என் மலர்
ஈரோடு
- காவிரி ரெயில் பாலத்தில் ஆணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு அடுத்த காவிரி ரெயில் பாலத்தில் சம்பவத்தன்று 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி இறந்தது தெரிய வந்தது.
இறந்தவர் வலது கையில் இந்தியில் டேட்டோ குத்தப்பட்டுள்ளது. எனவே அவர் வட மாநில வாலிபராக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகேஷ்வரன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
- ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு காசியண்ணன் வீதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (60). ஜெனரேட்டர் மெக்கானிக். இவரது மகன் மகேஷ்வரன் (28). பி.இ. படித்துள்ளார்.
இவரது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் வீட்டிலேயே ஆன்லைன் மூலமாக 3 டி அனிமேஷன் வேலை செய்து அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.
மேலும் தன்னுடன் படித்த நண்பர்கள் எல்லாம் நல்ல வேலை திருமணம் என செட்டி லாகி விட தனக்கு 28 வயதாகியும் இன்னும் திருமணமாகாமல், படிப்புக்கேற்ற வேலை இல்லாமல் இருக்கிறோமோ என புல ம்பி வந்துள்ளார்.
இதனால் வீட்டில் இருப்பவர்களிடமும் சரிவர பேசாமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டி ல் யாரும் இல்லாத நேரத்தில் மகேஷ்வரன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று ள்ளார்.
மதியம் வீடு திரும்பிய மகேஷ்வரனின் தாயார் மகன் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே மகேஸ்வரன் இறந்து விட்டதாக கூறினார்.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- போதை பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த மகேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என பவானி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பவானி சுற்றுவட்டார பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த பவானி கேசரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் மகேந்திரன் (வயது 53) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
- கிருத்திகா வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை தின்று விட்டார்.
- சிகிச்சை பெற்று வந்த கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா கரியானூர், காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்த சந்திரமதி என்பவரின் மகள் கிருத்திகா (20). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன் ஈரோடு மாணிக்கம்பாளை யம் பகுதியை சேர்ந்த ரவி என்பவரை காதலித்து திரும ணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தையுள்ளது.
கடந்த சில நாள்களாக கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு கார ணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவ்வப்போது பெற்றோர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
இந்தநிலையில் சம்பவ த்தன்று கணவன், மனைவி க்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் கிருத்திகா வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை (விஷம்) தின்று விட்டார். உடனடியாக அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.
பின்னர் உயர் சிகிச்சை க்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் திரும ணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்ப ட்டுள்ளது.
- பருவாச்சி கிராமத்தில் கிராம வேளாண் விவசாயிகள் பயிற்சியானது நடைபெற்றது.
- கால்நடை த்துறை அலுவலர்கள் அவர்களது துறை மானியத்திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.
ஈரோடு:
பவானி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் மூலம் 2023-24-ம் ஆண்டு கலை ஞர் திட்டம் செயல் படுத்த தேர்வு செய்யப்பட்ட பருவாச்சி கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்றக்குழு அமைக்கப்பட்டு அக்குழு உறுப்பினர்களுக்கு காரீப்பின் பருவ விவசாயிகள் பயிற்சியானது நடைபெற்றது.
இப்பயிற்சியில் பவானி வேளாண்மை உதவி இய க்குநர் கனிமொழி தலைமை தாங்கி சிறப்புரை யாற்றினார். கோபி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சீனிவாசன் மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் எள் பயிர்களுக்கான உழவு, ரகத்தேர்வு, மண்பரிசோதனை மற்றும் உரமிடுதல் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.
அங்கக விதை சான்று துறை மற்றும் விதை சான்று அலுவலர் தமிழரசு நிலக்க டலை, எள் மற்றும் மக்கா ச்சோளம் போன்ற பயிரில் விதை தேர்வு முறை, விதை ப்பண்ணை அமைத்தல், பூச்சி மற்றும் நோய் தாக்கு தல், மதிப்புக்கூட்டுத்தல் குறித்து ஆலோசணை கூறினார்.
பவானி உதவி வேளா ண்மை அலுவலர் சித்தையன் கிராம வேளாண் முன்னேற்ற க்குழு அமைத்ததன் நோக்கம், அதன் பணி, அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தார். கால்நடை த்துறை அலுவலர்கள் அவர்களது துறை மானியத்திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் கங்கா உழவன் செயலி பதிவேற்றம், இ-நாம் மற்றும் இ-வாடகை குறித்து விவசாயிகளிடம் கூறினார். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மணிகண்டன், பூங்கோதை ஆகியோர் நன்றி கூறினர்.
