என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடமாநில வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
- சம்ரேஷ் மண்டல் லூங்கியால் தூக்குமாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
- வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
மேற்கு வங்க மாநிலம், பர்கானா மேற்கு மாவட்டம், தெற்கு பல்பூர் பகுதியை சேர்ந்தவர் ரிச்யுமண்டல் (46). இவரது மகன் சம்ரேஷ் மண்டல் (19). இருவரும் கடந்த ஒரு மாதமாக ஈரோடு திண்டல் மாருதி நகரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் சம்ரேஷ் மண்டல் சரி வர வேலைக்கு செல்லாமல் எப்போதும் போன் பேசிக்கொண்டே இருந்துள்ளார். மேலும் தந்தை ரிச்யுமண்டலிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார்.
ஆனால் ரிச்யுமண்டல் செலவுக்கு பணம் கொடுக்காமல் வேலைக்கு சென்றுவிட்டார்.
பின்னர் மீண்டும் அவர் மதியம் சாப்பிட வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது. ஆனால் கதவை தட்டி பார்த்தும் திறக்காததால் அதை உடைத்து பார்த்த போது வீட்டினுள் உள்ள இரும்பு கொக்கியில் சம்ரேஷ் மண்டல் லூங்கியால் தூக்குமாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சம்ரேஷ் மண்டலை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து ரிச்யுமண்டல் அளித்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






