என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women's empty seats"

    • சீரான குடிநீர் வழங்க கோரி பெண்கள் காலிகுடங்களுடன் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    அந்தியூர்:

    அந்தியூர் அத்தாணி ரோட்டில் பாலம் விரிவா க்கம் பணி நடந்து வருகிறது. இதையொட்டி குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

    இதனால் கடந்த 5 நாட்களாக அந்தியூர் பகுதியில் குடிநீர் தட்டு ப்பாடு நிலவி வருகிறது. இதனால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அந்தியூர் 3-வது வார்டு பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கவுன்சிலர் கீதா சேகர் தலைமையில் அந்தியூர், பர்கூர் ரோடு அரசு மருத்துவமனை கார்னர் பகுதியில் ஒன்று திரண்டனர்.

    இதையடுத்து சீரான குடிநீர் வழங்க கோரி பெண்கள் காலிகுடங்களுடன் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அந்த பகுதி பெண்கள் கூறும் போது, அந்தியூர் பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக குடிநீர் வருவதில்லை. இதனால் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம்.

    லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த குடிநீர் கலங்கலாக குடிக்க முடியாத நிலையில் உள்ளது. எனவே குழாய்கள் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி, பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணை தலைவர் பழனிசாமி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்து க்கு வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் லாரிகள் மூலம் நல்ல குடிநீர் சீரான முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குழய் அமைக்கும் பணி விரைந்து முடித்து வழக்கம் போல் குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பு ஏற்பட்டது.

    ×