- போலீசார் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
- 3 சாக்கு மூட்டைகளில் 100 கிலோ அரிசி இருந்தது தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாள வாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் பொது மக்களிடம் குறைந்த விலை க்கு ரேஷன் அரிசியை வாங்கி கடத்தி சென்று அருகாமையில் உள்ள கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்கதை ஆகி வருகிறது.
இதனைதடுக்க தாளவாடி வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு தாளவாடி வருவாய் துறை அதிகாரிகள் தமிழக-கர்நாடகா எல்லையில் உள்ள ராமாபுரம் என்ற இடத்தில் வாகன சோதனை யில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர். அப்போது அந்த வழியே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.
போலீசார் அந்த மோட்டார் சைக்கிள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளில் 100 கிலோ அரிசி இருந்தது தெரியவந்தது. இந்த அரிசியை கர்நாடகாவுக்கு கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர் தாளவாடி பகுதியை சேர்ந்த பாஷா பாய் (55) என தெரிய வந்தது. பின்னர் போலீசார் பாட்சா பாயை பிடித்து ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிம் ஒப்படைத்தனர்.
- தூக்கு மாட்டிய நிலையில் அண்ணாதுரை தொங்கி தொங்கிக்கொண்டு இருந்தார்.
- வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு முனிசிபல் காலனி வள்ளலார் வீதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (62). இவரது மனைவி பெரிய நாயகி (57). இவர்களது மகன் சென்னை யில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகள் அருகிலேயே வசித்து வருகிறார்.
பெரியநாயகி தனது மகனை பார்ப்பதற்காக கடந்த மாதம் 30-ந் தேதி சென்னை சென்றுவிட்டார்.வீட்டில் இருக்கும் அண்ணா துரைக்கு அருகில் வசிக்கும் அவரது மகள் சாப்பாடு கொடுத்து வந்துள்ளார்.
அண்ணாதுரை ஏலச்சீ ட்டு நடத்தி வந்ததாகவும், அவருக்கு சூதாடும் பழ க்கமும், மது அருந்தும் பழ க்கமும் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் பண ப்பிரச்னையில் இருந்ததா கவும் தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று அண்ணாதுரைக்கு சாப்பாடு கொடுக்க அவரது மகள் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்காததால் தனது கணவரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது தூக்கு மாட்டிய நிலையில் அண்ணாதுரை தொங்கி தொங்கிக்கொண்டு இருந்தார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அண்ணா துரை இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- காசிபாளையத்தில் வசித்து வரும் ஒருவர் கொடுமுடிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சந்திராவை கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கொடுமுடி:
கொடுமுடி ஏமகண்டனூரை சேர்ந்தவர் சந்திரா (56). இவர் கொடுமுடியை அடுத்துள்ள காசிபாளையம் ஆரம்ப பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். தினந்தோறும் தான் பணிபுரிந்து வரும் பள்ளிக்கு பஸ்சில் சென்று விட்டு வீடு திரும்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல பள்ளிக்கு சென்ற சந்திரா பள்ளி முடிந்த பின்னர் தனது வீட்டிற்கு திரும்பி வருவதற்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வழக்கமாக வரும் பஸ்கள் காரணாம்பாளையம் என்ற இடத்தில் நடந்து வரும் பாலம் வேலை காரணமாக பல ஊர்களை சுற்றிக்கொண்டு வருவதை அறிந்துள்ளார்.
அப்போது காசிபாளையத்தில் வசித்து வரும் ஒருவர் கொடுமுடிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த சந்திராவை கொடுமுடியில் இறக்கி விடுவதாக கூறி அழைத்து சென்றார்.
கொடுமுடி அருகே எல்லையூரை அடைந்தபோது சந்திராவின் சேலை மோட்டார் சைக்கிளில் பின்புற சக்கரத்தில் சிக்கியதால் வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் சந்திரா ரோட்டில் தலைகுப்புற விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சந்திராவை கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கரூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்திரா சிகிச்சை பயனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரவு நேற்று இரவு ஆடுகளுக்கு வழக்கம் போல் உணவுகளை வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார்.
- ஒரு ஆட்டின் உடல் பாகங்கள் அனைத்தையும் மர்ம விலங்கு கடித்து சென்றுள்ளது.
