என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்ட எச்சரிக்கை மணி ஒலித்ததால் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார்.
    • ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன் சத்திரம் சத்தி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் வளாகத்திலேயே வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையமும் செயல்பட்டு வருகிறது.

    கடந்த 5-ந் தேதி அதிகாலை ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை உடைத்து, ஏ.டி.எம். எந்திரத்தின் மீது பெரிய கல்லினை போட்டு உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றார்.

    அப்போது ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்ட எச்சரிக்கை மணி ஒலித்ததால் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதையடுத்து ஏ.டி.எம். மையத்தில் எச்சரிக்கை ஒலி வருவதை கேட்ட அக்கம்பக்கத்தினர், ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று பார்த்தபோது, ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    இதன்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களும் கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்திற்கு வந்து அங்கு பதிவாகி இருந்த மர்ம நபரின் கைரேகைகளை சேகரித்தனர்.

    மேலும், ஏ.டி.எம். மையத்தின் எச்சரிக்கை மணி ஒலித்ததால், ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.10 லட்சம் தப்பியதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஏ.டி.எம். மையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தறிபட்டறை தொழிலாளியான ஈரோடு அசோகபுரம் ஐயங்காடு பகுதியை சேர்ந்த ராஜா மகன் ராகுல் (வயது 21) என்பது கண்டுபிடி க்கப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு ராகுலை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். கைதான ராகுல் மீது ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 026-க்கு விற்பனையானது.

    மொடக்குறிச்சி:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 13 ஆயிரத்து 229 எண்ணிக்கையிலான 5 ஆயிரத்து 935 கிலோ எடை கொண்ட தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.22.51 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.26.66 காசுகள், சராசரி விலையாக ரூ.25.40 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 026-க்கு விற்பனையானது.

    • வாழை இலை குளியல் மற்றும் மண் குளியல் சிகிச்சை தொடங்கப்பட்டு உள்ளது.
    • இந்த சிகிச்சைகள் மூலம் பயன்பெற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    பவானி:

    பவானி அந்தியூர் மெயின் ரோட்டில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

    இந்த மருத்துவமனைக்கு பவானி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தந்து பல்வேறு வகையான உடல்நல குறைவுகளுக்கு மருத்துவம் பார்த்து செல்கின்றனர்.

    அதேபோல் இந்த மருத்து வமனையில் நுழைவாயில் பகுதியில் அரசு சித்த மருத்துவ பிரிவு உள்ளது.

    டாக்டர்.கண்ணுசாமி மூலம் தினசரி இங்கு வரும் நோயா ளிகளுக்கு வெளிப்புற சிகிச்சையில் நீராவி குளியல், சிரசு எண்ணெய், புற வளையம், வர்மக்கலை, தொக்கணம் (மசாஜ்) போன்ற சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த சிகிச்சைகளை உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் பலர் இதுவரை பயன்படுத்தி குணமடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் அரசு சித்த மருத்துவ பிரிவில் தற்போது வாழை இலை குளியல் மற்றும் மண் குளியல் சிகிச்சை தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த சிகிச்சைகளை பவானி சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏழை, எளிய பொதுமக்கள் மற்றும் வெளியூரில் உள்ள நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகை தந்து இந்த சிகிச்சைகள் மூலம் பயன்பெற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    • லாட்டரி விற்பனை சீட்டு விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கிரு ஷ்ணம்பாளையம் சுற்றுவ ட்டார பகுதியில் லாட்டரி விற்பனை சீட்டு விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலி ன் பேரில் அங்கு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த வண்டியூரான் கோவில் தெருவை சேர்ந்த மனோகரன் மகன் முரளி (வயது 38), கிருஷ்ணாபாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்த பன்னீ ர்செல்வம் மகன் சிவகுமார் (540 மற்றும் சிவா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர்கள் வைத்தி ருந்த லாட்டரி சீட்டுகள், 2 மொபைல் போன்கள் மற்றும் ரூ.8 ஆயிரத்து 90 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதைப்போல் சத்தியமங்கலம் கரட்டூர் சாலை யில் லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த கரட்டூர் சுப்பிரமணியர் தெருவை சேர்ந்த கிருஷ்ணப்பகவுண்டர் மகன் பழனிச்சாமி (60) என்பவர் மீது சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நட த்தி வருகி ன்றனர்.

    மேலும் அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • தீபா அடிக்கடி வரும் தலைவலியால் அவதிபட்டு வந்தார்.
    • எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் குழந்தையம்மாள் வீதியை சேர்ந்த செந்தில் மகள் தீபா (21). இவரது பெற்றோர் இறந்து விட்டதால் தாத்தா மருதமுத்து, பாட்டி அங்கம்மாளுடன் வசித்து வந்தார். தீபா அடிக்கடி வரும் தலைவலியால் அவதிபட்டு வந்தார்.

    இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து ம் குணமாகததால் சம்பவத்தன்று இரவு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த தீபாவின் குடும்பத்தினர் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சை க்காக ஈரோடு அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்ப ட்டார். அப்போது டாக்டர்கள் பரிசோதித்து விட்டு தீபா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • பாலாலயம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.
    • புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி அடுத்து கோவில் புதூரில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கருத்திருமராயப் பெருமாள் எனும் ஸ்ரீ கரிவராஜ பெருமாள் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

    மேலும் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் விநாயகர் கருத்திருமராய பெருமாள் எனும் ஸ்ரீ கரிவரத வரதராஜ பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர், கிருஷ்ணர் பாமா ருக்மணி மற்றும் கோவில் கோபுரங்கள் ஆகியவை அத்தி மரத்தினால் உருவ சிலைகள் அமைத்து பாலாலயம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இதில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தாசர்களுக்கு அரிசி, பருப்பு, புளி, காய்கறிகள் உள்ளிட்டவை கொடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவில் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    மேலும் கோவில் திருப்பணி நடைபெற்று கொண்டி ருப்பதால் கோவிலுக்கு வரும் பொதுமக்கள் அவர்களால் முடிந்த நிதிகளை நன்கொடையாக வழங்கி வருகிறார்கள்.

    • சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • இதனால் அரைமணி நேரத்தில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

    மொடக்குறிச்சி:

    எழுமாத்தூர் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்து வரும் பயனாளிகளுக்கு கடந்த 7 வாரங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

    இதனால் பயனாளிகள் தங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் எனக்கோரி இந்திய மார்க்யூஸ்டு, கம்யூனி ஸ்டு கட்சியின் ெமாடக்குறிச்சி உறுப்பினர் தங்கவேல் தலைமையில் எழுமாத்தூர் பஸ் நிறுத்தத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை அறிந்த சம்பந்தப்பட்ட ஊராட்சியின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்த சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனால் அரைமணி நேரத்தில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

    கடந்த 7 வாரங்களாக மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை அரசு ஒதுக்காமல் உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டது என சம்பந்தப் பட்ட ஊராட்சியின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி இது குறித்து தெரிவித்தார்.

    • கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.1.90 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

    பெருந்துறை, அக். 8-

    பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

    பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5,519 மூட்டைகளில் 2,45,000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, ரூ.75.89-க்கும், அதிகபட்சமாக, ரூ.82.26-க்கும் விற்பனை ஆனது.

    2-ம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.45.35-க்கும், அதிகபட்சமாக ரூ.78.26க்கும் விற்பனையானது.

    மொத்தம் ரூ.1.90 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

    • வாழை சருகுகளை தீ வைத்ததால் மெயின் ரோடு முழுவதும் புகைமண்டலமாக இருந்தது.
    • வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி அடுத்து நல்லூர்-சத்திய மங்கலம் சாலையில் வாழை க்காய் பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் கேரளா மாநிலம் சென்று வாழைக்காய் தாறுகளை இறக்கி விட்டு வரும்போது நல்லூர் பகுதியில் சத்தியமங்கலம் சாலை மெயின் ரோட்டோரம் சில மாதங்களாகவே வாழை சருகுகளை கொட்டி தீ வைத்து விடுகின்றனர்.

    இது மேலும் அதிகரித்து வாழை சருகுகளை தீ வைத்ததால் அப்பகுதி மெயின் ரோடு முழுவதும் புகைமண்டலமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    மேலும் வாழை சருகுகளை தீவைத்து எரித்து அதில் வரும் புகை மண்டலம் ரோடு முழுவதும் பரவுவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிரே வரும் வாகனங்கள் ஒன்றும் தெரிவதில்லை.

    இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

    • நாள் வழிபாட்டை தொடர்ந்து அன்னம் பாலிப்பு நடைபெற்றது.
    • ஐம்பொன் சிலைகளுக்கு திருக்குட நீராட்டு நடைபெற்று சிறப்பு பூஜைகள் செய்து தீபாரணை காட்டப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி-சத்தியமங்கலம் சாலையில் உண்ணா முலையம்மை உடனமர் அண்ணா மலையார் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் அதிகாலை நிலை நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சியுடன் 63 நாயன்மார் களுக்கும் மற்றும் திருச்சிற்ரூ திருமூர்த்திகளுக்கு பால், தயிர், திருமஞ்சனம், இளநீர், மஞ்சள், திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு நாள் வழிபாட்டை தொடர்ந்து அன்னம் பாலிப்பு நடைபெற்றது.

