என் மலர்
ஈரோடு
- எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.72 லட்சத்து தேங்காய் விற்பனை நடைபெற்றது
- லோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 90 காசுக்கு விற்பனையானது
எழுமாத்தூர்,
எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 29 ஆயிரத்து 245 எண்ணிக்கையிலான 12 ஆயிரத்து 158 கிலோ எடைகொண்ட தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 90 காசுகள், அதிகபட்ச விலையாக 23.39 காசுகள், சராசரி விலையாக 22.55 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 888-க்கு விற்பனையானது.
- கார்மெண்ட்ஸ் கம்பெனியில் பணம் திருடிய வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்
- போலீசார் அவர் வைத்திருந்த பணம் ரூ.3 ஆயிரத்து 850 ரூபாய் மற்றும் செல்போனை பறிமுதல் பறிமுதல் செய்தனர்.
புளியம்பட்டி,
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பஸ் நிலையம் பின்புறம் முத்துச்சாமி என்பவர் கார்மெண்ட்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் கடந்த சில தினங்க ளுக்கு முன்பு கேரள மாநிலம் சுற்றுலா சென்றபோது இவரது கம்பெனியின் பின் பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.80 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து திருடனை தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசார் சத்தியமங்கலம் வடக்கு ப்பேட்டையில் சுற்றித்திரிந்து நபரை பிடித்து விசாரித்த போது அவர் கர்நாடகா மாநிலம் நஞ்சன்கோடு சிந்தகள்ளி சேர்ந்த ரங்கசாமி (வயது 27) என்பதும், புளிய ம்பட்டி பனியன் கம்பெனியில் பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரங்கசாமியை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த பணம் ரூ.3 ஆயிரத்து 850 ரூபாய் மற்றும் செல்போனை பறிமுதல் பறிமுதல் செய்தனர். பின்னர் ரங்கசாமியை நீதிம ன்ற காவலுக்கு அனுப்பி வைத்து சிறையில் அடைத்தனர்.
- வழக்கில் தலைமறைவாக இருக்கும் புகழேந்தி, மோதிலால் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
- தொழிலாளர்களை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் வால்மிகி. இவர் தனது நண்பர்களான ஜிதேந்திர குமார், வினய்குமார், பவன்குமார், அசோக்குமார், சித்தார்ய குமார், ஆகியோருடன் கடந்த மாதம் 14-ம் தேதி பீகாரில் இருந்து வேலை தேடி கேரளாவிற்கு ரெயிலில் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது பீகாரை சேர்ந்த பிபீன் குமார் என்பவர் தனது நண்பர் மூலமாக வால்மியை தொடர்பு கொண்டு தான் வேலை வாங்கித் தருவதாகக் கூறியும் தன்னுடன் இருக்கும் நண்பர்களை அழைத்துக் கொண்டு ஈரோட்டிற்கு வரும் படியும் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
ஏற்கனவே ஈரோடு ரெயில் நிலையத்தில் பிபீன் குமார் தனது நண்பர்களுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள் வந்தவுடன் அவர்களை ஈரோடு பெரிய சேமூர் பகுதியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கொடுக்க வேண்டும் என்றும் கொடுத்தால் தான் தங்களை விடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.
மேலும் ஆன்லைன் மூலமாக பணம் அனுப்ப வேண்டும் என்றும் மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பீகாரில் உள்ள தங்களது உறவினர்களை தொடர்பு கொண்டு ரூ.1.10 லட்சம் ஜி.பே. மூலமாக அனுப்பி வைத்து உள்ளனர்.
பணம் வந்த உடனே பிபீன் குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தி வைத்திருந்த 6 பேரையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து டெம்போ டிராவலர் மூலமாக அவர்களை கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் விட்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து வால்மீகி உட்பட 6 பேரும் சென்னையில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று அங்கிருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். தொடர்ந்து இது குறித்து சென்னை போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து சென்னை போலீசார் புகார் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு அந்த புகார் நகலை அனுப்பி வைத்தனர்.
அதன் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் பெரிய சேமூர் பகுதியில் இருந்த பீகாரை சேர்ந்த பிபீன் குமார் மற்றும் அவனுக்கு உதவியாக இருந்த ஈரோட்டை சேர்ந்த தமிழ் செல்வன், சுபாஷ், பிரகாஷ், சசிகுமார், பூபாலன், கண்ணன் ஆகிய 7 பேரை 8 பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் புகழேந்தி, மோதிலால் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். குடும்பத்தை காப்பாற்றி அனைத்து உறவுகளையும் விட்டுவிட்டு குறைந்த ஊதியத்திற்காக மாநிலம் விட்டு மாநிலம் வரும் வடமாநில தொழிலாளர்களை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- காரின் அடியில் இருந்து தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
- உடனடியாக கவின் காரை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டார்.
சென்னிமலை:
சென்னிமலை டவுன் மணிமலை, காளிக்கோ ப்டெக்ஸ் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் கவின் (23). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் தனது நண்பரின் காருக்கு கியாஸ் பிடிப்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னி மலையில் உள்ள கியாஸ் பங்குக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அரச்சலூர் ரோடு அம்மாபாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகில் சென்று கொண்டிருந்த போது காரின் அடியில் இருந்து தீ பிடித்து எரிந்து கொண்டி ருந்தது.
இதனை அந்த வழியே ரோட்டில் சென்று கொண்டி ருந்தவர்கள் பார்த்து காரில் தீ எரிவதை கவினிடம் சத்தம் போட்டு தெரிவித்தனர்.
பின்னர் உடனடியாக கவின் காரை ரோட்டோ ரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டார்.
அப்போது தீ மள, மள பரவியது. இதனால் உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது.
