என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சத்தியமங்கலம் காவல்துறை அதிகாரிகள் சார்பில் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • இக்கூட்டத்தில் சுமார் 700 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில் சத்தியமங்கலம் காவ ல்துறை அதிகாரிகள் சார் பில் ஒருங்கிணைந்து விழி ப்புணர்வு கூட்டம் நடந்தது.

    இக்கூட்டத்திற்கு கல்லூ ரியின் முதல்வர் ராதாகி ருஷ்ணன் தலைமை தாங்கி னார். மாணவர்கள் சமுதா யத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை விரிவாக எடுத்துரைத்தார்.

    இக்கூட்டத்தில் சத்தி யமங்கலம் அனைத்து மக ளிர் இன் ஸ்பெக்டர் இந்தி ராணி சோ பியா கல்லூரி மாணவ, மாணவிகள் இளம் வயதில் அடையும் பாதிப்புகள், போக்சோ தண்டனைகளை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்.

    சத்தியமங்கலம் போக்குவரத்துதுறை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், மாண வர்கள் கடைபிடிக்க வேண்டிய போக்குவரத்து விதிமுறைகளை பற்றி எடுத்துரைத்தார்.

    சத்தியமங்கலம் சட்டம் ஒழுங்கு முருகேசன் மாணவ சமுதாயம் போதை, குடிப்பழக்கம் மற்றும் தவறான பழக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

    இக்கூட்டத்தில் சுமார் 700 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ் துறை பேராசிரியர் பழனி சாமி வரவேற்றார். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

    • காங்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.
    • சிமெண்ட் கலவைகள் கொ ண்டு அடை க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கீழ் பவானி வா ய்க்கால் நன்செய் பாசன த்திற்கு கடந்த 20-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு படிப்படியாக நீர்வரத்து உய ர்த்தப்பட்டது. 1,500 கனஅடி நீர் தற்பொழுது திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் குருமந்தூ ர்-ஆண்டவர்மலை 29 மைல் பகுதியில் பழைய பாலத்தின் அடிப்பகுதியில் காங்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.

    இதனால் பொதுமக்கள், விவ சாயி கள் அதிர்ச்சி அடைந்த னர். பொதுப்பணி துறையி னர் இதனை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை வாய்க்காலில் உடைப்பு ஏற்படாமல் இருக்க சிமெண்ட் கலவைகள் கொ ண்டு அடை க்கும் பணியில் பொதுப்ப ணித்துறையினர் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

    • கடைகளை காலி செய்ய தீபாவளி வரை அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
    • காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் காலி இடத்தில் ஜவுளிக்கடைகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் பன்னீர்செல்வம் பார்க் சந்திப்பு அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.54 கோடி மதிப்பில் 4 தளத்துடன் 292 கடைகள் அடங்கிய புதிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.அங்கு ஏற்கனவே கடை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறி வணிக வளாகம் கட்டப்பட்டது.

    இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் வணிக வளாகம் திறக்கப்பட்டது. ஆனால் கடைகளை ஒதுக்குவதில் முன்னுரிமை தராமல் பொது ஏலத்தில் விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்ததால் ஜவுளி மார்க்கெட் கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக புதிய வணிக வளாகம் கடைகள் ஏலம் போகாமல் இழுப்பறி நீடித்து வந்தது.

    இதற்கிடையே புதிய வணிக வளாகம் கட்டுமான பணிக்கு முன்னரே அதன் அருகில் ஏற்கனவே கடை அமைத்துள்ள வியாபாரிகள் மாநகரா ட்சியின் அனுமதியின் பேரில் தற்காலிக கடை அமைத்து ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.

