என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய தார் சாலை அமைக்கும் பணி"

    • ஈரோட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் தொடக்க விழா நடந்தது.
    • அமைச்சர் முத்துசாமி புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி பகுதி யில் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளி க்கிறது. புதிய தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக் கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சாலை சீரமைப் புக்கு முதல் கட்டமாக ரூ.132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது.

    இந்தநிலையில் ஈரோட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் தொடக்க விழா நேற்று நடந் தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர்ராஜகோபால்சுன் கரா தலைமை தாங்கினார்.

    மாநகராட்சி மேயர் நாகரத்தி னம், ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தமிழ்நாடு வீட் டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச் சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் சூரம்பட்டி கோவலன் வீதி, என்.எஸ்.கே.நகர், சக்தி நகர், காரப்பாறை, கருவேப்பிலை வலசுரோடு, மாணிக்கம் பாளையம் அடுக்குமாடி பகுதி, மண்டல அலுவலகம், சொட்டையம்பாளையம், ராம்பாலக்காடு வீதி உள் ளிட்ட இடங்களில் ரூ.16 கோடியே 22 லட்சம் செல வில் தார் சாலை அமைக் கப்படுகிறது.

    இதேபோல் கங்காபு ரத்தில் ரூ.10 லட்சம் செல வில் அமைக்கப்பட்ட புதிய குடி நீர்தொட்டியையும், தண்ணீர் பந்தல்பாளையம் அரசு பள்ளிக்கூடத்தில் ரூ.35 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடங் களையும் அமைச்சர் முத்து சாமி திறந்து வைத்தார்.

    இந்த விழாவில் மாநக ராட்சி துணை மேயர் செல்வ ராஜ், துணை ஆணையாளர் சுதா, செயற்பொறியாளர் விஜயகுமார், துணை பொறி யாளர் சண்முகவடிவு, மண் டல தலைவர்கள் பி.கே.பழனி சாமி, சுப்பிர மணியம், சசிகுமார், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிர மணியம், மாவட்ட துணைச் செயலாளர் செந்தில் குமார், பகுதி செயலாளர் அக்னி சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×