என் மலர்
நீங்கள் தேடியது "புதிய ரகம் அறிமுகம்"
- விதை பண்ணையை ஈரோடு மாவட்ட விதை ச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு செய்தார்.
- விதைச் சான்று அலுவலர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நசியனூர் கீழ்பவானி பாசனப் பகுதியில் சுப்பிர மணி என்ற விவசாயிக்கு உளுந்து கோ 7 என்ற புதிய ரகத்தின் வல்லுநர் நிலை விதை வழங்கி ஆதாரநிலை ஒன்று விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விதை பண்ணையை ஈரோடு மாவட்ட விதை ச்சான்று மற்றும் அங்கக ச்சான்று உதவி இயக்குநர் சு.மோகனசுந்தரம் ஆய்வு செய்தார்.
மேலும் விதைச்சான்று உதவி இயக்குநர் ஆய்வின் போது தெரிவித்ததாவது:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்புதிய ரகத்தினை விதைப்பு செய்த நாளில் இருந்து 60 முதல் 65 நாட்களில் அறுவடை செய்யலாம்.
அனைத்து பரு வங்களிலும் பயிரிடலாம். காய்கள் ஒரே நேரத்தில் முற்றும் தன்மை உள்ளதால் எந்திர அறுவடைக்கு ஏற்றது. உளுந்தின் அளவு மற்ற உளுந்து இரகங்களை விட சற்று பெரியதாக இருக்கும்.
இந்த ரகமானது ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரவல்லது. 22.3 சதவீதம் புரதச்சத்து உடையது மற்றும் இந்த ரகம் மஞ்சள் தேம்பல் நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்டது.
விதை பரிசோதனைக்கு பின் இந்த ரகத்தின் சான்று பெற்ற விதைகள் ஈரோடு வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் விரைவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட வுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், கலவன்கள் கண்டறிதல் மற்றும் அவற்றை அகற்றும் முறைகள் குறித்து விதைச் சான்று அலுவலர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆய்வின் போது விதைச்சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) ராதா மற்று ம் உதவி விதை அலுவலர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.






