search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drug dealer arrested"

    • போதை பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த மகேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என பவானி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பவானி சுற்றுவட்டார பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த பவானி கேசரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் மகேந்திரன் (வயது 53) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    • அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
    • பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆன 47 வயதுடைய மருந்து விற்பனை பிரதிநிதி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    கோவை,

    கோவை குனியமுத்துரைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு திருமணம் ஆகி 17 வயதில் ஒரு மகளும் 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் பேராசிரியையின் கணவர் வாகன விபத்தில் பலியானார். அப்போது பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆன 47 வயதுடைய மருந்து விற்பனை பிரதிநிதி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் 2 பேரும் கடந்த 2014 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மருந்து விற்பனை பிரதிநிதி 2 மனைவிகளுடன் வாழ்ந்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த பேராசிரியரின் 16 வயது மகளுக்கு மருந்து விற்பனை பிரதிநிதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது தாயிடம் கூறி கதறி அழுதார்.

    இதனை அடுத்து பேராசிரியை மேற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து 2-வது மனைவியின் 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருந்து விற்பனை பிரதிநிதியை கைது செய்தனர் .

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் கல்லூரி பேராசிரியை அனைத்து மகளிர் போலீசில் மேலும் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் மருந்து விற்பனை பிரதிநிதி வெவ்வேறு கால கட்டங்களில் தன்னிடம் ரூ.20 லட்சம் பெற்று மோசடி செய்து விட்டதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரிலும் போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடைகளில் சோதனை
    • சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்ப னையை தடுக்க இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப் இன்ஸ்பெ க்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

    ஆத்தூர் குப்பம் பகுதியில் நடத்திய சோதனையில் லிங்கன் என்பவரின் மகன் சரவணன் (வயது 44), சந்தோஷ்குமார் மனைவி ஷோபனா (32) ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 'ஹான்ஸ்' உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து சரவணன் மற்றும் ஷோபனாவை கைது செய்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் இருவரையும் போலீசார் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×