    இதற்கு இடையே 60 நாளில் தற்காலிக கடைகளை அகற்றிவிட்டு புதிய வணிக வளாகத்தை ஏலத்தில் விட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 60 நாள் கெடு முடிவு அடைந்ததால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடைகளை காலி செய்ய வலியுறுத்தி கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கடைக்காரர்கள் அமைச்சர் முத்துசாமியிடம் முறையிட்டனர். மேலும் கடைகளை காலி செய்ய தீபாவளி வரை அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் அமைச்சர் முத்துசாமியின் அறிவுறுத்தலையின்படி மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜயகுமார், மாநகராட்சி அதிகாரிகள், ஜவுளி வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது நீதிமன்ற உத்தரவு என்பதால் அமைச்சரோ, மாநகராட்சி நிர்வாகமோ ஒன்றும் செய்ய முடியாது என்றும், உடனடியாக கடைகளை காலி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    எனினும் இதற்கு மாற்று தீர்வாக புதிய வணிக வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த 120 கடைக்காரர்களுக்கு ஈரோடு நாச்சியப்பா வீதியில் உள்ள சின்ன மார்க்கெட் எனப்படும் காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் காலி இடத்தில் ஜவுளிக்கடைகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக சின்ன மார்க்கெட்டில் உள்ள இடங்கள் அளவீடு செய்யும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். தற்போது சின்ன மார்க்கெட் பகுதியில் காய்கறி கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு அதன் எதிரே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் காய்கறி கடைகள் அமைத்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    சின்ன மார்க்கெட் பகுதியில் கனி மார்க்கெட் வியாபாரிகள் கடை ஒதுக்கீடு செய்யப்படுவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தீபாவளி வர வரை பழைய இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு சின்ன மார்க்கெட் பகுதியில் கடை நடத்த நாங்கள் தயாராக இருப்பதாக கனி மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து ஈரோடு கனி மார்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-

    புதிய வணிக வளாக கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பே ஏற்கனவே கடைகள் அமைந்துள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

    ஆனால் வணிக வளாகம் திறக்கப்பட்ட பிறகு பொது ஏலம் அறிவிக்கப்பட்டது. அதிகமான வாடகை, வைப்பு தொகை நிர்ணயிக்கப்பட்டதால் எங்களால் கடைகளை வாடகைக்கு எடுக்க முடியவில்லை.

    இந்நிலையில் கடைகளை திடீரென காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சர் முத்துசாமி சந்தித்து எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம். தற்போது எங்களுக்கு மாநகராட்சி சார்பில் சின்ன மார்க்கெட் பகுதியில் கடைகள் ஒதுக்கு வதாக தெரிவித்துள்ளனர்.

    நாங்கள் இதை ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் எங்களுக்கு தீபாவளி வரை இதை பழைய இடத்தில் வைத்து வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும். தீபாவளி காரணமாக வியாபாரம் எங்களுக்கு சூடு பிடிக்கும்.

    இதனால் பல ஜவுளி வியாபாரிகள் கடனுக்கு சரக்குகளை வாங்கியுள்ளனர். அதை தீபாவளி வியாபாரம் மூலம் தான் எங்களால் எடுக்க முடியும். தீபாவளி முடிந்ததும் நாங்கள் சின்ன மார்க்கெட் பகுதிக்கு செல்ல தயாராக இருக்கிறோம். ஆனால் மாநகராட்சி சார்பில் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    எனவே இன்று மதியம் மீண்டும் அமைச்சர் முத்துசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில் எங்களது தரப்பு கோரிக்கையில் கொடுத்து அவரிடம் தெளிவாக எடுத்துரைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் காரணமாக ஈரோடு கனி மார்க்கெட் வியாபாரிகள் இன்று 3-வது நாளாக கடைகளை அடைத்துள்ளனர். இதனால் 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. அதேநேரம் சாலையோர ஜவுளி கடைகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

    • காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு அரசு மேற்கொள்வது வரவேற்கத்தக்கது.
    • 2014ல் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களின் நலன் காக்கப்படும் என பிரதமர் கூறியிருந்தார்.

    ஈரோடு:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஈரோட்டில் கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- பா.ஜ.க. பொறுப்பேற்று 10 ஆண்டு காலம் ஆகியும் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

    அதற்கு மாறாக விலைவாசி நாள்தோறும் உயர்ந்து வருகிறது. கட்டுப்படுத்துவதற்கு எந்தவித முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. பிரதமர் செல்லும் இடங்களில் குடும்ப அரசியல் மற்றும் ஊழலை பற்றி மட்டுமே பேசுகிறார்.

    ஊழலை பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு தார்மீக பலம் இருக்கிறதா என்பதை அவர் யோசிக்க வேண்டும். ஊழல், வேலையில்லா திண்டாட்டம் இதையெல்லாம் கண்டித்து வருகிற செப்டம்பர் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் தொடர் மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.

