சான்று விதை நெல் ஒரு கிலோ ரூ. 39-க்கும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேப்போல பயிர் வகை பயிர்களான புரட்டாசி பட்டத்தில் பயிரிட ஏற்ற ரக மான வம்பன் 11 என்ற ரகம் இருப்பில் உள்ளது. ஒரு கிலோ ஒன்றுக்கு ரூ. 110-க்கு விற்பனை செய்யப்படுகி றது.
பவானிசாகர் வேளா ண்மை ஆராய்ச்சி நிலைய த்தில் தரமான நெட்டை ரக தென்னை கன்றுகள் விற்ப னை செய்யப்பட்டு வருகிற து.
ஒரு தென்னைங்க ற்றின் விலை ரூ.75, இதை நெல் பயறு வகை விதைகள் மற்றும் தென்னங்கன்றுகள் தேவைப்படும் பூசைகள் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் அலுவலக வேலை நாட்களி ல் நேரடியாக வந்து பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- விதை பண்ணையை ஈரோடு மாவட்ட விதை ச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு செய்தார்.
- விதைச் சான்று அலுவலர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நசியனூர் கீழ்பவானி பாசனப் பகுதியில் சுப்பிர மணி என்ற விவசாயிக்கு உளுந்து கோ 7 என்ற புதிய ரகத்தின் வல்லுநர் நிலை விதை வழங்கி ஆதாரநிலை ஒன்று விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விதை பண்ணையை ஈரோடு மாவட்ட விதை ச்சான்று மற்றும் அங்கக ச்சான்று உதவி இயக்குநர் சு.மோகனசுந்தரம் ஆய்வு செய்தார்.
மேலும் விதைச்சான்று உதவி இயக்குநர் ஆய்வின் போது தெரிவித்ததாவது:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்புதிய ரகத்தினை விதைப்பு செய்த நாளில் இருந்து 60 முதல் 65 நாட்களில் அறுவடை செய்யலாம்.
அனைத்து பரு வங்களிலும் பயிரிடலாம். காய்கள் ஒரே நேரத்தில் முற்றும் தன்மை உள்ளதால் எந்திர அறுவடைக்கு ஏற்றது. உளுந்தின் அளவு மற்ற உளுந்து இரகங்களை விட சற்று பெரியதாக இருக்கும்.
இந்த ரகமானது ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரவல்லது. 22.3 சதவீதம் புரதச்சத்து உடையது மற்றும் இந்த ரகம் மஞ்சள் தேம்பல் நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்டது.
விதை பரிசோதனைக்கு பின் இந்த ரகத்தின் சான்று பெற்ற விதைகள் ஈரோடு வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் விரைவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட வுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், கலவன்கள் கண்டறிதல் மற்றும் அவற்றை அகற்றும் முறைகள் குறித்து விதைச் சான்று அலுவலர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆய்வின் போது விதைச்சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) ராதா மற்று ம் உதவி விதை அலுவலர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.