காரில் தீ எரிவதை ரோட்டில் சென்றவர்கள் பார்த்து சொன்னதால் கல்லூரி மாணவர் கவின் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மன உளைச்சல் அடைந்த குணசேகரன் என்ற பேச்சியப்பன் தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தங்க மேடு தம்பி கலை அய்யன் கோவில் பகுதியைச் சேர்ந்த வர் குணசேகரன் என்ற பேச்சியப்பன் (வயது 55). இவர் கட்டிட வேலை செய்து வந்தார்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் ஜாமினில் வெளியே வந்த குணசேகரன் என்ற பேச்சியப்பன் அம்மாபேட்டை போலீஸ் நிலை யத்தில் தினமும் கையொப்பமிட்டு வந்தார்.
இந்நிலையில் சம்பவ த்தன்று சிறைக்கு சென்றதை நினைத்து மன உளைச்சல் அடைந்த குணசேகரன் என்ற பேச்சியப்பன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் இதுகுறித்து அவ ரது மனைவி பழனிய ம்மாள் காஞ்சி கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பட்டத்தரசி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- இதல் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து குட்டகம் கிரா மத்தில் பல நூறு ஆண்டு களாக எழுந்தருளி அருளா ட்சி செய்து வரும் அத்தனூர் அம்மன், மாரியம்மன் மற்றும் பட்டத்தரசி அம்மன் கோவில்கள் உள்ளது.
இதில் பட்டத்தரசி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடை பெற்றது. மேலும் அத்தனூர் அம்மன், மாரியம்மன் கோவிலுக்கு முதலாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இதில் பட்டத்தரசி அம்மனுக்கு கடந்த 30-ந் தேதி விநாயகர் அணுக்கை பூஜையுடன் தொடங்கி அம்மன் ஊர்வ லம் நடை பெற்றது. அதனை தொடர்ந்து மாலை மங்கல இசை முழங்க விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாக பூஜை நடைபெற்றது.
மேலும் இரவு இரண்டாம் கால பூஜையும் நேற்று சிவாச்சாரியார் காயத்ரி மந்திரங்கள் முழங்க கோவில் பட்டத்தரசி அம்ம னுக்கு புனித நீரூற்றி சிறப்பு பூஜை செய்து கும்பா பிஷேகம் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் மீது புனித நீர் தீர்த்தம் தெளிக்க ப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்பு பட்டத்தரசி அம்மனுக்கு பால், இளநீர் திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். பின்பு பட்டத்தரசி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து அத்தனூர் அம்மன், மாரியம்மன் ஆகிய தெய்வ ங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
இதல் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
- கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் ரூ.1.37 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.
பெருந்துறை:
பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
பெருந்து றை சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3,750 மூட்டைகளில் 1,81,000 கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் தரக் கொப்பரை குறைந்த பட்சமாக கிலோ, ரூ.73.89-க்கும், அதிகபட்சமாக ரூ.80.89-க்கும் விற்பனையாயின.
இரண்டாம் தரக் கொப்பரை குறைந்த பட்சமாக ரூ.31-க்கும், அதிகபட்ச மாக ரூ.78.99-க்கும் விற்பனையாயின.
மொத்தம் ரூ.1.37 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.
- லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சுந்தரபாண்டியன் என்பவரை போலீசார் பிடித்தனர்.
- அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சேலம் மாவட்டம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த ரங்கநாதன் மகன் சுந்தரபாண்டியன் (வயது 43) என்பவரை போலீசார் பிடித்தனர்.
பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.2 ஆயிரத்து 30 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாரி ஒன்று துரைசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
- இதில் துரைசாமிக்கு தலையில் பலத்த அடிபட்டது.
கொடுமுடி:
கொடுமுடி அருகே சோளக்காளிபாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (65). விவசாயி. இவர் சம்பவத்த ன்று மாலைய வருந்தியாபா ளையம் அருகே நொய்யல் செல்லும் சாலையில் தனது மொபெட்டில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று துரைசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் துரைசாமிக்கு தலையில் பலத்த அடிபட்டது.
இதனால் உயிருக்கு போராடிக்கொ ண்டிருந்த துரைசாமியை அருகில் இருந்தவர் மீட்டு அவரை தனியார் ஆம்புல ன்ஸ் மூலம் கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற துரைசாமி பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் துரைசாமி யின் உடல்நிலை மோசமான தையடுத்து அங்கிருந்து சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக துரைசாமி அனுப்பி வைக்கப் பட்டுள்ளார்.
தற்போது சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் துரைசாமி சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
- அணையின் நீர்மட்டம் 74.58 அடியாக சரிந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.58 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வினாடி 1,512 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- 18 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என சிவகிரி, வரப்பாளையம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது கொமரபாளையம் மற்றும் கோவில் காடு பகுதிகளில் அரசு அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த நம்பியூர் கொமரபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் திருநாவுக்கரசு (வயது 31), தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் நாகராஜன் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 18 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கார்த்திக் ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்.
- மருத்துவர்கள் கார்த்திக் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அவ ல்பூந்துறை காத்துப்பா ளையம் பகுதியைச் சேர்ந்த வர் சங்கர் (வயது 42). இவரது மகன் கார்த்தி (20). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று கார்த்தி அவரது நண்பர்களுடன் கொடிவேரி அணைக்கு குளிக்கச் சென்றுள்ளார். அணையில் நீர் அதிகமாக சென்று கொண்டிருந்தது.
நண்பர்கள் அனைவரும் குளித்து கொண்டிருக்கும் போது கார்த்திக் ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். உடன் அவரது நண்பர்கள் சத்தம் போட்டனர்.
அலரல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் நீரில் மூழ்கிய கார்த்திக்கை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சக்தி அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கார்த்தி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இதுகுறித்து அவ ரது தந்தை சங்கர் பங்களா புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.