    தொடர்ந்து வேள்வி பூஜை ஆரம்பமானது. மேலும் மதியம்12 அளவில் வேள்வி நிறையுற்று நால்வர் ஐம்பொன் சிலைகளுக்கு திருக்குட நீராட்டு நடைபெற்று சிறப்பு பூஜைகள் செய்து தீபாரணை காட்டப்பட்டது.

    இதை ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் நால்வர் ஐம்பொன் சிலைகள் சப்பரத்தில் அமைத்து கோலாட்டத்துடன் பக்தர்கள் முக்கிய வீதி வழியாக திருவீதி உலா வந்து கோவிலை அடைந்தனர்.

    • உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • 2 பேக்கரி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை பகுதியில் உள்ள பேக்கரி கடைகள், அசைவ உணவகங்கள் மற்றும் பழமுதிர் நிலையங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது இனிப்பு மற்றும் கார வகைகளில் தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாமல் விற்பனை செய்த 2 பேக்கரி கடைகளுக்கு தலா 1000 வீதம் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    பிறந்தநாள் கேக் தரம் குறைவு மற்றும் இனிப்பு, காரவகைகளில் தயாரிப்பு தேதி இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் பேக்கரி கடைகளில் உள்ள பிறந்தநாள் கேக்கில் அளவுக்கு அதிகமான கலர் சேர்க்கப்பட்டுள்ளதா? என்பதை பரிசோதனை செய்வதற்காகவும், மிச்சர் மற்றும் கார கடலையில் செயற்கை கலர் சேர்க்கப்ப ட்டுள்ளதா? என்பதை கண்டறிவதற்காகவும் உணவு மாதிரி சேகரிக்கப் பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

    மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்திய பழமுதிர் நிலையத்திற்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    அதேபோல் அசைவ உணவகங்களில் சில்லி சிக்கன், காலிபிளவர் சில்லி போன்றவற்றிற்கு செயற்கை வண்ணம் பயன்படுத்தக் கூடாது.

    சூடான உணவு பொருள்களை தடை செய்ய ப்பட்ட பிளாஸ்டிக் கவர், கேரி பேக் போன்றவற்றில் பார்சல் செய்து கொடுக்க கூடாது.

    துரித உணவு உணவு கடைகள், பேக்கரி மற்றும் டீக்கடைகளில் விற்பனை செய்யும் எண்ணெய் பலகாரங்கள் ஆன பஜ்ஜி, போண்டா மற்றும் மீன் சில்லி, சிக்கன் சில்லி வகைகளை நேரடியாக அச்சிட்ட பேப்பரில் வைத்து உண்பதற்கும், பார்சல் செய்தும் கொடுக்க கூடாது எனவும் கடைகாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அவ்வாறு பார்சல் செய்து கொடுக்கும் கடை களுக்கு அபராதம் விதிக்க ப்படும் என அறிவுறுத்த ப்பட்டது.

    உணவுப்பொருள் குறைகள் சம்பந்தமான புகாரை 94440 42322 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்.

    • காலை எழுந்து வந்து பார்த்த போது ஆடுகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் தனிப்படை அமைத்து நம்பியூர் மற்றும் கோபி போலீசார் ஆடு திருடர்களை தேடி வந்தனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கோசணம் பகுதியை சேர்ந்தவர் சாந்தாமணி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும் ஆடுகளை விற்பனை செய்தும் வருகிறார். தனது வீட்டின் முன் பகுதியில் ஆடுகளை கட்டி வைப்பது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வழக்கம் போல் தனது வீட்டின் முன்பு ஆடுகளை கட்டி வைத்து விட்டு இரவு தூங்கச் சென்றார். காலை எழுந்து வந்து பார்த்த போது ஆடுகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் தேடி பார்த்தும் ஆடுகள் குறித்து தகவல் இல்லை. ஆடுகளை திருடி சென்றது தெரிய வந்தது.

    இதேபோல் நம்பியூர் அருகே உள்ள சின்ன கோசணம் பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த ஆடுகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.

    இதுகுறித்து நம்பியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் தனிப்படை அமைத்து நம்பியூர் மற்றும் கோபி போலீசார் ஆடு திருடர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையல் கோபி பகுதியில் 3 வாலிபர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கவின் (19), சிறுவலூர் ரஞ்சித்குமார் (21), கரட்டடிபாளையம் ஹரி பிரசாத் (20) என்பதும், அவர்கள் தனியார் கல்லூரியில் என்ஜனீயரிங் படிக்கும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது.

    மேலும் அவர்கள் 3 பேர் ஆடுகளை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து அவர்கள் வந்த 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×