மேற்கு வங்க தொழிலாளியின் மனைவி மாயம்

மனைவி சஜிதா கமரூவை காணவில்லை.அறச்சலூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து மாயமான சஜிதா கமரூவை தேடி வருகின்றனர்.
மேற்கு வங்க தொழிலாளியின் மனைவி மாயம்
Published on

ஈரோடு:

மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டம், கிருஷ்ண சந்திரபூர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் ஷதேஹா கமரூ (30). இவரது மனைவி சஜிதா கமரூ (28). இவர்களுக்கு 11 வயதில் மகனும், 6 வயதில் மகனும் உள்ளனர். மகன் சொந்த ஊரில் ஷதேஹா கமரூவின் பெற்றோரின் பராமரிப்பில் உள்ளான்.

ஷதேஹா கமரூ தனது மனைவி, மகளுடன், ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்துள்ள வடபழனி பகுதியில் உள்ள ஒரு தே ங்காய் நார் மில்லில் குடும்ப த்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவ த்தன்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கியுள்ளனர்.

மறுநாள் அதிகாலை ஷதேஹா கமரூ கண் விழித்து பார்த்தபோது, அவரது மனைவி சஜிதா கமரூவை காணவில்லை. உடனடியாக தன்னுடன் வேலை செய்யும் நபர்களு டன் சேர்ந்து அக்கம்பக்கம் தேடி பார்த்தும் சஜிதா கமரூவை கிடைக்கவில்லை.

ஒருவேளை அவர் தங்களது சொந்த ஊருக்கு சென்றிரு க்கலாம் என நினைத்து அங்கும் விசாரித்த போது சஜிதா கமரூ அங்கும் செல்ல வில்லை என்பது தெரியவ ந்தது.

இதையடுத்து ஷதேஹா கமரூ அளித்த புகாரின் பேரில் அறச்சலூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து மாயமான சஜிதா கமரூவை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com