    12-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், 13 ,14 இரு நாட்களில் வட்ட மற்றும் ஒன்றிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

    தமிழ்நாடு ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு போட்டி அரசாங்கத்தையும் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் செயல்பட்டு வருகிறார். அவரது நடவடிக்கை அரசாங்கத்திற்கு எதிரானது மட்டுமல்ல தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கையாக உள்ளது.

    அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பூர்த்தி செய்ய வேண்டும், ஆனால் அரசை செயல்படுத்த முடியாத நடவடிக்கையை ஆளுநர் மேற்கொண்டு வருகிறார். ஆளுநரின் செயல்பாட்டை எதிர்த்து குடியரசுத் தலைவரிடம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு முறையீடு செய்துள்ளார்கள்.

    ஆனால் இதுவரை குடியரசுத் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் ஏட்டிக்கு போட்டியாக தொடர்ந்து வன்முறையை தூண்டக்கூடிய வகையில் கவர்னரின் நடவடிக்கை உள்ளது.

    கவர்னரை கண்டித்து தமிழ்நாட்டு நலன் கருதி கவர்னரின் அராஜகத்தை கண்டித்து மக்களே வெகுண்டெழுந்து போராட வேண்டிய நிலைமை ஏற்படும். இது போன்று ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு கவர்னரும், மத்திய அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு அரசு மேற்கொள்வது வரவேற்கத்தக்கது. 25-ம் தேதி முதலமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அனைத்து பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதி 25-ம் தேதி அவரவர் தொகுதியில் திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும்.

    நாட்டிலேயே மிக மோசமான முறையில் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் உயிர் உடமை பாதுகாப்பில்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களின் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதும், சேதப்படுத்தப்படுவதும் தொடர்ந்து வருகிறது. கடற்கொள்ளையர்களாலும் பொருட்கள் களவாடப்படுகிறது.

    2014ல் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களின் நலன் காக்கப்படும் என பிரதமர் கூறியிருந்தார். இலங்கையுடன் நல்ல நட்பில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை ஒன்றிய அரசு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பணிகள் முடிவடைந்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் திறந்து வைக்கப்பட்டது.
    • வணிக வளாகம் மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) செயல்பட்டு வருகின்றது. இங்கு 240 தினசரி கடைகளும், 720 வார சந்தை கடைகளும் உள்ளன. வாரந்தோரும் செவ்வாய்க்கிழமை ஜவுளி சந்தை நடைபெற்று வருகின்றது.

    இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கனி மார்க்கெட் வளாகத்தில் புதிய வணிக வளாகம் சுமார் ரூ.60 கோடி செலவில் 4 தளங்களுடன் 292 கடைகள் கட்டப்பட்டன. பணிகள் முடிவடைந்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் திறந்து வைக்கப்பட்டது.

    கடைகள் ஒதுக்குவதற்காக ஏலம் விடப்பட்டது. அதன்படி ஒவ்வொரு கடைக்கும் சராசரியாக ரூ.8 லட்சம் வரை டெபாசிட் தொகையும், வாடகையாக ரூ.31 ஆயிரத்து 500 என நிர்ணயிக்கப்பட்டது.

    ஆனால் கடை வாடகை மற்றும் வைப்புத்தொகை அதிகமாக இருந்ததால் கடைகளை ஏலத்தில் எடுக்க வியாபாரிகள் யாரும் முன் வரவில்லை. இதனால் வணிக வளாகம் மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

    வாடகையை குறைத்து ஏற்கனவே உள்ள ஜவுளி வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கனி மார்க்கெட் வியாபாரிகள் தரப்பில் சென்னை உயர் நீதிம ன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை முடிந்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தோடு தற்போது புதிய வணிக வளாகத்தை சுற்றி உள்ள கடைகளை வியாபாரிகள் 60 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டுமென்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

    இந்த கால அவகாசம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து கடைகளை காலி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் ஜவுளி வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

    இதை கண்டித்து கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் நேற்று நடைபெற வேண்டிய வாரச்சந்தை நடைபெறவில்லை.

