லாட்டரி சீட்டு விற்றவர் மீது வழக்கு

லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சுந்தரபாண்டியன் என்பவரை போலீசார் பிடித்தனர்.அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாட்டரி சீட்டு விற்றவர் மீது வழக்கு
Published on

ஈரோடு:

ஈரோடு பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சேலம் மாவட்டம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த ரங்கநாதன் மகன் சுந்தரபாண்டியன் (வயது 43) என்பவரை போலீசார் பிடித்தனர்.

பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.2 ஆயிரத்து 30 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com