ரெயில் மோதி வடமாநில வாலிபர் பலி

காவிரி ரெயில் பாலத்தில் ஆணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் மோதி வடமாநில வாலிபர் பலி
Published on

ஈரோடு:

ஈரோடு அடுத்த காவிரி ரெயில் பாலத்தில் சம்பவத்தன்று 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி இறந்தது தெரிய வந்தது.

இறந்தவர் வலது கையில் இந்தியில் டேட்டோ குத்தப்பட்டுள்ளது. எனவே அவர் வட மாநில வாலிபராக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com