ஈரோடு:
ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோடு அடுத்த வேலப்பன்கவுண்டன் வலசு அருகே உள்ள முருகன் நகரை சேர்ந்தவர் பிரபு. இவர் தனது தோட்டத்தில் 10 ஆடுகளை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு ஆடுகளுக்கு வழக்கம் போல் உணவுகளை வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார். இன்று காலை ஆடுகளுக்கு உணவு வைக்க வந்தபோது பட்டியில் உள்ள 8 ஆடுகள் மர்ம விலங்கு கடித்துக் கொடூரமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஒரு ஆட்டின் உடல் பாகங்கள் அனைத்தையும் மர்ம விலங்கு கடித்து சென்றுள்ளது. முருகன் நகர் பகுதி காடுகள் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் ஏராளமானோர் தங்களது தோட்டத்தில் ஆடு, மாடு கோழிகளை வளர்த்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லரசம்பட்டி அருகே உள்ள கருவில்பாறை வலசு பகுதியில் 19 கோழிகள், 4 ஆடுகளை அதே பகுதியில் சுற்றி தெரியும் 5 தெரு நாய்கள் கடித்து கொன்றது. அதேபோல் இந்த ஆடுகளையும் தெருநாய்கள் கடித்து கொன்று இருக்கலாம் என முதலில் சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால் இறந்த ஆடுகளின் உடல் பாகங்கள் முழுவதும் கடித்து குதறப்பட்டு உள்ளதால் வேறு ஏதாவது மர்ம விலங்குகள் கடித்து கொன்று இருக்கலாம் என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் ரூ.6 லட்சத்து 12 ஆயிரத்து 195-க்கு விற்பனையானது.
கொடிமுடி:
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 293 மூட்டைகளில் 8 ஆயிரத்து 466 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காயை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இது கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.65.19 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.87.30 காசுகள், சராசரி விலையாக ரூ.85.30 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.6 லட்சத்து 12 ஆயிரத்து 195-க்கு விற்பனையானது.
- பெண்கள் குடிதண்ணீர் கேட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- இச்சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பு. புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பவானிசாகர் சாலையில் நான்காம் வார்டு கவுன்சிலர் துளசி மணி தலைமையில் பெண்கள் குடிதண்ணீர் கேட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
தாகூர் வீதி 4-வது வார்டில் குடி தண்ணீர் கடந்த 6 நாட்களாக வருவ தில்லை. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடை ப்பதில்லை. அப்படியே ஆறு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வந்தா லும் முன்பு போல் வேகமாக வருவதில்லை. மிகவும் குறைவாகவே வருகிறது.
நேரமும் குறைவாக வருகிறது. மேலும் இந்த குடி தண்ணீர் பிரச்சனையைப் பற்றி நகராட்சி அலுவல கத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடி க்கையும் எடுக்கப்படவி ல்லை.
இதனால் நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். பின்னர் தகவல் அறிந்து வந்த இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் குடிநீர் குழா ய்களை ஒரு வாரத்திற்குள் சரி செய்து குடிதண்ணீர் சீராக வருவதற்கு நடவடி க்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலை ந்து சென்றனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- ஈங்கூர் ரெயில் நிலைய நடைமேடை மேம்பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும்.
- பயணிகள் ரெயில் கட்டணத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு சீசன் டிக்கெட் ரெயில் பயணிகள் சங்க த்தில் நிர்வாகிகள் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை-சேலம்-கோவை பயணிகள் ரெயிலை (வண்டி எண்கள் 66602, 66603) மீண்டும் இயக்க வேண்டும். பயணிகள் ரெயில் கட்டணத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஈங்கூர் ரெயில் நிலைய நடைமேடை மேம்பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும்.
ஈரோடு ரெயில்வே நிலைய பார்சல் அலுவலகம் அருகே தானியங்கி டிக்கெட் விற்பனை எந்திரம் அமைக்க வேண்டும். ஈரோடு ரெயில் நிலைய நடைமேடைகளில் அவசர மருத்துவ உதவிகள் உடனடியாக கிடைக்கப்பட வேண்டும். பயணிகள் ரெயிலில் கழிவறைகளை முறையாக சுத்தம் செய்து, தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
திருச்சி - பாலக்காடு (16843), கோவை - நாகர்கோவில் (16322) ஆகிய ரெயில்கள் இருகூர் ரெயில் நிலையத்திலும், பாலக்காடு-திருச்சி (16844), நாகர்கோவில் கோவை ரெயில் (16321) ஆகிய ரெயில்கள் இருகூர் மற்றும் சூலூர்ரோடு ஆகிய ரெயில் நிலையங்களிலும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
மெமோ பயணிகள் ரெயில்களில் குப்பை தொட்டிகளை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.