    இதனால் வெளியூரிலிருந்து வந்த வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். இதனிடையே இதுதொடர்பாக ஜவுளி வியாபாரிகளுடன் அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது புதிய வணிக வளாகத்தில் வியாபாரிகள் ஏலம் எடுக்க வசதியாக டெபாசிட் தொகையை குறைப்பது தொடர்பாகவும், வாடகை அதிகமாக உள்ளதால் கடையை இரண்டாக பிரிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. விரைவில் சுமூக தீர்வு காணப்படும் என்று அமைச்சர் மற்றும் மாநகராட்சி தரப்பில் உறுதியளித்தனர்.

    ஆனாலும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை அடுத்து இன்று 2-வது நாளாக கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் கடைகளை அடைத்து உள்ளனர். இதனால் இன்றும் துணி எடுக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதுகுறித்து ஈரோடு கனி மார்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் செல்வராஜ் கூறியதாவது:- புதிய வணிக வளாக கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பே ஏற்கனவே கடைகள் அமைந்துள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

    ஆனால் வணிக வளாகம் திறக்கப்பட்ட பிறகு பொது ஏலம் அறிவிக்கப்பட்டது. அதிகமான வாடகை, வைப்பு தொகை நிர்ணயிக்கப்பட்டதால் எங்களால் கடைகளை வாடகைக்கு எடுக்க முடியவில்லை.

    இந்நிலையில் கடைகளை திடீரென காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக கனி மார்க்கெட் மட்டுமே எங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. அமைச்சருடன் நடந்த பேச்சு வார்த்தையில் எங்களுக்கு தீபாவளி வரை வியாபாரம் செய்ய அனுமதி கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தோம்.

    அதேபோல் மாற்று இடம் தந்தாலும் நாங்கள் அங்கே செல்ல தயாராக இருக்கிறோம். சங்க கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிலைதடுமாறி நடராஜ் தவறி வாய்க்காலில் விழுந்தார்.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பவானி:

    பவானி கல்தொழி லாளர் முதல் வீதியை சேர்ந்தவர் நடராஜ் (65). கூலி தொழி லாளி. இவர் 2-வது மனைவி வளர்மதி மற்றும் முதல் மனைவியின் மகள் சந்தியா ஆகியோரு டன் வசித்து வந்தார்.

    பவானி லட்சுமி நகர் கோண வாய்க்கால் பகுதி யில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் நடராஜ் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் துணி துவைத்து குளித்து வருவது வழக்கம்.

    இந்த நிைலயில் சம்ப வத்தன்று அவர்கள் 2 பேரும் வழக்கம் போல் கோண வாய்க்கால் பகுதி யில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் துணி துவை த்து கொண்டு இருந்த னர். இதை தொடர்ந்து நடராஜ் படிக்கட்டில் நின்று கொண்டு குளித்து கொண்டிருந்தார்.

    அப்போது நிலைதடுமாறி நடராஜ் தவறி வாய்க்காலில் விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு நடராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து பவானி அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோத னைக்காக நடராஜன் உடல் கொண்டு செல்லப்பட்டது.

    சித்தோடு போலீசார் வழ க்கு பதிவு செய்து விசா ர ணை மேற்கொண்டு வருகி றார்கள்.

    • பார்த்திபன் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உள்ளார்.
    • தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட நேரம் கழித்து இரவு பிணமாக மீட்டனர்.

    ஆப்பக்கூடல்:

    அந்தியூர் அருகே உள்ள ஆலாம்பாளையம் கெட்டி சமுத்திரம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ்-ருக்குமணி தம்பதியினர். இவர்களது மகன் பார்த்திபன் (18). கட்டிட தொழிலாளி.

    இந்நிலையில் பார்த்தி பன் தனது நண்பர்களான லட்சுமணன், மணிகண்டன் 2 பேருடன் சேர்ந்து கொண்டு ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி காவிரி ஆற்று பாலம் அருகே குளிக்க சென்று உள்ளனர்.

    அப்போது பார்த்திபன் மட்டும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உள்ளார். உடன் சென்ற நண்பர்கள் காப்பாற்ற முடியாததால் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

    பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்த பார்த்து அந்தியூர் தீயணைப்புத் துறை மற்றும் ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.பார்த்திபனை ஆற்றில் தேடிய தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட நேரம் கழித்து இரவு பிணமாக மீட்டனர்.

    பிணமாக மீட்ட பார்த்தி பன் உடலை அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு அனு ப்பி வைத்த போலீசார் வழ க்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகி ன்றனர். இன்று பார்த்திபன் உடல் அந்தியூர் அரசு மரு த்துவமனையில் பிரேத பரிசோதனை நடக்க இருக்கி றது. இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியு ள்ளது.

    • மாவட்டத்தில் ஈரோடு நகரிலும், பவானியிலும் கனமழை பெய்தது.
    • ஈரோடு ரெயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் மழை நீர் குளம்போல தேங்கியது.

    ஈரோடு:

    கோடைக்காலம் முடி வடைந்து தென்மேற்குப் பரு வமழைக்காலம் தொடங்கிய பின்னரும், போதிய மழை யின்றி வறண்ட வானிலையே நிலவி வந்தது. இதனால் கோ டைக்காலத்தை போலவே 100 டிகிரிக்கு மேலாகவே வெயில் வாட்டி வந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாவ ட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களாக வெயிலின் தாக்கம் மிக அதிக அளவில் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் திடீ ரென வானம் இருண்டு, கரு மேகங்கள் சூழ்ந்தது. சில நிமி டங்களில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. லேசான காற்றுடன் பெய்த இந்த கனமழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

    இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக நீடித்து வ ந்த வெப்பம் குறைந்து குளி ர்ச்சியான கால நிலை ஏற்ப ட்டது. மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளிலு ம் தண்ணீர் தேங்கி நின்றது.

    ஈரோடு நேதாஜி மார்கெட், ரெயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டர் ஆகிய இடங்களில் தண்ணீர் புகுந்து குளம்போல தேங்கி நின்றது.

    மார்கெட்டில் தேங்கிய தண்ணீரை மாநகராட்சி ஊ ழியர்கள் கழிவு நீர் அகற்றும் வாகனங்களின் உதவியுடன் இன்று காலை யில் அகற்றும் பணியி ல் ஈடுபட்டனர்.

    ஈரோடு ரெயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் மழை நீர் குளம்போல தேங்கியது. இதனால் பயணிகள் மற்றும் ஊழியர்கள் கடும் அவதிக்கு ள்ளாகினர்.

    நேற்று மாவட்டத்தில் ஈரோடு நகரிலும், பவானியிலும் கனமழை பெய்தது. இதில் அதிகபட்சமாக ஈரோ டு நகரில் 35 மி.மீ. மழை பதிவாகியது. பவானியில் 1.80 மி.மீ. பதிவாகி இருந்தது.

    இதேபோல் மொடக்கு றிச்சி சுற்று வட்டார பகுதிக ளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

    • ஆறுமுகம் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.
    • சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி சன்னியாசிபட்டி பகுதி மேட்டுப்பாளைய த்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவரது மனைவி இறந்து விட்டார்.

    இதனால் ஆறுமுகம் மனைவி இறந்த துக்கத்தில் நீண்ட நாட்களாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று மன உளைச்சலில் இருந்த ஆறுமுகம் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். இதை யடுத்து உறவினர்கள் ஆறுமுகத்தை ஒரு தனியார் மரு த்துவமனைக்கு சிகிச்சை க்காக அழைத்துச் சென்ற னர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு முகம் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    பின்னர் இதுகுறித்து ஆறுமுகத்தின் மகன் வினோத் பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • விவசாயிகள் 2 ஆயிரத்து 84 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2 ஆயிரத்து 84 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 20 ரூபாய் 15 காசுக்கும்,

    அதிகபட்ச விலையாக 23 ரூபாய் 77 காசுக்கும், சராசரி விலையாக 22 ரூபாய் 77 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 969 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 22 ஆயிரத்து 28 ரூபாய்க்கு விற்பனை யானது.

    இதேபோல் கொப்பரை தேங்காய்கள் 5 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கிலோ ஒன் றுக்கு குறைந்தபட்ச விலையாக 65 ரூபாய் 96 காசுக்கும்,

    அதிகபட்ச விலையாக 80 ரூபாய் 50 காசுக்கும், சராசரி விலையாக 69 ரூபாய் 36 காசுக்கும் ஏலம் போனது. மொத்தமாக 87 கிலோ எடையுள்ள கொப்பரை தே ங்காய்கள் ரூ.6 ஆயிரத்து 83-க்கு விற்பனையானது.

    தேங்காய், கொப்பரை தேங்காய்கள் 2-ம் சேர்த்து மொத்தம் ரூ.28 ஆயிரத்து 111-க்கு விற்பனை நடை பெற்றது என விற்பனை கூடத்தின் கண்காணிப்பா ளர் தெரிவித்தார்.

    • குஞ்சம்மாள் ரத்த காயத்துடன் அலறி துடித்து கொண்டு இருந்தார்.
    • மர்ம நபர் ஒருவர் தாக்கி நகைகள் திருடு சென்றது தெரியவந்தது.

    பவானி:

    பவானி அருகே உள்ள காளிங்க ராயன்பாளையம் அடுத்த மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி உமா சாந்தி. ராஜாவின் தாய் குஞ்சம்மாள் (65).

    அவர்கள் அனைவரும் அந்த பகுதியில் ஒன்றாக வசித்து வருகி றார்கள். உமா சாந்தி கவுந்தப்பாடி புதூர் பகுதி யில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரி யராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் உமா சாந்தியை அழைத்து வருவ தற்காக ராஜா கவுந்தப்பாடி புதூருக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது தாய் கஞ்ச ம்மாள் மட்டும் தனி யாக இரு ந்தார். இதையடுத்து ராஜா பள்ளியில் இருந்து மனைவி யை வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது குஞ்சம்மா ள் வீட்டின் படுக்கை அறையி ல் ரத்த காயத்துடன் அலறி துடித்து கொண்டு இருந்தார்.

    இதை கண்டு அதிர்ர்ச்சி அடைந்த அவர்கள் மூதா ட்டி யிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவரை மர்ம நபர் ஒருவர் தாக்கி அவர் கழுத்தில் அணி ந்திருந்த 2 பவுன் தங்கச் செயின் மற்றும் கையில் அணிந்திரு ந்த 3 பவுன் வலையல் என 5 பவுன் நகைகள் திருடு சென்றது தெரியவந்தது.

    இதில் படுகாயம் அடைந்த குஞ்சம்மாளை அக்கம் பக்க த்தினர் உதவி யுடன் மீட்டு பவானி அரசு மருத்துவம னைக்கு அனு ப்பி வைத்துள்ளனர்.

    அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகி ச்சை க்காக ஈரோடு அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்ப ட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து ராஜா சித்தோ டு போலீசில் புகார் கொடு த்தார். அதன் பேரில் சித்தோ டு போலீசார் மற்று ம் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி ஆகியோர் சம்பவ இடம் வந்து அந்த மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்ட னர்.

    இதில் மூதாட்டி தனியாக வீட்டில் இருந்ததை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் அவரை தாக்கி நகைகள் கொள்ளை யடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டு மர்ம நப ர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சித்தோடு போலீ சார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • படுக்கையறை மின்விசிறியில் சவுபர்ணிகா தூக்கில் தொங்கியுள்ளார்.
    • சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை மேற்கு ராஜ வீதியை சேர்ந்தவர் மனோகரன் (59). இவரது மனைவி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகள் நெல்லையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூ ரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இளைய மகள் சவுபர்ணிகா (18) கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது விடுமுறை என்பதால் வீட்டுக்கு வந்திருந்தார்.

    இந்நிலையில் சவுபர்ணிகாவுக்கு பொறியியல் படிக்க சிரமமாக இருப்பதாகவும், அதனால் கலை கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பு வதாகவும் கூறியுள்ளார்.

    அதற்கு தந்தை மனோகரனும் சம்மதித்ததாக தெரிகிறது.இந்த நிலையில் விடுமுறை முடிந்து கல்லூரி செல்வதற்காக பை வாங்கி வருவதற்காக மனோகரன் காலையில் ஈரோடு சென்று விட்டார். அவரது மனைவியும் பள்ளிக்கு சென்று விட்டார்.

    ஈரோடு சென்ற மனோகரன் மீ ண்டும் மதியம் 1.30 மணியளவில் வீட்டுக்கு வந்தபோது கதவு உள்பக்க மாக தாழிடப்பட்டிருந்துள்ளது. மகளை சத்தமிட்டு கூப்பிட்டும் வெகு நேரமாக கதவு திறக்கவில்லை.

    இதையத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறை மின்விசிறியில் சவுபர்ணிகா தூக்கில் தொங்கியுள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலே யே சவுபர்ணிகா இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×